COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Friday, March 17, 2017

தலையங்கம்

போராட்டக் களங்களில் தமிழக மக்கள்
ஆளும் தகுதியை இழந்துவிட்ட மத்திய, மாநில ஆட்சியாளர்கள்

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஆளும் தகுதியை இழந்து விட்டார்கள் என்று சமீபத்திய தமிழ்நாடு மிகத் தெளிவாக ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் விவசாயிகள், மீனவர்கள், அவர்களுக்கு ஆதரவாக மாணவர், இளைஞர், பொது மக்கள், அறிவாளிப் பிரிவினர், கலைத்துறையினர் என தமிழ்நாட்டின் வீதிகளும் வெளிகளும் போராட்டக்காரர்களால் நிறைந்திருக்கின்றன. பலவீனமான மாநில அரசுக்கு எதிராக மட்டுமின்றி பலமான மத்திய அரசுக்கு எதிராகவும் வலுவாக, விடாப்பிடியாக தமிழக மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.
அய்ந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

பாஜக தந்திரங்களை 
முதலாளித்துவ எதிர்க்கட்சிகளால் சமாளிக்க முடியவில்லை

எஸ்.குமாரசாமி

மோடியும் பாஜகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. சங் பரிவார் ஆபத்து தீவிரம டைந்துள்ளது. சங்பரிவார் எதிர்ப்பு முதலாளித்துவ கட்சிகள், தாராளவாத சக்திகள் அனைவரும் பரந்த மிகப்பரந்த, அனைவரையும் உள்ள டக்கிய ஒரு முன்னணி கட்டியே, தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவற்றுக்கு எல்லாம் அப்பால், இன்றளவில் கைவசம் உள்ள தகவல்கள் அடிப்படையில், பார்த்த மாத்திரத்தில் தெரிவதை வைத்து, தேர்தல் முடிவுகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
பகத்சிங் நினைவு தின உறுதிமொழியேற்பு

பகத்சிங்,

உன்னுடைய 23ஆவது வயதில், நீ தூக்கிலேற்றப்பட்ட மார்ச் 23, 1931அய், நாங்கள் நினைவு கூர்கிறோம். உன்னோடு தூக்கிலேற்றப்பட்ட தோழர்கள் ராஜகுரு, சுகதேவையும் நாங்கள் நினைவு கூர்கிறோம்.
நீங்கள் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, வெள்ளையர் அடிமைப்படுத்தியதற்கு எதிராக, நீதியும் சமத்துவமும் நிறைந்த சோசலிச சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் உங்கள் வாழ்வைத் தியாகம் செய்தீர்கள்.
இன்றைய இந்தியாவும் தமிழ்நாடும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் அய்க்கிய அமெரிக்காவுக்கும் சொந்தமானதாக மாற்றப்பட்டுள்ளன.
புரட்சிகர இளைஞர் கழகம்
மாநில அலுவலகம்
1/10, 11ஆவது தெரு, கருணாநிதி நகர், அயனாவரம், சென்னை - 23. 2674 3384
மின்னஞ்சல்: amudhanguru@gmail.com

பெறுநர்

உயர்திரு முதன்மைச் செயலர் அவர்கள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
தமிழ்நாடு அரசு,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை 600 009

உயர்திரு தொழிலாளர் ஆணையர் அவர்கள்
தமிழ்நாடு அரசு,
டிஎம்எஸ் வளாகம்,
சென்னை 600 006

அம்மையீர்/அய்யா,

பொருள்: எங்கள் அமைப்பின் மார்ச் 23 பகத்சிங் நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு கோரிக்கைகளில் தங்கள் துறை தொடர்பானவற்றை நிறைவேற்ற கோருதல்.
சோசலிச உலகத்தின் பொதுத் தோற்றம் 
சோவியத் குடியரசின் உருவில்
எம்முன் எழுந்து வருகிறது

ஊழல் பிடித்த முதலாளித்துவ பத்திரிகைகள், எமது புரட்சி செய்கிற ஒவ்வொரு தவறையும் பற்றி, உலக முழுதிற்கும் ஓலமிடட்டும். எமது தவறுகளைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. புரட்சி தொடங்கி விட்டது என்பதால் மக்கள் முனிவர்களாகி விடவில்லை. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு, மிதித்துத் துவைக்கப்பட்டு, வறுமை, கொடுமை, அறியாமையினால் பலவந்தமாகப் பீடிக்கப்பட்டிருந்த உழைப்பாளி வர்க்கங்கள் ஒரு புரட்சியை நடத்தும்போது தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. மேலும் நான் முன்பே ஒரு முறை சுட்டிக் காட்டியிருந்தது போன்று முதலாளித்துவ சமுதாயம் என்ற பிணத்தை, ஒரு சவப்பெட்டியில் ஆணியறைந்து புதைத்துவிட முடியாது.
முன்னேறி வரும் மூலதனத்தை
நெடுவாசலில் தடுத்து நிறுத்துவோம்!
விவசாயத்தை, விவசாயத் தொழிலாளர்களை,
உழைக்கும் விவசாயிகளை பாதுகாப்போம்!
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்!

திருபெரும்புதூர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

முன்னேறி வரும் மூலதனத்தை நெடுவாசலில் தடுத்து நிறுத்துவோம், விவசாயத்தை, விவசாயத் தொழிலாளர்களை, உழைக்கும் விவசாயிகளை பாதுகாப்போம், ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என முழக்கமிட்டு மார்ச் 2 அன்று திருபெரும்புதூரில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மாருதி தொழிலாளர்கள் மீது
கல்லூரி ஆசிரியர் கே.என்.சாய்பாபா மீது
பாய்ந்தன கொடும் தண்டனைகள்

மார்ச் 7 அன்று டெல்லி பல்கலைக் கழக ஆசிரியர் கே.என்.சாய்பாபாவுக்கு மகாராஷ்டிராவின் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120-பி படி ஆயுள் தண்டனை வழங்கியது. கே.என்.சாய்பாபா சக்கர நாற்காலியில் நகர்பவர். அவர் உடல் இயக்கத்தில் 90% முடங்கியுள்ளது.
தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்டில்
பெங்களூருவில் சாக்கடை அடைப்பை அகற்றும்போது
மூன்று தொழிலாளர் பலி

மார்ச் 2017. ஆந்திரா சென்ற மூவரை பெங்களூரு திரும்ப அழைத்தது. ஒருவர் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இரண்டு பேர் ஆந்திராவின் சிறிகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பேரும் அனந்தராஜா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற ஒப்பந்ததாரர் மூலம் ராம்கி இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் அடைப்பு அகற்றும் வேலையைச் செய்தவர்கள். இந்த நிறுவனம், பெங்களூரு குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் வேலைகளைப் பார்க்கிறது.
மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களால்
முற்றுகையிடப்பட்டுள்ள கிராமப்புற வறிய மக்கள்

அமிர்தலிங்கம்

ஜன்தன், ஆதார், மொபைல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நாட்டின் வறிய மக்களுக்கு வளர்ச்சி உருவாக்குவது மோடி அரசின் மாபெரும் சாதனை என்று பாஜக, ஆர்எஸ்எஸ் பாசிச கூட்டம் பெருமை பேசுகிறது. ஜன்தன் கணக்குகள் கோடிக்கணக்கில் துவக்கப்பட்டதாலேயே நாட்டின் வறிய மக்கள் வளர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று கூட பேசுகிறது அந்தக் கூட்டம். நலத்திட்ட பயன்கள் உரியவர்களுக்கு சரியாக சென்று சேர இந்த மூன்றும் அவசியம் என்கிறது.
கோவையில் மார்ச் 8 பொதுக் கூட்டம்

ரஷ்யப் புரட்சியின் நூறாண்டு
நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு
பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு

ரஷ்யப் புரட்சியின் நூறாண்டு, நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு, பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு ஆகியவற்றை அனுசரிக்கும் விதம் மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று கோவையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

Search