COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Sunday, March 1, 2015

எம்ஆர்எஃப் தொழிலாளர்
போராட்டத்துக்கு ஆதரவாக


ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்ட தேதியில் இருந்து புதிய ஒப்பந்தம் அமலாகும்  நடைமுறையால், சென்னை திருவெற்றியூரில் இயங்கும் எம்ஆர்எஃப் தொழிலாளர்கள் பல ஆண்டுகள் ஊதிய உயர்வு பலன்களை இழந்துள்ளனர். எனவே,  பழைய ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிந்த தேதியிலிருந்து, புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 2 முதல் சங்க அலுவலகத்தில் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்திலும் தொழிலாளர் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.

எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை ஆதரித்து அனைத்து கட்சிகள், மற்றும் தொழிற்சங்கங்களின் ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 21 அன்று நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்க நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சாமிநாதன் கண்டன உரையாற்றினார். எம்ஆர்எஃப் தொழிலாளர் போராட்டத்துக்கு பிரிக்கால் தொழிலாளர்கள் நிதியளித்தனர். ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

வனக் கல்லூரி மாணவர் 
போராட்டத்துக்கு ஆதரவாக

வனவர் பணிகளில் நேரடி நியமனத்துக்கான தேர்வை ரத்து செய்து வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல், வனச்சரகர் பணிக்கான அரசாணை 118அய் மீண்டும் அமல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுபாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஜனவரி 27 முதல் கால வரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஏஅய்சிசிடியு சார்பாக தோழர்கள் பிப்ரவரி 9 அன்று நேரில் சென்று போராடுகிற மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ச்சியாக பிப்ரவரி 19 அன்று இகக (மாலெ) சார்பாக கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் லூயிஸ் மாணவர்களை சந்தித்தனர். இவர்களுடன் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் குருசாமி, பிரிக்கால் முன்னணி தோழர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரிக்கால் தொழிலாளர்கள் சார்பாக ரூ.5,000 நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

நில அபகரிப்புச் சட்டத்தை கைவிடு!
பிப்ரவரி 23 நாடு தழுவிய இயக்கம்

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை கைவிட வலியுறுத்தி நாடு முழுக்க பிப்ரவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் மகாசபையும் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் கண்டன இயக்கம் நடத்தின.

பிப்ரவரி 23 அன்று விழுப்புரத்தில், தோழர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சுசீலா, என்.கணேசன், ஜி.ஏழுமலை, கண்ணம்மாள், திருஞான சம்பந்தம், வீரன், கஜேந்திரன், சந்திரபாபு, ஆர்.கந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எம்.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.

மயிலாடுதுறையில் பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவிதொச மாநிலத் தலைவர் தோழர் டிகேஎஸ்.ஜனார்தனன், வீரச்செல்வன், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் காவிரி தனபாலன், மாலெ கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினார்.

திண்டுக்கல்லில் 23.02.2015 அன்று அகில இந்திய விவசாயிகள் மகா சபை அமைப்பாளர் தோழர் குழந்தைவேல்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் திண்டுக்கல், மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் ஜெயவீரன், மதிவாணன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்  தோழர் முருகேசன், அசோகன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மணிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பிப்ரவரி 23 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் தோழர் விஜயன்  தலைமையில் அவிதொச ஆர்ப்பாட்டம் நடத்தியது. தோழர்கள் ரெங்கசாமி, கலைசெல்வன், முருகேசன், ராஜாங்கம், அவிதொச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வளத்தான் கண்டன உரையாற்றினர். இதே நாளில் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை அமைப்பாளர் தோழர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் ராஜாங்கம், ஜோதிவேல், கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சேலத்தில் 23.02.2015 அன்று அகில இந்திய விவசாயிகள் மகா சபை  அமைப்பாளர் தோழர் அய்யந்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம், கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் சந்திரமோகன் உரையாற்றினர்.

Search