COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, October 18, 2017

தமிழக அரசே, டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்து!

டெங்குக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 12 அன்று இகக மாலெவும் புரட்சிர இளைஞர் கழகமும் கரம்பக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத் தின. தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட வேண்டும், சாக்கடைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனை உடனடியாக திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், வரத்து வாரிகள் தூர்வாரப்பட்டு வரத்து வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் கரம்பக்குடி பேருந்து நிலையத்தை உடனடியாக செப்பனிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

கொசுக்களிடம் இருந்து கூட 
மக்களை பாதுகாக்க முடியாத அரசு

நீர்நிலைகளைத் தேடி வரும் வனவிலங்குகளால் தமிழக மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. வருவதைப் பார்த்ததால் ஓடி ஒளிந்துகொள்ளக் கூட வாய்ப்பு இருந்தது. ஓடித் தப்பித்துக் கொள்ள முடியாதவர்கள் இறந்துபட்டார்கள். அந்த விலங்குகளும் மனித வேட்டைக்காக ஊருக்குள் வரவில்லை. குடிநீர் தேடி வந்தன. இன்று வெறும் டெங்கு கொசுக்கள் தமிழக மக்களை வேட்டையாடுகின்றன. எங்கிருந்து எப்போது தாக்குகின்றன, தாக்கினவா இல்லையா என்று கூட தெரியாமல் மக்கள் உயிர் விடுகின்றனர்.
முதலாளித்துவமும் சோசலிசமும்

எஸ்.குமாரசாமி

(சோவியத் புரட்சியின் நூறாவது ஆண்டை அனுசரிக்கும் விதம் மாலெ தீப்பொறியின் நவம்பர் முதல் இதழிலிருந்து தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. 21ஆம் நூற்றாண்டு சோசலிச பொருளாதாரமும் அரசியலும் எதிர்கொள்ளும் சவால்கள், நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றி, இந்த இதழிலும் அடுத்த ஓரிரு இதழ்களிலும் வெளிவரும் கட்டுரைகளுடன் இந்தத் தொடர் நிறைவு பெறும்).

முதலாளித்துவம் என்றால் சந்தைக்கான உற்பத்தி, லாபத்திற்கான உற்பத்தி, சோசலிசம் என்றால் மக்கள் தேவைக்கான உற்பத்தி, முதலாளித்துவத்துவம் என்றால் உற்பத்தியில் அராஜகம், மிகை உற்பத்தி, வேலையின்மை, ஓட்டாண்டிமயமாதல், சமச்சீரற்ற வளர்ச்சி,
பணியாளர் முறைப்படுத்துதல் குழு

தமிழக அரசு தமிழக மக்களை இன்னுமொரு சுற்று வஞ்சிக்கத் தயாராகிறது

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்வு தந்தபோது எதிர்ப்பு தெரிவித்தது போல், சிலர் எதிர்ப்பு தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டின் 12 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஊழலில் திளைப்பதுபோல் இந்த எதிர்ப்பு சித்தரிக்கப் பார்க்கிறது. இந்த எதிர்ப்பு ஆளும்வர்க்க கருத்தையே பலப்படுத்தும்.
கேளாச் செவியர்களின் செவிட்டில் அறைவிட்ட செவிலியர்கள் போராட்டம்

டெங்கு, தமிழ்நாட்டைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. விஜயபாஸ்கருக்கு விழி பிதுங்கியது. எது பற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பழனிச்சாமியே, டெங்கு சவால் கடுமையானதாக உள்ளது என்றும், அதனைச் சமாளிக்க பொதுமக்களின், தொண்டு நிறுவனங்களின் உதவி, அரசுக்கு தேவை என்றும் சொல்கிறார்
ஜெய் அமித் ஷாவின் தங்க ஸ்பரிசம்

(தி வயர் இணைய தள பத்திரிகையில் ரோஹிணி சிங் எழுதியுள்ள இந்தக் கட்டுரையை மாலெ தீப்பொறி வெளியிடுகிறது. இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்களை தி வயர் பத்திரிகை மறுஉறுதி செய்கிறது. இந்த கட்டுரையில் உள்ள விவரங்கள் தொடர்பாக ஜெய் ஷா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை அவதூறானவை எனவும் சொல்லப்பட்டுள்ளது. உண்மை எது என்று வாசகர்களே முடிவு செய்துகொள்ளலாம்).

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித்பாய் ஷாவுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் வருமானம், நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட, அவரது தந்தை கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட ஆண்டுக்குப் பின், கம்பெனி ரிஜிஸ்ட்ராரிடம் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் படி, 16,000 மடங்கு அதிகரித்துள்ளது.
வியட்நாமிலிருந்து ஆவிகள்

(இர்பான் ஹுசைன் எழுதி அக்டோபர் 15 அன்று டெக்கான் கிரானிக்கல் நாளேட்டில் வெளியான கட்டுரை. தமிழில் தேசிகன்)

முரண்பாடு ஏதுமற்ற விசயத்தின் மீது நடத்தப்பட்ட வியட்நாம் யுத்தத்தில்  எண்ணில் அடங்கா உயிர்கள் மாய்ந்து போன கொடூர சம்பவத்தை என் சமகால வாசகர்களால் நினைவு கூர முடியும்.
ஜார்க்கண்டின் இடதுசாரி தலைவர்களில் ஒருவரான தோழர் எ.கே.ராய் பாஜக குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டுள்ள நேரத்தில் கூட அவரை பாஜகவினர் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இகக மாலெ இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது. தோழர் எ.கே.ராயை தாக்கியவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடி தர மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்த உறுதியேற்கிறது.

Wednesday, October 4, 2017

நவோதயா பள்ளிகள் வேண்டாம்!
இந்தித் திணிப்பு வேண்டாம்!

தமிழ்நாட்டில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில அரசு, நவோதயா பள்ளிகளை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை சொல்லியுள்ளது.
நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்பும், நீட், மாநில உரிமைகளுக்கு சமூக நீதிக்கு எதிரானது, நீட், இந்தித் திணிப்புக்கு இடம் தரும் என்பதால், புரட்சிகர இளைஞர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், அகில இந்திய மாணவர் கழகம் இணைந்து செப்டம்பர் 20 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தின.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
மாநில உரிமைகளைப் பறிக்கும்
மோடி அரசின் நடவடிக்கைகள்

அரசியல் சாசனத்தின் பகுதி 21, தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள் என்று தலைப்பிடப்படுகிறது. ராணுவம், அயலுறவு, தொலைதொடர்பு தவிர, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் ஜம்மு காஷ்மீர் தனது மாநில நலன்களுக்கு ஏற்ப கொள்கைகளை, செயல்பாடுகளை வரையறுத்துக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் பிரிவு 370 இந்தப் பகுதியில் வருகிறது.
சோவியத் சோசலிச முகாம் ஏன் சரிந்தது?

எஸ்.குமாரசாமி

ஏற்றத்தாழ்வுகள் அகற்றுவது, வேலையின்மை, விலைஉயர்வுக்கு முடிவு கட்டுவது, மொழி தேசிய பால் இன சமத்துவம் நிறுவுவது, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தில் ஊன்றி நிற்பது, உண்மையான மக்களாட்சி தருவது என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திய, முதலாளித்துவத்தை விட எல்லா விதங்களிலும் சோசலிசம் மேலானது என சில பத்தாண்டுகளுக்கு நிறுவிய, சோசலிஸ்ட் முகாம், கத்தியின்றி ரத்தமின்றி, ஒரு துப்பாக்கி தோட்டா கூட வெடிக்காமல், வீழ்ந்தது.
இந்தியாவில் தஞ்சம் புகுந்த ரோஹிங்கியாக்கள் வெளியேற்றப்படக் கூடாது

சிறு வயதிலேயே (16 வயது நிறையும் முன்) சட்டவிரோதமாக அய்க்கிய அமெரிக்காவில் குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற் றுவதை தடுக்க ஒபாமா அதிபராக இருந்த போது டிபர்ட் ஆக்ஷன் பார் சில்ரன் அரைவல் (டாகா) என்ற ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழக இளைஞர், தொழிலாளர், மாணவர் மத்தியில் 
புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள்

உறுப்பினர் சேர்ப்பு, நீட் எதிர்ப்பு போராட்டங்கள், என புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் விடாப்பிடியான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் முன்னணி தோழர்கள் சிலரின் வேலை அனுபவங்கள் இங்கு தரப்படுகின்றன.
25 தொழிலாளர்களுக்கு ஒரு வேளை உணவு செலவை 
ஒரு முறை வெட்டி லாபம் சேர்க்கும் ஹுண்டாய் நிறுவனம்

அந்த 25 பேருக்கு 19 முதல் 20 வயது.மெக்கானிகல் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பு முடித்தவர்கள். திருபெரும்புதூர் ஹுண்டாயில் அரசு பயிற்சி யாளர்களாக (கவர்ன்மென்ட் அப்ரண்டிஸ்) வேலைக்குச் சேர்ந்தார்கள்.

Wednesday, August 30, 2017

நீட் திணிப்பு

மோடி, பழனிச்சாமி அரசுகள்
தமிழக மக்களை வஞ்சித்துவிட்டன

பலவீனமான அரசு, மக்கள் போராட்டங்களை முன்செலுத்த உகந்தது என்பதை மக்கள் சார்பு அரசியலுக்காக நிற்பவர்கள் வலியுறுத்துவதுபோல், மக்கள் விரோத சக்திகளும் அந்த நிலையை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றன. மக்கள் விரோத சக்திகள் ஆளும் நிலையிலும் இருக்கும்போது மக்கள் விரோத நடவடிக்கைகளை வேகவேகமாக திணிக்கின்றன
அஇஅதிமுக கொள்ளை ஒடுக்குமுறை கும்பல்களிடம் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு விடுதலை வேண்டும்!

எஸ்.குமாரசாமி

பழனிச்சாமி பதவி விலகட்டும்
சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கட்டும்
மக்கள் பிரச்சனைகள் முன்னுக்கு வரட்டும்

ஜெயலலிதா, சசிகலாவின் கணக்கிட முடியாத, கணக்கில் வராத ஆயிரம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கட்டி ஆள்வதாகக் கருதப்படும் டிடிவி தினகரன், ‘தியாகத்துக்கும் துரோகத்துக்கும்இடையிலான போர் நடப்பதாகக் கூசாமல் சொல்கிறார். அவர் தரப்பினர்பழனிச்சாமிமுதலமைச்சராகத் தொடர வேண்டாம் என்றுதான் கேட்கின்றனர்.
மோடி, மோடி எடுபிடி பழனிச்சாமி அரசாங்கங்களுக்கு எதிரான
தொழிலாளர் போராட்டங்களை வளர்த்தெடுப்போம்!

(ஆகஸ்ட் 20 அன்று சென்னையில் நடந்த ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுக் குழு கூட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரை. சில சேர்க்கைகளுடன்)

தமிழ்நாடு ஏன் மாறுபட்டு இருக்கிறது?
2009 செப்டம்பர் 22 அன்று பிரிக்கால் நிறுவன மனித வளத்துறை அதிகாரிதுரதிர்ஷ் டவசமாய் மரணமடைய, நம் இயக்கம் கொலை/கொலைச் சதி வழக்குகளைச் சந்தித்தது. குற்றம் சுமத்தப்பட்ட 27 பேரில் பலர் முன் ஜாமீன் பெறமுடிந்தது. மற்ற அனைவரும் 4 மாதங்கள் முடிவில் ஜாமீன் பெற்றோம். 2015 டிசம்பர் 3, 2017 ஜனவரி என இரு சுற்றுக்களில் 25 பேர் விடுதலையாகி உள்ளோம்.
தமிழ்நாட்டின் அனைத்தும் தழுவிய
பொது விநியோகத்துக்கு முடிவு கட்டும்
அரசாணை 89 ரத்து செய்யப்பட வேண்டும்!

தமிழ்நாட்டின் பற்றியெரியும் போராட்டங்களை நடத்தும் மக்களுடன் சமாதானம் பேச பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் போதாது என்று நிர்மலா சீதாராமனும் தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிறார். ஜிஎஸ்டி குழப்பங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நிர்மலா சீதாராமன் வருகிறார்
ஹடியா வழக்கில்
தீர்ப்புக்கள் திருத்தப்பட வேண்டும்

நம் நாட்டின் சட்டப்படி திருமண வயதை எட்டி விட்ட ஒரு பெண் தன் விருப்பப்படி செய்துகொண்ட ஒரு திருமணத்தை, நாட்டில் நீதி பரிபாலனத்தை பராமரிக்க வேண்டிய ஒரு நீதிமன்றம், ஓர் உயர்நீதிமன்றம், செல்லாததாக்கி அந்தப் பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பிவிட்டது.
வெள்ளையனே வெளியேறு இயக்கமும்
சங் பரிவாரும்

கேள்வி: எப்படி எப்போது யாரால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு அழைப்பு தரப்பட்டது?
பதில்: காங்கிரஸ் இயக்கம், தனது, 08.08.1942 செயற்குழுவில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தது. இயக்கம், ஆகஸ்ட் 9 அன்று, 1942ஆம் ஆண்டு துவங்கியது.
அம்பத்தூர் மாநகராட்சி அலுவலகத்தை
கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் முற்றுகை

கொசுவை ஒழிக்க முடியாத அரசாங்கங்கள் நமது மத்திய மாநில அரசாங்கங்கள். மலேரியா, சிக்குன்குன்யா, டெங்கு என சாமான்ய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பல அரசு மருத்துவமனைகளில் என்ன காய்ச்சல் என்றே வெளியில் சொல்லாமல் மர்மக் காய்ச்சல் என்று சொல்லி ஏதோ சிகிச்சை அளித்து உயிரிழப்புக்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கொசுக்களால் வியாதி பரவுவதைத் தடுக்க எல்லா நடவடிக்கைகளும் எடுப்பதாக சுகாதார துறை அமைச்சர்,

Wednesday, August 16, 2017

கோரக்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு
யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்

ஆகஸ்ட் 14, நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

புதுதில்லி, ஆகஸ்ட் 12
கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 63 குழந்தைகள் உயிரிழந்திருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவுறும்போது, அரசு மருத்துவமனைகள், வறியவர் வீட்டு குழந்தைகளின் மரணக் கூடங்களாக இருப்பது அவமானம்.
தமிழக இளைஞர்களிடம் இருந்து
சற்று எட்டியிருப்பது பாஜகவினருக்கு நல்லது

தமிழ்நாட்டின் இளைஞர்கள் தயாராகிவிட்டார்கள், இங்கு தாமரை மலரப் போகிறது என்று பாஜகவின் இளைஞர் அணி பேரணியில் பாஜக தலைவர்கள் சொல்லிக்கொண்டனர். அதற்காக மற்ற மாநிலங்களில் நடப்பதுபோலவே சாம பேத தான தண்டம் எல்லாம் பாஜக கையில் எடுக்கும். பாஜக அப்படி கனவு காண்பதற்கு, துரதிர்ஷ்டவசமாக ஆளும் கட்சி இடம் உருவாக்கித் தந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்காக பாஜக காண்கிற கனவை தமிழ்நாட்டின் இளைஞர்களும் காண்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம் கிடைக்கும்
அமித் ஷா அடி வாங்கினார்
அஸ்ஸாம் அரசு அடி வாங்கியது
மோடி கூட்டம் மேலும் மேலும் அம்பலமாகிறது

எஸ்.குமாரசாமி

குஜராத் சட்டப் பேரவையில் 182 உறுப்பினர்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி 2012 தேர்தலில் 116 இடங்களை வென்றது. 2007ல் 117 இடங்கள் வென்றது. அப்போதெல்லாம் மோடி, தந்திரமாகவும், சதிகள் பல செய்தும், ‘இந்து இதய சிம்மாசனத்தில்போய் அமர்ந்து கொண்டார். 2012ல் காங்கிரஸ் 57 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
மோடியின் ஆட்சியில் கார்ப்பரேட் தொலைதொடர்பு நிறுவனங்களை கடனில் இருந்து காப்பாற்ற மீட்பு முடிப்பா?

டிசம்பர் 2016 நிலவரப்படி நாட்டின் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ.4.85 லட்சம் கோடி கடனில் உள்ளன. இந்த நிறுவனங்கள் இந்திய அரசுக்கு அலைக்கற்றை பாக்கி ரூ.3 லட்சம் கோடி தர வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ரூ.8 லட்சம் கோடியை விழுங்கியிருக்கிறார்கள்.கழுத்தில் நிற்கிறதா, சீரணமாகி விட்டதா என்றுதான் இனி பார்க்க வேண்டும்.
சோவியத் யூனியனில்
திரிபுவாதம் தலைதூக்கியது

முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்லும் கால கட்டம் ஒரு வரலாற்று சகாப்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த சகாப்தம் நிறைவுறும் வரை, சுரண்டுபவர்கள், தவிர்க்க முடியாமல், மீள்வதற்கான நம்பிக்கையை போற்றி வளர்ப்பார்கள்; இந்த நம்பிக்கை மீள்வதற்கான முயற்சிகளாக மாறும்.
அரசாங்கங்களின் ஆசிகளோடு
கொலைகள் செய்யும் கார்ப்பரேட்மயம்

உமா கேசுக்கு 24 வயது.ஒடிஷாவைச் சேர்ந்தவர். கொல்கத்தாவின் பிரபலமான, மேல் நடுத்தர பிரிவு நோயாளிகள் எப்போதும் நிறைந்திருக்கிற எஎம்ஆர்அய் (அட்வான்ஸ்ட் மெடிகேர் அன்டு ரிசர்ச் இன்ஸ்டிடியுட்) என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக செவிலியர்.
கடந்த சில நாட்களாக கடுமையான தலை வலி இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மருத்துவமனையின் கண்சிகிச்சை பிரிவில் பரிசோதனை செய்து கொண்டு ஆகஸ்ட் 9, புதன் அன்று கண்ணாடியும் வாங்கினார்.
மாதவிடாய் கால விடுப்பு: பெண்ணுடல் பற்றிய கூருணர்வில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம்

மும்பையைச் சேர்ந்த கல்ச்சர் மிஷின் என்ற நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் மாத விடாய் நாட்களின் முதல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்து ஆணையிட்டது.
நாடு முழுவதும் பரபரப்பான விவாதத்தை எழுப்பிய இந்த நடவடிக்கையை தொடர்ந்து கேரள மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு அதுபோல் விடுப்பு வேண்டும் என்று கேரள காங்கிரஸ்காரர்கள் கோரிக்கை எழுப்ப கேரள முதலமைச்சர் பினரயி விஜயனும் அது பற்றி ஆலோசிப்பதாகச் சொல்லியுள்ளார்.
நினைத்தாலே இனிக்கும்

எஸ்கே

தாராபுரம் பேருந்து நிலையத்தில் கையில் காசில்லாமல் இருந்த ஒரு வாலிபர், பசிக்கு ஒரு பன்னை ஒரு கடையில் இருந்து எடுத்து சாப்பிட்டுவிட்டார்.
நினைத்தாலே கொதிக்கும்

எஸ்கே

2005 அய்தராபாத் வெடிகுண்டு வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆகஸ்டு 10, 2017 அன்று விடுவிக்கப்பட்டனர். பயங்கரவாத வழக்குகள் நம் நாட்டில் பலரைக் கடுமையாக பாதிக்கின்றன. பயங்கரவாத வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகி வெளியே வந்த பல குற்ற வழக்குகளில், இதுவும் ஒன்று. தவறே இழைக்காமல் ஒரு மதத்தையோ அல்லது ஒரு சாதியையோ சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் மட்டும், சிறை வைக்கப்பட்ட அவலம், இங்கு பல முறை நிகழ்ந்துள்ளது.
தீவிரவாதம் பற்றிய இரண்டு செய்திகள்

ஆகஸ்ட் 14 அன்று ஒரே நாளில், ஒரே பத்திரிகையில் (தினகரன்) தீவிரவாதம் பற்றி அடுத்தடுத்து இரண்டு செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு செய்தி, ‘மத்திய அரசு நடவடிக்கையைத் தாங்க முடியாமல் காஷ்மீரை விட்டு தீவிரவாதிகள் ஓடுகின்றனர்’‘அருண் ஜெட்லி பெருமிதம்எனப் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தது. அதே பக்கத்தில், பக்கத்திலேயே ஒரு செய்தி, ‘தீவிரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர் எண்ணிக்கை அதிகரிப்பு’‘7 மாதங்களில் 70 பேர் இணைந்தனர்எனச் சொல்கிறது

Search