COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Friday, March 31, 2017

கொள்ளை கும்பல் ஆட்சியின் நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்தும்
அனைத்தும் தழுவிய குற்றமய அலட்சியம்

பயிரிழப்பால் உயிரிழந்த தமிழக விவசாயிகளின் உறவினர் நீதி கோரி, நிவாரணம் கோரி 17 நாட்களுக்கும் மேலாக டில்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மன அழுத்தம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மனதோடு பேசிய மோடி, தங்கள் மன அழுத்தத்தை மட்டுமின்றி, துன்பங்களை, பிரச்சனைகளை பொதுவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த விவசாயிகள் பற்றி அக்கறை காட்டவில்லை.
இந்தச் சுற்றில் இந்துத்துவாவுக்கு வெற்றி
இறுதிச் சுற்றில் மக்கள் போராட்ட அரசியலே வெற்றி பெறும்

சங் பரிவார், ஆர்எஸ்எஸ், பாஜக ஆபத்து பற்றி கூடுதலாக, மிகையாக, பீதி பரப்பப்படுவதாக அச்சு, மின்னணு ஊடகங்களில் பலர் சொன்னார்கள். யோகி ஆதித்யநாத், சாக்ஷி மகராஜ் ஆகியோரெல்லாம் பித்துப் பிடித்த ஓரஞ்சார சக்திகள், பாஜக அவர்களை சகித்துக் கொள்கிறது, பாஜக ஆட்சி என்றால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என நம்மை நம்பச் சொன்னார்கள்.
மாருதி தொழிலாளர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கேட்டது நியாயமா?

எஸ்.குமாரசாமி

கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் மார்ச் 17 - 18 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டம் நடக்கும்போதே, மார்ச் 17 அன்று, 13 மாருதி தொழிலாளர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு அரசு தரப்பு வாதாடியது தெரிய வந்தது. மார்ச் 18 அன்று மாலை அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதும் 18 பேருக்கு வேறு வேறு தண்டனைகள் வழங்கப்பட்டதும் தெரிந்தது. மார்ச் 20 அன்று பிரிக்காலின் இரண்டு தொழிலாளர்கள் ஆயுள் தண்டனைக்கெதிராக, உச்சநீதிமன்றம் சென்று நீதிமன்ற நடவடிக்கைகளைக் கவனிப்பதும், மேல்முறையீட்டிற்கு ஏற்பாடு செய்வதும், அவசியமாய் இருந்தது.
கட்சியின் 48ஆவது நிறுவன தினத்தில் மத்திய கமிட்டியின் அறைகூவல்

உத்தரபிரதேசத்தில் தேர்தல் போரில் பாஜக வெற்றி பெற்றுள்ளது
இந்தியா எதிர்த்து எழ வேண்டும்!
ஜனநாயகத்துக்கான போரில் வெல்ல வேண்டும்!

2017ன் முதல் காலாண்டு நிறைவுறுகிற போது, நாம் ஒரு சவாலான சூழலை சந்திக்கிறோம். அய்க்கிய அமெரிக்காவில் ஆட்சியில் உள்ள ட்ரம்ப் நிர்வாகம்  கட்டுக்கடங்காத கொடுங்கோன்மை, இனவெறி, குடியேறியவர்களுக்கு எதிரான வெறி ஆகியவற்றை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசுலாமியர்கள் அய்க்கிய அமெரிக்கா வுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி புதிருக்கு விடை கிடைத்தது
புதிய துறை அதிவேகமாக விரிவடைகிறது

பிப்ரவரி 28 அன்று மத்திய புள்ளிவிவர அமைப்பு 2017 அக்டோபர் - டிசம்பர் காலத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய உத்தேச மதிப்பீட்டை முன்வைத்தது. ஆனால், ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்த 86% பணத்தை செல்லாது என அறிவித்த காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% அதிகரித்தது என்று, அதாவது, பணமதிப்பகற்றும் நடவடிக்கை தேசிய வருமானத்தில் எந்த விளைவும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லியிருப்பது நம்பத் தகுந்ததாக இல்லை.
உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெல்லற்கரியது

....பழைய முதலாளித்துவ - ஜனநாயக அரசியல் அமைப்புச் சட்டங்கள் சம்பிரதாயமான சமத்துவம், கூட்டம் கூடும் உரிமை பற்றிச் சொல் வன்மையுடன் அளந்தன; ஆனால் எமது பாட்டாளி வர்க்கத்தின், விவசாயிகளின் சோவியத் அரசியல் அமைப்புச் சட்டம் சம்பிரதாய சமத்துவம் என்ற போலித்தனத்தை அகற்றி எறிந்துவிட்டது.
மூலதனத்துக்கு எதிரான போரில் அர்ப்பணித்துக் கொள்ள பகத்சிங் நினைவு நாளில் உறுதியேற்பு

திருபெரும்புதூரில் தொழிலாளர் - இளைஞர் பேரணி

வெள்ளையர்களுக்கு எதிராக களமிறங்கிய பகத் சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 அன்று கொள்ளையர்களுக்கு எதிராக புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர்கள் அணிதிரண்டார்கள்.
முதலாளிகள் மனம் மகிழ தொழிலாளர்களுக்கு தண்டனையா?
மாருதி, பிரிக்கால் தொழிலாளர்களை விடுதலை செய்!

தொழிலாளர்கள் சங்கம் அமைத்தது அவ்வளவு பெரிய குற்றமா? முதலாளிகள், தங்களுக்குச் சாதகமான அரசாங்கம் இருக்கும்போது, தங்கள் கட்டளைகளை நிறைவேற்றுகிற அரசாங்கங்கள் இருக்கும்போது, மேலும் மேலும் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள சங்கம் அமைக்கிறார்கள். தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது மட்டும் எப்படி குற்றமாகிவிடும். இதுவரையிலும் மாருதி தொழிலாளர்கள் சங்கம்
அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான (இஸ்லாமிய பயங்கரவாத எதிர்ப்பு போர், அந்த போரில் இந்தியா இளநிலக் கூட்டாளியாக இணைந்தது, அரச பயங்கரவாதம், இந்துத்துவா எழுச்சி என்ற பின்னணியிலும், அவற்றின் பதில்வினையாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் எழுந்துள்ளது. இந்த விஷச் சுழலேணியும் இந்தச் சூழலும், இஸ்லாமியர்கள் மத்தியில் இருந்து எழுந்த பகுத்தறிவுவாதி  பாரூக்கின் படுகொலைக்கு காரணமானது. பாரூக்கின் படுகொலையை வன்மையாக கண்டனம் செய்கிற அதே நேரம் அதற்கான பின்னணியையும் கணக்கில் கொள்கிறோம். இங்கு கார்கில் போரில் பலியானவரின் மகளான குர்மெஹர் கவுர், தன் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை போர்தான் கொன்றது என்று சொன்னதை நினைவில் கொள்வோம்.
தொழில் தடைக்கு எதிராக வழக்கறிஞர்கள் கருத்தரங்கம்

நீதித் துறையில் ஜனநாயகம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 25 வழக்கறிஞர்கள் 3 ஆண்டுகள் முதல் வாழ்நாள் வரை என தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டு அகில இந்திய பார் கவுன்சிலால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கறிஞர் சட்ட விதி 34(1)ல் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் நோக்கத்தோடு திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் எழுந்த போராட்டத்தின் விளைவாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது
இகக(மாலெ) கோவை மாவட்ட மூன்றாவது மாநாடு
பிரிக்கால் தொழிலாளர் இரண்டு பேரின் விடுதலை கோரும் இயக்கத்தை தீவிரப்படுத்துவோம்!

இகக(மாலெ) கோவை மாவட்ட மூன்றாவது மாநாடு மார்ச் 26 அன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் தாமோதரன் ஏற்றினார். தியாகிக ளுக்கான அஞ்சலி தீர்மானத்தை தோழர் வேல்முருகன் முன்வைத்தார். மாநாட்டை நடத்தும் கமிட்டியின் வேலையறிக்கையை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் முன்வைத்தார். பிரதிநிதிகளில் 18 பேர் தங்களுடைய கருத்துக்களை, ஆலோசனைகளை முன்வைத்து விவாதித்தனர்.

Friday, March 17, 2017

தலையங்கம்

போராட்டக் களங்களில் தமிழக மக்கள்
ஆளும் தகுதியை இழந்துவிட்ட மத்திய, மாநில ஆட்சியாளர்கள்

மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஆளும் தகுதியை இழந்து விட்டார்கள் என்று சமீபத்திய தமிழ்நாடு மிகத் தெளிவாக ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் விவசாயிகள், மீனவர்கள், அவர்களுக்கு ஆதரவாக மாணவர், இளைஞர், பொது மக்கள், அறிவாளிப் பிரிவினர், கலைத்துறையினர் என தமிழ்நாட்டின் வீதிகளும் வெளிகளும் போராட்டக்காரர்களால் நிறைந்திருக்கின்றன. பலவீனமான மாநில அரசுக்கு எதிராக மட்டுமின்றி பலமான மத்திய அரசுக்கு எதிராகவும் வலுவாக, விடாப்பிடியாக தமிழக மக்கள் குரல் எழுப்புகிறார்கள்.
அய்ந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

பாஜக தந்திரங்களை 
முதலாளித்துவ எதிர்க்கட்சிகளால் சமாளிக்க முடியவில்லை

எஸ்.குமாரசாமி

மோடியும் பாஜகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. சங் பரிவார் ஆபத்து தீவிரம டைந்துள்ளது. சங்பரிவார் எதிர்ப்பு முதலாளித்துவ கட்சிகள், தாராளவாத சக்திகள் அனைவரும் பரந்த மிகப்பரந்த, அனைவரையும் உள்ள டக்கிய ஒரு முன்னணி கட்டியே, தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவற்றுக்கு எல்லாம் அப்பால், இன்றளவில் கைவசம் உள்ள தகவல்கள் அடிப்படையில், பார்த்த மாத்திரத்தில் தெரிவதை வைத்து, தேர்தல் முடிவுகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
பகத்சிங் நினைவு தின உறுதிமொழியேற்பு

பகத்சிங்,

உன்னுடைய 23ஆவது வயதில், நீ தூக்கிலேற்றப்பட்ட மார்ச் 23, 1931அய், நாங்கள் நினைவு கூர்கிறோம். உன்னோடு தூக்கிலேற்றப்பட்ட தோழர்கள் ராஜகுரு, சுகதேவையும் நாங்கள் நினைவு கூர்கிறோம்.
நீங்கள் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, வெள்ளையர் அடிமைப்படுத்தியதற்கு எதிராக, நீதியும் சமத்துவமும் நிறைந்த சோசலிச சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் உங்கள் வாழ்வைத் தியாகம் செய்தீர்கள்.
இன்றைய இந்தியாவும் தமிழ்நாடும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் அய்க்கிய அமெரிக்காவுக்கும் சொந்தமானதாக மாற்றப்பட்டுள்ளன.
புரட்சிகர இளைஞர் கழகம்
மாநில அலுவலகம்
1/10, 11ஆவது தெரு, கருணாநிதி நகர், அயனாவரம், சென்னை - 23. 2674 3384
மின்னஞ்சல்: amudhanguru@gmail.com

பெறுநர்

உயர்திரு முதன்மைச் செயலர் அவர்கள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
தமிழ்நாடு அரசு,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை 600 009

உயர்திரு தொழிலாளர் ஆணையர் அவர்கள்
தமிழ்நாடு அரசு,
டிஎம்எஸ் வளாகம்,
சென்னை 600 006

அம்மையீர்/அய்யா,

பொருள்: எங்கள் அமைப்பின் மார்ச் 23 பகத்சிங் நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு கோரிக்கைகளில் தங்கள் துறை தொடர்பானவற்றை நிறைவேற்ற கோருதல்.
சோசலிச உலகத்தின் பொதுத் தோற்றம் 
சோவியத் குடியரசின் உருவில்
எம்முன் எழுந்து வருகிறது

ஊழல் பிடித்த முதலாளித்துவ பத்திரிகைகள், எமது புரட்சி செய்கிற ஒவ்வொரு தவறையும் பற்றி, உலக முழுதிற்கும் ஓலமிடட்டும். எமது தவறுகளைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. புரட்சி தொடங்கி விட்டது என்பதால் மக்கள் முனிவர்களாகி விடவில்லை. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு, மிதித்துத் துவைக்கப்பட்டு, வறுமை, கொடுமை, அறியாமையினால் பலவந்தமாகப் பீடிக்கப்பட்டிருந்த உழைப்பாளி வர்க்கங்கள் ஒரு புரட்சியை நடத்தும்போது தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. மேலும் நான் முன்பே ஒரு முறை சுட்டிக் காட்டியிருந்தது போன்று முதலாளித்துவ சமுதாயம் என்ற பிணத்தை, ஒரு சவப்பெட்டியில் ஆணியறைந்து புதைத்துவிட முடியாது.
முன்னேறி வரும் மூலதனத்தை
நெடுவாசலில் தடுத்து நிறுத்துவோம்!
விவசாயத்தை, விவசாயத் தொழிலாளர்களை,
உழைக்கும் விவசாயிகளை பாதுகாப்போம்!
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்!

திருபெரும்புதூர் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

முன்னேறி வரும் மூலதனத்தை நெடுவாசலில் தடுத்து நிறுத்துவோம், விவசாயத்தை, விவசாயத் தொழிலாளர்களை, உழைக்கும் விவசாயிகளை பாதுகாப்போம், ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என முழக்கமிட்டு மார்ச் 2 அன்று திருபெரும்புதூரில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மாருதி தொழிலாளர்கள் மீது
கல்லூரி ஆசிரியர் கே.என்.சாய்பாபா மீது
பாய்ந்தன கொடும் தண்டனைகள்

மார்ச் 7 அன்று டெல்லி பல்கலைக் கழக ஆசிரியர் கே.என்.சாய்பாபாவுக்கு மகாராஷ்டிராவின் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120-பி படி ஆயுள் தண்டனை வழங்கியது. கே.என்.சாய்பாபா சக்கர நாற்காலியில் நகர்பவர். அவர் உடல் இயக்கத்தில் 90% முடங்கியுள்ளது.
தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்டில்
பெங்களூருவில் சாக்கடை அடைப்பை அகற்றும்போது
மூன்று தொழிலாளர் பலி

மார்ச் 2017. ஆந்திரா சென்ற மூவரை பெங்களூரு திரும்ப அழைத்தது. ஒருவர் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இரண்டு பேர் ஆந்திராவின் சிறிகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று பேரும் அனந்தராஜா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற ஒப்பந்ததாரர் மூலம் ராம்கி இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் அடைப்பு அகற்றும் வேலையைச் செய்தவர்கள். இந்த நிறுவனம், பெங்களூரு குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் வேலைகளைப் பார்க்கிறது.
மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களால்
முற்றுகையிடப்பட்டுள்ள கிராமப்புற வறிய மக்கள்

அமிர்தலிங்கம்

ஜன்தன், ஆதார், மொபைல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நாட்டின் வறிய மக்களுக்கு வளர்ச்சி உருவாக்குவது மோடி அரசின் மாபெரும் சாதனை என்று பாஜக, ஆர்எஸ்எஸ் பாசிச கூட்டம் பெருமை பேசுகிறது. ஜன்தன் கணக்குகள் கோடிக்கணக்கில் துவக்கப்பட்டதாலேயே நாட்டின் வறிய மக்கள் வளர்ச்சி அடைந்துவிட்டார்கள் என்று கூட பேசுகிறது அந்தக் கூட்டம். நலத்திட்ட பயன்கள் உரியவர்களுக்கு சரியாக சென்று சேர இந்த மூன்றும் அவசியம் என்கிறது.
கோவையில் மார்ச் 8 பொதுக் கூட்டம்

ரஷ்யப் புரட்சியின் நூறாண்டு
நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு
பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு

ரஷ்யப் புரட்சியின் நூறாண்டு, நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு, பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு ஆகியவற்றை அனுசரிக்கும் விதம் மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று கோவையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

Search