COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Wednesday, August 14, 2013

மாலெ தீப்பொறி 2013, ஆகஸ்ட் 16-31, தொகுதி 12, இதழ் 2

பிரிக்கால்: 150க்கு 50
07.08.2013 அன்று கோவையில் உள்ள முருகப்பா குழுத்தின் அங்கமான சாந்தி கியர்ஸ் சங்க அறிமுக கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அது முடிந்தவுடன் பிரிக்கால் சங்க அலுவலகத்தில் தங்குவதற்காக மதியம் சென்றோம்.
பிரிக்காலில் 2007ல் சங்கம் ஆரம்பித்தவுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பழிவாங்கப் பட்டு வேலை இழந்த தொழிலாளர்களில் 150 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது. அப்படி முடிவு செய்யப்பட்டவர்களில் முதல் பகுதி 50 தொழிலாளர்கள், ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் இருந்து 13 மாதங்கள் கழித்து, வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொழிலாளர்கள் தயாரான பின்னணியில், ‘பின்னணி தந்த நிர்ப்பந்தத்தில், 02.08.2013 அன்று பணிக்கு எடுத்து கொள்ளப் பட்டார்கள். பணிக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட 50 தொழிலாளர்கள், 07.08.2013 அன்று மாலை பணி முடிந்தவுடன் பிரிக்கால் சங்க அலுவலகத்தில் கூடினர். தோழர் எஸ்.கே.வுடன் நானும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
அவர்களை வேலைக்கு மீண்டும் எடுத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. நான் பார்த்தவரை அந்த 50 தோழர்களும் இளைஞர்கள். அவர்கள் முகத்தில் காணக் கிடைக்காத ஒன்றைக் கண்ட மகிழ்ச்சி, விவரிக்க முடியாத சந்தோஷம் தெரிந்தது. அவர்களில் ஒரு சிலர் பேசினார்கள்:
வேலை பறிக்கப்பட்டு 7 வருடங்கள் ஓடிவிட்டன. இது நடக்கும் என்று நாங்கள் நினைத்து பார்க்கவே இல்லை.
7 வருடங்களுக்கு முன்னால் தொழிலாளர்களை இழிவாக பேசியவர்கள், அதிகார தொனியில் பேசியவர்கள், அவமதித்தவர்கள் 7 வருடங்கள் கழித்து மீண்டும் பணியில் சேர்ந்த பின், இப்போது மிகவும் வேலைக்கு வந்துவிட்டீர்களா? எந்த இடத்தில் வேலை, ஏதாவது பிரச்சனை இருக்கிறதா, நான் ஏதாவது உதவ வேண்டுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள்.
சங்கத்தை கவுரவமாக அணுகுவது, மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நாம் பிரிக்காலில்தான் வேலை செய்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. பின்புதான், இல்லை, இல்லை இது கனவல்ல நிஜம் என்று உணர்ந்தோம். போராடுகின்ற தொழிலாளர்களும் நல்ல வழிகாட்டுகின்ற தலைமையும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்ற நம்பிக்கை வருகிறது.
போராட்டத்தின்போது வேலைக்கு வந்த யூனிட் தொழிலாளர்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது என்று பேச்சுவார்த்தைகளினூடே நிர்வாகம் கேட்டபோது, அவர்களையும் வேலைக்கு எடுங்கள் என்று சங்கம் சொன்னது. இன்று சங்கம் பக்கம் நின்ற 50 பேரை முதல் தவணையாக வேலைக்கு எடுத்துக் கொண்ட நிர்வாகம், போராட்டம் நடந்துகொண்டிருந்த போது வேலைக்குச் சென்ற நிர்வாகம் பக்கம் நின்ற 32 பேரை வேலைக்கு எடுத்துள்ளது.
சங்கத்தின் போராட்டத்தால்நிரந்தர வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றால் அதை சங்கம் என்றும் வரவேற்கும்.
கே.பழனிவேல்
****************
பொய்கள்... மகாபொய்கள்... பிரதமருக்குக் கடிதங்கள்...
கடந்த கருணாநிதி ஆட்சியில் எழுதப்பட்டதை விட எனது ஆட்சியில்தான் பிரதமருக்கு கூடுதல் கடிதங்கள் எழுதப் பட்டன என்று ஜெயலலிதா சொல்லி தமிழ்நாட்டின் சட்டமன்ற மேசைகள் பலத்த ஒலியுடன் தட்டப்படும் காட்சியை தமிழக மக்கள் காண வாய்ப்பு ஏற்படலாம். இப்போது, தலித் கிறித்துவர்களை அட்டவணை சாதிகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். நடந்துகொண்டிருக்கிற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதில் இனியும் தாமதம் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். தலித் கிறித்துவர்கள் மத்திய அரசின் நலத்திட்டங்களில் இருந்து வெளியே நிறுத்தப்படுகி றார்கள் என்றும் மிகவும் முக்கியமாக கல்வி நிறுவனங்களிலும் அரசு வேலை வாய்ப்புக்களிலும் தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் பயனை அவர்கள் பெற முடியாமல் போகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் தலித் கிறித்துவர்கள் மீது தான் கொண்டுள்ள அக்கறையின் அளவை வார்த்தைகளால் அளக்கிறார். இந்து அட்டவணை சாதியினருக்கும் கிறித்துவர்களாக மாறியவர்க ளுக்கும் இடையில் உள்ள சமனற்ற வளர்ச்சி சமூகப் பதட் டத்தை அதிகரித்துள்ளது என்றும் சிறுபான்மை சமூத்தினர் தாம் அந்நியப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்வது ஆழமடைந்துள்ளது என்றும் சொல்கிறார். 1995லேயே இதுபோன்ற ஒரு கடிதத்தை நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது எழுதியுள்ளதாகவும் தலித் கிறித்துவர்களை அட்டவணை சாதிகள் பட்டியலில் ஏன் இணைக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்திலேயே ஜெயல லிதா சுட்டிக்காட்டியிருந்த அடிப்படைகளை ஆணையம் ஏற்றுக்கொண்டதாகவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் சாதி மதங்களுக்கு அப்பாற் பட்டு அனைத்து தலித் மக்களுக்கும் சென்று சேரும்விதம் தம் அரசாலான அனைத்தையும் செய்திருப்பதாக ஜெயலலிதா சொல்கிறார்.
ஜெயலலிதா குறிப்பிடுகிற விசயங்களைப் பார்த்தால் அவர் தமிழ்நாட்டைப் பற்றித்தான் சொல்கிறாரா என்று அய்யம் எழுகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தலித் மக்கள் நலன் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்று பரமக்குடி, தருமபுரி, மரக்காணம் சம்பவங்கள் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள வறிய மக்களின் பெரும்பகுதியினர் தலித் மக்களே. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி என்று இது வரை கண்ணில் பார்க்காதவர்கள் அவர்கள். சிறுதாவூர் நிலம் உட்பட தங்களுக்குச் சேர வேண்டிய பஞ்சமி நிலங்களை யாரோ ஆக்கி ரமித்துக் கொண்டிருக்க குந்த இடமில்லாமல் தவிப்பவர்கள் தமிழ்நாட்டு தலித் மக்கள். செருப்பு போடாதே, காதலிக்காதே, கோவி லுக்குள் வராதே என்று இன்னும் கூட தமிழ் நாட்டில் தலித் மக்களை தீண்டாமைத் தீ சுடுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுக ளில் 2012ல் நடந்த தலித் மக்கள் மீதான கொடுமைச் சம்பவங்கள் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. 2012 ஜெயலலி தாவின் பொற்கால ஆட்சி நடந்த ஆண்டு. ஜெயலலிதா எந்த மாநிலத்து தலித் மக்களை, தலித் கிறித்துவர்களைப் பற்றி பேசுகிறார்?
தற்போது விவாதிக்கப்படும் ஜெயலலிதா வின் கடிதத்தில் தலித் கிறித்துவர்கள் பற்றி, அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவது பற்றி பேசுகிறார். இது இன் னும் வியப்பு தருகிறது. தமிழக அரசு போட்ட அரசாணை 92 அமலாகவில்லை என்று அகில இந்திய மாணவர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு மிகக் குறிப்பாக, தலித் மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை அவர்களுக்கு சென்று சேராதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறது. தமிழ்நாட்டின் தலித் இந்து மற்றும் கிறித்துவ மாணவர்களுக்கு இந்தத் திட்டம் இருப்பதே தெரியவில்லை. ஓராண்டு சாதனை, ஈராண்டு சாதனைக்கெல்லாம் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து விளம்பரம் வெளியிட்ட தமிழக அரசாங்கமும் அதிகாரிக ளும் மத்திய அரசின் இந்தத் திட்டம் பற்றி, அது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பற்றி மாணவர்களுக்கு, மக்களுக்கு தெரியப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
11.09.2012 தேதியிட்ட அரசாணை (நிலை) எண் 92 அதன் சுருக்கம் என்று பின்வருமாறு சொல்கிறது: ‘ஆதிதிராவிடர் நலம் - சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நலன் உட்பட) அனைத்துவிதமான படிப்புக்க ளுக்கும் இலவச/கட்டண இருக்கையில் பயிலும் ஆதி திராவிடர்/பழங்குடியினர்/மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ/மாணவியர்களுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக் கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ண யிக்கும் கல்விக் கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - வெளியிடப்படுகிறது.
அரசாணைப்படி தலித் மாணவர்களுக்கு, பள்ளிப் படிப்புக்கு பிந்தைய எல்லாவிதமான படிப்புக்களுக்கும், அரசு ஒதுக்கீட்டில் அல்லது கல்லூரி ஒதுக்கீட்டில் என எப்படிச் சேர்ந்தா லும் சுயநிதிக் கல்லூரிகள் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது. தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக் ககங்கள், சுயநிதி கல்வி நிறுவனங்களிடமிருந்து தலித் மாணவர்கள் பற்றிய விவரங்கள் பெற்று அவர்களுக்கான கட்டணத் தொகையை ஆதி திராவிட நலத்துறையிடம் கேட்டுப் பெற்று கல்லூரிகளுக்குத் தர வேண்டும். திட்டத்தில் பயன்பெற மாணவர்களின் பெற்றோர்/பாதுகா வலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
திட்டத்தில், தலித் மாணவர்கள் கல்லூ ரிக்குச் சென்று சேர்ந்து படிக்க வேண்டும். மற்ற வற்றை அரசு நிர்வாகம் கவனித்துக் கொள்ள வேண்டும். இது தலித் மக்கள் நலன் காக்கும் திட்டம் என்று சொல்லப்படுகிறது. இது தலித் கிறித்துவர் நலனையும் உள்ளடக்கியது.
ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிடு கிற தலித் கிறித்துவர்களுக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பான இந்த அரசாணை, அது சொல்கிற திட்டம் பொருந்தும். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காதது தமிழ்நாட்டின் பல துன்பங்களுக்கும் காரணம் என்று எப்போதும் எங்கேயும் சொல்கிற ஜெயலலிதா, மத்திய அரசு, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு என நிதி ஒதுக்கியிருக்கிற திட்டத்தை அமல்படுத்த அக் கறை காட்டவில்லை.
மத்திய அரசின் திட்டம் ஒரு வகையில் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்லாவில் மக்கள் வரிப்பணத்தைப் போடுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கட்டளையிடுவதற்கு பதிலாக, அவற்றின் லாப வெறிக்கு தீனி போடு கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் அரசியல் சாசனத்துக்கு ஏற்ப நடந்துகொள்ள அரசாங்கம் செலவு செய்கிறது. ஒரு விதத்தில் கல்வி தனி யார்மயத்தை உறுதிப்படுத்துகிறது. இப்படிப் பட்ட திட்டத்தைக் கூட, அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதோ ஒரு வகையில், ஏதோ ஓரள வுக்கு பாதுகாப்பு தரும்போது, அதைக் கூட அமலாக்கத் தயாராக இல்லாததுதான் தமிழக அரசாங்கம். இருக்கிற திட்டத்தை அமல்படுத் தாதவர் இல்லாத ஒன்றைக் கேட்கிறார். அதுவும் தலித் கிறித்துவர் நலன் காக்க தான் தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டியதுதான் பாக்கி என்றும் சொல்லி, தான் இழைக்கிற துரோகத்தை மறைக்கப் பார்க்கிறார்.
இந்து அட்டவணை சாதியினருக்கும் கிறித்துவர்களாக மாறியவர்களுக்கும் இடையில் உள்ள சமனற்ற வளர்ச்சி சமூகப் பதட்டத்தை அதிகரித்துள்ளது என்றும் சிறுபான்மை சமூத்தி னர் தாம் அந்நியப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்வது ஆழமடைந்துள்ளது என்றும் கடிதத் தில் சரியாகவே குறிப்பிடுகிற ஜெயலலிதா, அதற்கு தமிழக அரசு எப்படி பங்களிக்கிறது என்பதைச் சொல்லாமல், தனது தமிழக அரசு, தலித் கிறித்துவ மாணவர்களின் கல்வியை ஓரளவு உறுதி செய்யக் கூடிய உதவித் தொகை விசயத்தில் கூட இழைக்கிற துரோகத்துக்கும் மத்திய அரசை காரணமாக்கப் பார்க்கிறார்.
சிறிலங்கா தமிழர் நலன் காக்க ஜெயல லிதா பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டி ருந்தபோது, தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்க ளில் உள்ள சிறிலங்கா தமிழர்கள் தமிழ்நாட்டில் கவுரவமான வாழ்க்கை கிடைக்காததால் கள்ளத் தோணியில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்று கைது செய்யப்பட்டதும் சிறை யில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கிற சிறி லங்கா தமிழ் அகதிகள் கவுரவமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பட்டினிப் போராட்டம் நடத்தியதும் செய்திகளாயின. தனது அதிகார எல்லைக்குள் இருக்கிற தமிழகத்தில் உள்ள சிறிலங்கா தமிழர்களின் கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்யத் தவறிய ஜெய லலிதா சட்டமன்றத்தில் தனிஈழத்துக்காக தீர் மானம் போடுவது வரை சென்றார்.
தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படை யினரின் தாக்குதலுக்கு ஆளாவது, தமிழக மீன வர்கள் சிறிலங்கா சிறைகளில் வாடுவது, தமி ழக மீனவர் உரிமை ஆகியவை பற்றி கடிதம் எழுதிக்கொண்டிருந்தபோது, தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நாகப்பட்டினம் மீனவர்கள், நாங்கள் படகுகளில் வெள்ளைக் கொடியுடன் சென்று சிறிலங்காவில் புகலிடம் கேட்கப் போகிறோம் என்கிறார்கள்.
மின்கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை எல்லாம் உயரத்துக்குப் போய், அரிசியும், காய்கறிகளும் எண்ணெய்யும் பருப்பும் மாமிச உணவுகளும் தமிழக மக்களுக்கு கையில் பிடிபடாமல் போனபோதுதான் டீசல் விலை உயர்வு கூடாது என்று பிரதமருக்கு ஜெயல லிதா கடிதம் எழுதினார். கூடன்குளத்தில் அணு உலை வேண்டாம் என்ற மக்கள் போராட்டம் உச்சத்தில் இருந்தபோதுதான் மின்சாரம் வேண்டும் என கடிதம் எழுதினார்.
ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசைக் காரணம் சொல்வதும் கடிதம் எழுதுவதும் நாடகம், பொய், ஏமாற்று என்பதை ஒரு பக்கம் மக்கள் போராட்டங்களும் மறுபக்கம் ஜெயலலிதாவின் கடிதங்களும் காட்டுகின்றன. அதாவது ஜெயலலிதா எந்தப் பிரச்சனை பற்றி பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறாரோ, அந்தப் பிரச்சனையில் தமிழக மக்களுக்கு அவர் உடனடி துரோகம் இழைத்துக் கொண்டிருக் கிறார் என்று இனி தமிழக மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். கமிசன் போட்டு ஒரு பிரச்சனைக்கு சமாதி கட்டுவதுபோல், கடிதம் எழுதினாலும் சமாதிதான் என்று முடிவுக்கு வந்து விடலாம்.
நாற்பது கணக்குகளுக்கும், இளமைப் பருவம் முழுவதையும் பயிற்சியாளர்கள் என்ற போர்வையில் கடுமையான உழைப்புச் சுரண்ட லுக்கு தாரை வார்த்துவிடும் தமிழகத்தின் லட்சக் கணக்கான தொழிலாளர்களுக்கும் நிச்சயம் சம் பந்தம் உண்டு. அவர்களும் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லி தமிழ்நாட்டின் முதல மைச்சரிடம் கேட்கிறார்கள்.
என்னதான் நாடகம் என்றாலும் அந்த ஒரு பிரச்சனையில் மட்டும் ஜெயலலிதா கடிதம் எழுத மாட்டார். அய்ந்து ஆண்டுகளாக குடிய ரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையாணைகள் திருத்த மசோதா 47/2008ல் உடனடியாக ஒப்புதல் கையொப்பமிடுகள் என எழுதவே மாட்டார். அவர் மூலதன விசுவாசி. நவதாராளவாதக் கொள்கைக்குச் சொந்தக்காரர். அப்படி கடிதம் எழுதுவது உள்நாட்டு, பன் னாட்டு தொழில் நிறுவனங்களை அதிருப்தி யுறச் செய்யும். அவர்கள் பயிற்சியாளர் என்ற பெயரில், தமிழ்நாட்டின் மனித வளத்தை கொள்ளையடிப்பது ஒப்பீட்டளவில் கேள்விக் குள்ளாகும். பிரதமருக்கு எழுதும் கடிதங்கள், கருணாநிதியுடன் நடத்தும் அறிக்கைப் போரும் ஜெயலலிதாவை காலத்துக்கும் காப்பாற்றாது. உழைக்கும் மக்களின் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும்.
****************
தமிழ்நாட்டில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம்
முதலாளித்துவம் வென்றுவிட்டது சோச லிசத்தின் கதையும், (வர்க்கப் போராட்டத் தின்) வரலாறும் முடிந்துவிட்டது என்ற வெற்றி வாதக் கூச்சல்கள் இப்போது முனகல்களாகி விட்டன. அய்க்கிய அமெரிக்காவில் நடந்த வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம், பிரான்ஸ் ஸ்பெயின் கீரிஸ் என அய்ரோப்பா எங்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான முதலாளித்துவத் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் இயக்கங்கள், முதலாளித்துவம் சந்திக்கும் நெருக்கடியை வெளிப்படுத்துகின்றன. 99% எதிர் 1% என்ற கேள்வி, முதலாளித்துவம் வேண்டாம் சோசலிசம் வேண்டும் என்ற முழக்கம், நிகழ்ச்சிநிரலில் இடம் பிடிக்க வெகு காலம் ஆகாது எனப் புலப்படுத்துகிறது.
தொழிலாளர் வர்க்க இயக்கம், அமைப் பாக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட் டங்கள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் ஆகிவிட்டன எனவும், மாருதி போராட்டம் தொழிற்சாலைக்கு உள்ளும் வெளியும் சிறைக் குள் அடைக்கப்பட்விட்டது எனவும், இனி எப்போதாவது எங்கேயாவது ஏதாவது போராட்டம் தப்பித் தவறி விதி விலக்காக நடந்தாலே பெரிய விசயம் எனவும் முதலாளித் துவச் சிந்தனையாளர்கள் கொக்கரிக்கின்றனர்.
அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர் அரங்கம்
இந்தியாவில் உழைக்கும் மக்களில், அமைப்பாக்கப்பட்ட துறை 5% பேரைத்தான், 3 கோடி பேரைத்தான் பணியில் அமர்த்தி உள்ளது. ஆனால் சங்கமாதலின் அளவு, போராட்டங்களின் அனுபவம், அவற்றின் போக்கில் பெற்ற உரிமைகள் போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்தியத் தொழி லாளர் வர்க்கத்தின் கருவாக அமைப்பாக்கப் பட்ட தொழிலாளர்களே உள்ளனர்.
தனியார், பொதுத்துறை, அரசுத்துறை ஆகியவற்றில் பெரும்பான்மை தொழிலாளர்க ளின் நம்பிக்கையைப் பெற்ற சங்கங்களோடு பேச மறுப்பது, சட்டவிரோதமாகவும் மிகக் குறைந்த கூலி மிக மோசமான பணி நிலைமை களில் ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர் களை ரெகுலர் உற்பத்தியில் ஈடுபடுத்துவது, ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங், ஓய்வூதியம் மற்றும் நிலுவையில் உள்ள உரிமைகளைப் பறிப்பது வெட்டிச் சுருக்குவது ஆகியவையே முக்கியப் பிரச்சனைகளாக முன்வந்துள்ளன.
தொழிலாளர்கள் அடங்கி ஒடுங்கிவிட்டார்களா?
எதிர்மறைகளின் அய்க்கியமும் போராட் டமும் என்ற இயங்கியல் விதி மானுட வாழ்க்கை நெடுக நீக்கமற நிறைந்துள்ளது. கூலி உழைப்பும் மூலதனமும் எதிர்மறைகள். பொரு ளுற்பத்தியில் ஈடுபடும்போது, இந்த எதிர் மறைகளுக்கிடையில் ஒற்றுமை நிலவுகிறது. ஆனால் உழைப்பு உருவாக்கும் மதிப்பில், உழைப்பு சக்திக்கு எவ்வளவு மூலதனத்துக்கு எவ்வளவு என்ற விசயத்தில் போராட்டம் நிலவு கிறது. சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் பயன் களைத் தனிஉடைமை அபகரிக்கும் வரை போராட்டம் தொடரும். எதிர்மறைகளின் அய்க் கியம் தற்காலிகமானது; நிபந்தனைபூர்வமா னது. ஆனால் எதிர்மறைகளுக்கு இடையிலான போராட்டம் நிரந்தரமானது. நிபந்தனையற்றது.
வாழ்வின் இந்த இயங்கியல் விதி அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களுக்குப் பொருந்தாமல் போகுமா?
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். கம்யூனிஸ்ட் புரட்சியாளர், கவிஞர் சரோஜ் தத்தா, மரத்தில் ஒரு காய் பழுப்பது மரம் பழுப்பதாகும் என்றார். தமிழ் நாட்டில் என்எல்சியில் நடைபெற்ற போராட் டம், பிரிக்காலில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத் தயாரிப்புக்கள் போன்றவை சில செய்திகள் சொல்கின்றன.
என்எல்சி தொழிலாளர் போராட்டம்
ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டங்களி லிலேயே, குறிப்பிடத்தக்க, முக்கியத்துவம் வாய்ந்தது என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டமே. பல ஆயிரம் பேர் நிரந்தரம் ஆயினர். நிரந்தரம் அடைவார்கள். ஆனால் ஒரு துயரம் மட்டும் தொடர்கிறது. நிரந்தரத் தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர் மத்தி யில் வலுவான பொருளுள்ள செயலூக்கமான ஒற்றுமை ஏற்படவில்லை. சில லட்சம் கோடி களை ஒவ்வோர் ஆண்டும் பெருமுதலாளி களுக்கு மான்யமாகத் தரும் மத்திய அரசு, கையில் பணம் இல்லை அதனால் என்எல்சியில் உள்ள மத்திய அரசு பங்குகளை விற்கிறேன் என்றது. சர்வதேச நிதிச் சூதாடிகள், இந்திய அரசை, தமது தடையற்ற முதலீட்டிற்கு நிதி சூதாட்டத்திற்கு எல்லா கதவுகளும் திறக்கப் பட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் அரசு முதலீடு அகற்றப்பட வேண்டும் என ஆணையிட்டனர். பால்கோ நிறுவன விவகாரத் திலேயே உச்சநீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என மறுத்து விட்டது. அப்படியிருந்தபோதும் மத்திய அரசின் முதலீடகற்றும் முடிவிற்கு எதிராக என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
ஜெயலலிதா அரசின் 144 தடை, உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் தொடர விதித்த தடை போன்றவை தாண்டி தொழிலா ளர்கள் போராட்டம் தொடர்ந்தது. பெரும் தொழில் குழுமங்கள் வின் - வின் இரு தரப்பினரும் வெற்றி பெறும் வழி என்று பேசிப் பேசியே தொழிலாளர்களை நாசமாக்கு வார்கள். இன்று மன்மோகன் ஜெயலலிதா இரு வரும் சேர்ந்து வின்வின் நாடகமாடியுள்ளனர். இறுதியில் மத்திய அரசின் கொள்கை முடிவு, முதலீடகற்றும் கொள்கை முடிவு அமலானது. அரசியல் நாடகங்கள் தாண்டி தொழிலாளர் களின் போராட்ட உறுதி நிரூபிக்கப்பட்டது.
போர்க்கோலம் பூண்ட பிரிக்கால் தொழிலாளர்கள்
கடுமையான சூழல், தற்காப்புப் போராட் டங்களின் காலம் என வேறு வேறு காரணங் கள் சொல்லி பலரும் தற்காப்புக் கண்ணோட் டத்தைப் பரப்புகின்றனர். பிரிக்கால் நிர்வாகம் பிரிக்கால் தொழிலாளர்களைச் சீண்டிக் கொண்டே இருந்தது. வேலைக்கு எடுக்க வேண்டிய 100 தொழிலாளர்களை வேலைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்தியது. அரசும் காவல் துறையும் எந்தப் போராட்டத்தையும் அனும திக்காது என்பதால் சங்கம் போராட முன் வராது என நிர்வாகம் தப்புக் கணக்கு போட் டது. போராட்ட வாள் உறையில் போடப்பட் டுள்ளதே தவிர வீசி எறியப்படவில்லை என்பது நிரூபணமானது.
150 பேரை வேலைக்கு எடுக்க வைக்கும் போராட்டம், ஒரு பெரிய இயக்கமாக வியூகம் அமைத்து நடத்தப்பட்டது. வேலை நிறுத்தத் தயாரிப்பு ஆலைவாயில்களில், ஆலய வாசல் களில், குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற் றன. முதலமைச்சருக்கு அஞ்சலட்டைகள் அனுப்பப்பட்டன. மக்கள் மத்தியில் 25,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டபோதே, வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிக ளும் கையொப்பமிட்டனர். மக்கள் ஆதரவு அகழி தாண்டி போராட்டக் கோட்டைக்குள் எதிரி நுழைய முடியாது என்ற நிலை உருவானது.
வேலை நிறுத்தத் தயாரிப்புக்கு அக்கம் பக்கமாக புரட்சிகர அரசியல் பணிகள் கட்சி கட்டுதல் பணிகள் நடைபெற்றன. இவை ஒன்றிற்கு ஒன்று எதிராக நிறுத்தப்படவில்லை. இவை ஒன்றிற்கு ஒன்று வலு சேர்த்தன.
வேலை நிறுத்தப் பொதுப் பேரவை நடந்த இடத்திலேயே, அனைத்து தொழிற்சங்கங்க ளும் பங்கு பெற்ற மாருதி தொழிலாளிக்கு ஒருமைப்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது. ÷லை 18 மாருதி தொழிலாளிக்கு ஒருமைப் பாடு தெரிவிக்கும் அட்டை அணிந்தே பிரிக்கால் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர். என்எல்சி போராட்டத்திற்கு ஒருமைப்பாடு, பெண் தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம், டாஸ்மாக் கடை கள் மூடும் நடவடிக்கைகள் அக்கம்பக்கமாய் நடந்தன.
கட்சி கல்வி வகுப்புகள் மூன்று, கட்சி மாவட்டக் குழு கூட்டம் ஒன்று போராட்டப் பாசறையிலேயே நடத்தப்பட்டன.
உத்தரவாதங்கள் தராமல், போராட்டப் பாதையைத் தேர்வு செய்யும் தொழிலாளர் வர்க்க உணர்வு முன்னுக்கு கொண்டு வரப் பட்டது. முழு தயாரிப்புடன் நடக்க இருந்த வேலை நிறுத்தம், பிரச்சனையில் ஒரு தீர்வு வர நடக்காமல் போனது. (பிரிக்கால் தொழி லாளர்களால் உத்வேகம் பெற்று அய்டிசி தொழிலாளர்களும் போராட்டப் பாதையில் பீடு நடை போட்டனர்).
திருபெரும்புதூர் வெடிக்கத் தயாராகிறது
அளவு மாற்றம் பண்பு மாற்றமாகும். தண்ணீர் கொதித்து வாயுவாகும் அளவு பண்பு மாற்றத்தைப் புரிந்து கொள்வது சுலபம். மானுட சமூகத்தில் நிகழும் அளவு பண்பு மாற்றத்தைக் கற்று உணர்வது கடினமான பணி யாகும். அந்த மாற்றம் எப்படியும் நடக்கும். அதைத் துரிதப்படுத்துவதும் தீவிரப்படுத்துவ தும் விரிவுபடுத்துவதும் கம்யூனிஸ்ட் புரட்சி யாளர்களின் பணியாகும்.
ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் அவர்கள் மீது ஏவப்படும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராட்டப் பாதைக்குத் தயாராகி விட்டனர். ÷ண்டாய் துணை யூனிட்கள் பலவற்றில் போராட்ட மழைக்கு முன்பாக வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளது.
திருபெரும்புதூர் இளம் உழைப்பின் சிறைக் கூடமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியின் அடையாளச் சின்னமாகக் காட்டப்படுவது, உண்மையில் ஒரு மாபெரும் சிறைக் கூடமே. சிறைகள் தகர்க்கப்படும் நாட் கள் நெருங்கிவிட்டன.
அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களோடு இணைந்து மக்கள் விரோத மூலதன விசுவாச ஆட்சிகளுக்கு எதிராக நடத்த உள்ள போராட்டங்களின் காலடிச் சத்தம் கேட்கத் துவங்கி உள்ளது.
****************
மாலெ கட்சி கொடி சேதப்படுத்தப்பட்டதற்கு எதிராக கண்டனக் கூட்டம்
இகக(மாலெ) புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரின் ஊர் சங்கம்விடுதி. இரும்புக் குழாயில் ஏற்றப்பட்ட கட்சிக் கொடி பல வருடங்களாக சங்கம்விடுதி ஊர் நடுவில் இருந்து வருகிறது. சமூக விரோத சக்திகள் சிலர் இரும்புக் குழாயை 20.07.2013 அன்று முறித்துப் போட்டிருக்கின்றனர். காவல்துறையில் புகார் செய்தும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதை கண்டித்து 03.08.2013 அன்று சங்கம்விடுதியில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் சாமி.கோவிந்தராஜ் தலைமையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மட்டங்கால், பெரியகோட்டை, வீரடிபட்டி, புனல்குளம் போன்ற சுற்று வட்டார கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன் சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் இராசாங்கம், கலைச்செல்வன், ஜோதிவேல், மாநிலக்குழு உறுப்பினர் வளத்தான், மாவட்டச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர். குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை என்றால் 12.08.2013 அன்று காவல்துறையை கண்டித்து கந்தர்வக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், அதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் 21.08.2013 அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் கூட்டம் அறைகூவல் விடுத்தது.
****************
சீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரம்
டி.பி.பக்ஷி

புரட்சிக்கு முந்தைய இயங்காற்றல் பற்றி ஒரு பார்வை

சீனா மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு (அன்று 45 கோடி. உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால்பகுதி); பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. மக்கள் தொகையில் பத்தில் ஒன்பது பேர் ஹான் இனத்தைச் சேர்ந்தவர்கள். சீன மக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் புராதன கம்யூன் வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இந்தப் புராதன கம்யூன்கள் வீழ்ந்து, முதலில் அடிமைச் சமூகம் அடுத்து நிலப்பிரபுத்துவச் சமூகம் என வர்க்கச் சமூகம் உருவாக 4000 ஆண்டுகள் ஆயின.
விவசாயத்தையும் கைவினைக் கலையை யும் சீனா ஓர் உயர்ந்த மட்டத்துக்கு வளர்த் தெடுத்தது. அது மகத்தான சிந்தையாளர்களை, விஞ்ஞானிகளை, அரசியல்வாதிகளை, படை வீரர்களை, கலைஞர்களை இன்ன பிறரை உருவாக்கியது. சீனாவில் நீண்ட காலத்துக்கு முன்பே கல்வி வளாகங்கள் உருவாக்கப்பட் டன. 1800 ஆண்டுகளுக்கு முன்பே காகிதம் தயாரிக்கும் கலை கண்டுபிடிக்கப்பட்டது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டை அச்சுக் கலை கண்டுபிடிக்கப்பட்டது. அய்ரோப்பியர்களுக்கு முன்பே சீனர்கள் துப்பாக்கி ரவையை பயன்படுத்த தெரிந்தவர்களாக இருந்தனர். இப்படியாக, சீனா, உலகின் மிகப் பழமையான 4000 ஆண்டுகள் வரலாறு கொண்ட, நாகரி கங்களில் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
சீன நிலப்பிரபுத்துவ யுகத்தின் முக்கிய அம்சங்கள்
) சுயசார்பு இயற்கை பொருளாதாரம் மேலோங்கி இருந்தது. விவசாயிகள் தங்கள் நுகர்வுக்காக விவசாய விளைபொருட்களையும் கைவினைப் பொருட்களையும் உற்பத்தி செய்தனர். நிலப்பிரபுக்கள் அல்லது பிரபுத்துவ கோமான்கள் நிலவாரத்தின் வடிவத்தில் பறித்ததும் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட வில்லை. காலம் செல்லச் செல்ல பரிமாற்றம் மிகக் குறைவான அளவில் வளர்ந்தது.
) நிலத்தின் பெரும்பகுதி, நிலப்பிரபுக் கள், பிரபுத்துவ கோமான்கள், பேரரசன் ஆகியோர் கொண்ட நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்தின் உடமையாக இருந்தது. விவசாயி கள் மிகச் சிறிய அளவு நிலம் வைத்திருந்தனர். அல்லது நிலமற்றவர்களாக இருந்தனர். விவசா யிகள் நிலத்தை உழுத பிறகு, 40 முதல் 80 சத விளை பொருட்களை நிலப்பிரபுக்களுக்கு தர வேண்டியிருந்தது. விளைவாக, விவசாயிகள் பண்ணை அடிமைகளாக இருந்தனர்.
) நிலப்பிரபுத்துவ சக்திகளுடன், நிலப் பிரபுத்துவ அரசும் விவசாயிகளிடம் இருந்து வரிகளையும் கொத்தடிமைச் சேவையையும் பெற்றது; அதை விவசாயிகளை ஒடுக்கப் பயன் படுத்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கும் ராணுவத்துக்கும் பயன்படுத்தியது.
) இந்த நிலப்பிரபுத்துவச் சுரண்டலை பாதுகாக்கும் அதிகாரக் கருவியாக நிலப்பிரபுத் துவ அரசு இருந்தது. நிலப்பிரபுத்துவ அரசு தகர்க்கப்பட்டபோது, சில நிலப்பிரபுத்துவ பிரிவினைவாதிகளை தவிர்த்து, மற்றவர்களை சின் பேரரசன் ஒன்றுபடுத்திய போது அது எதேச்சதிகார, மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரசாக மாறியது. பேரரசர் அனைவருக்கும் மேலானவராக இருந்தார்; நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆயுதப் படைகள், நீதிமன்றங்கள், கருவூலம், அரசு தானிய களஞ்சியம் ஆகியவற்றின் பொறுப்பாளர்களை அவரே நியமித்தார். நிலப்பிரபுத்துவ ஆட்சியின் மொத்த அமைப்பு முறையின் ஆதாரமாக நில வுடைமை மேட்டுக்குடியினரைச் சார்ந்திருந்தார்.
பொருளாதாரரீதியாகவும் அரசியல்ரீதியாக வும் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக் கப்பட்ட சீன விவசாயிகள், நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராக எண்ணற்ற போராட்டங் களில் எழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். உதாரண மாக, சென் ஷிங் எழுச்சி, வூ குவாங் எழுச்சி, செயிங் யூ எழுச்சி, லியூ பாங் எழுச்சி ஆகியவை சின் ஆட்சிக்கு எதிராக நடந்தன. ஷின்ஷி, பிங் லின், செம்புருவங்கள், வெண்கல குதிரைகள், மஞ்சள் தலைப்பாகைகள் போன்ற எழுச்சிகள் ஹான் ஆட்சிக்கு எதிராக எழுந்தன. லீ மீ, டாவோ, சிய்ன் ஆகிய எழுச்சிகள் சுயி ஆட்சிக்கு எதிராக நடந்தன. ஒவ்வொரு பெரிய விவசாய எழுச்சியும் அந்தந்த காலத்து நிலப்பிரபுத்துவ ஆட்சி மீது பெரிய தாக்குதல் தொடுத்தது; சமூக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் ஒரு பங்காற்றின.
சீன நிலப்பிரபுத்துவ சமூகம் ஒரு பண்ட பொருளாதாரத்தை வளர்த்ததால், தனக்குள் முதலாளித்துவத்தின் விதைகளையும் சுமந்து சென்றது. அயல்நாட்டு முதலாளித்துவத்தின் தாக்கம் இல்லாதிருந்தாலும், சீனா தானாகவே மெதுவாக ஒரு முதலாளித்துவ சமூகமாக மாறியிருக்கும். அயல்நாட்டு முதலாளித்துவத்தின் ஊடுருவல் அந்த இயக்கப்போக்கை துரிதப் படுத்தியது. சீனத்தின் சமூகப் பொருளாதா ரத்தை - சுயசார்பு இயற்கை பொருளாதார அடிப்படையை - சிதைப்பதில் அது ஒரு முக்கிய பங்காற்றிய அதே நேரம், பண்ட பொருளாதாரத்தின் வளர்ச்சியை துரிதப்படுத் தியது. சீனாவில் முதலாளித்துவத்தின் வளர்ச் சிக்கான - மிகப்பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளையும் கைவினைஞர்களையும் திவாலா நிலைமைக்குத் தள்ளி ஓர் உழைப்புத் சந்தையுடன் கூடிய ஒரு பண்ட சந்தையை உருவாக்குவது போன்ற - புறநிலைச் சூழல் களை இது உருவாக்கியது. நிலப்பிரபுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் விரிசல்கள் உருவானபோது, அயல்நாட்டு முதலாளித்துவத் தின் ஊக்கம் இருந்தபோது, சில வர்த்தகர்க ளும் நிலப்பிரபுக்களும் அதிகாரப்பிரிவினரும் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நவீன தொழிலில் முதலீடு செய்யத் துவங்கினர். இவ்வாறாக, சீனத்தின் தேசிய முதலாளித்துவம் தனது முதல் அடியை முன்னெடுத்து வைத்தது; 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் முதல் உலகப் போரின்போதும் அதன் தேசிய தொழில் குறிப்பாக ஜவுளியிலும் மாவு மில் தொழிலிலும் விரிவடைந்தது.
ஆயினும், முதலாளித்துவத்தின் வளர்ச் சிக்கு பங்களிப்பதன் கூடவே, ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடும் சீனத்தின் நிலப்பிரபுத் துவ சக்திகளுடன் சேர்ந்துகொண்டு முதலா ளித்துவத்தின் வளர்ச்சியைச் சுருக்கியது.
ஆக, பழைய நிலப்பிரபுத்துவ சமூகம், அரை - காலனிய, அரை - நிலப்பிரபுத்துவ சமூகமாக மாறியது. அந்நிய முதலாளித்துவத் துடன் உறவாடல் கொண்ட பழைய நிலப்பிர புத்துவ சமூகத்தின் கருவில் இருந்து, சீனாவில் இரண்டு புதிய சமூக வர்க்கங்கள் - முதலாளி மற்றும் பாட்டாளி - உருவாயின. ஏகாதிபத் திய சக்திகள் நிலப்பிரபுத்துவத்துடன் சேர்ந்து கொண்டு சீனத்தை அரை - காலனியாக மாற் றிய வரலாறு, ஏகாதிபத்தியத்துக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிரான சீன மக்கள் போராட்டத்தின் வரலாறும் ஆகும். இந்த வரலாற்றின் தொடர்ச்சி, அபினி போர், டெய் பிங் சொர்க்க சாம்ராஜ்ஜிய இயக்கம், சீன - பிரெஞ்சுப் போர், சீன - ஜப்பானியப் போர், 1898ன் சீர்திருத்த இயக்கம், யி ஹோ துவான் இயக்கம், 1911 புரட்சி, மே 4 இயக்கம், மே 30 இயக்கம் போன்றவற்றால் குறிக்கப்பட்டது.
மேலே குறிப்பிடப்பட்ட போராட்டங் கள் அல்லது இயக்கங்கள் பற்றிய சில அடிப்படை விசயங்கள்
அபினிப் போர்: 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷார் சீனாவுக்கு அதிகரித்த அளவில் அபினியை ஏற்றுமதி செய்தனர். இந்தப் போக்குவரத்து சீன மக்களை போதைக்கு அடிமைப்படுத்தியது மட்டுமின்றி, சீனத்தின் வெள்ளியையும் கொள்ளை அடித்துச் சென்றது. சீனாவுடனான வர்த்தகத்தைப் பாதுகாப்பது என்று சொல்லி, 1840 சீனாவில் இது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. பிரிட்டன் சீனா மீது ஆயுதப் போர் தொடுத் தது. லின் சே ஹாவ் தலைமையிலான படைப் பிரிவு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. கேன்டன் மக்கள் தன்னெழுச்சியாகபிரிட்டிஷ் படைகளை விரட்டியடிப்போம் இயக்கத்தை கட்டினார்கள். போர் தொடுத்த பிரிட்டிஷ் படைகள் மீது இது கடுமையான எதிர்த்தாக்கு தல் தொடுத்தது. ஆயினும் 1842ல், ஊழல் மலிந்த சிங் ஆட்சி, பிரிட்டிஷாருடன் நான்கிங் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இந்த ஒப்பந்தம் போரால் ஏற்பட்ட நட்டத்தை திருப்பிச் செலுத்தவும் ஹாங்காங்கை பிரிட் டனுடன் இணைக்கவும் வழிசெய்ததுடன், ஷாங்காய், ஃபூசோ, அமாய், நிங்போ, மற்றும் கேன்டன் ஆகிய நகரங்களை பிரிட்டிஷ் வர்த்தகத்துக்கு திறந்துவிடவும் சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பிரிட்டிஷ் பொருட் களுக்கான வரி கட்டணங்களை பிரிட்டனும் சீனாவும் இணைந்து நிர்ணயிக்கும் என்றும் சொன்னது.
டெய் பிங் புரட்சி (டெய் பிங் சொர்க்க ராஜ்ஜிய இயக்கம்):
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிங் ஆட்சியின் நிலப்பிரபுத்துவ ஆட்சி மற்றும் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த புரட்சிகர விவசாய இயக்கம்தான் டெய்பிங் புரட்சி. 1851 ஜனவரியில் வாங்சி  மாகாணத் தின் கியுபிங் பகுதியில் உள்ள சின்டீன் கிராமத் தில் இயக்கத்தின் தலைமை ஓர் எழுச்சியை துவக்கி, டெய் பிங் சொர்க்க சாம்ராஜ்ஜியம் அமைக்கப்பட்டதாக பிரகடனம் செய்தது. வாங்சியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்த விவசாயிகள் படை, 1852ல் ஹுனான் மற்றும் ஹுபே பகுதிகளைச் சென்றடைந்து அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்தன. 1853ல் கிங்சி மற்றும் அன்வேய் ஊடாகச் சென்று நான்கிங்கைக் கைப்பற்றின. படைகளின் ஒரு பகுதி வடக்கு நோக்கி தொடர்ந்து சென்று டீன்ட்சின்னின் எல்லையை அடைந்தன. ஆயினும் டெய்பிங் படை ஒரு ஸ்திரமான தளப் பகுதியை கட்டமைக்கத் தவறியது; நான்கிங்கில் அதன் தலைநகரை நிறுவிய பிறகு, அதன் தலைமைக் குழு பல அரசியல் மற்றும் ராணுவத் தவறுகள் இழைத்தது. ஆக, சிங் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி சக்திகள், பிரிட் டிஷ், அய்க்கிய அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படைகளின் ஒன்றிணைந்த தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் இறுதியில் 1864ல் முறியடிக்கப்பட்டது.
சீர்திருத்த இயக்கம், 1898: இந்த இயக்கத்தின் தலைமை தாங்கும் உணர்வு, தாராளவாத முதலாளித்துவத்தார் மற்றும் அறிவாற்றல் பெற்ற நிலப்பிரபுத்துவத்தாரின் நலன்களை பிரதிபலித்தது. பேரரசர் குவோங் சுவின் உதவியுடன் ஆதரவுடன் இயக்கம் இருந்தபோதும் அதற்கு திறன்மிக்க வெகுமக் கள் அடித்தளம் இல்லை. தன் பின்னால் ஒரு படை வைத்திருந்த யுவான் ஷி - காய், பிற் போக்குவாதிகளின் தலைவரான டோவாஹர் சூ சிக்காக சீர்திருத்தவாதிகளுக்கு துரோகம் இழைத்தார். பழமைவாதியான டோவாஹர் சூ சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி குவோங் சுவை சிறையில் அடைத்தார். டேன் சோ - துங் மற்றும் இன்னும் அய்ந்து பேரை தலையை வெட்டிக் கொன்றார். இப்படியாக, இந்த இயக்கம் துன்பகரமான தோல்வியைத் தழுவியது.
1911 புரட்சி: சிங் வம்ச சாம்ராஜ்யத்தின் எதேச்சதிகார ஆட்சியை தூக்கியெறிந்த முத லாளித்துவப் புரட்சி இது. 1911 அக்டோபர் 10 அன்று சிங் வம்ச சாம்ராஜ்யத்தின் புதியப் படையின் புரட்சிகர செல்வாக்கின் கீழ் இருந்த ஒரு பிரிவு வாஷங் மற்றும் ÷பே மாகாணங் களில் கலகம் செய்தது. அப்போது இருந்த முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ புரட்சிகர சமூகத்தினர் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் என பரந்த வெகு மக்களும் முழுமனதுடன் பதில்வினையாற்றின. வெகுசீக்கிரமாகவே சிங் வம்ச சாம்ராஜ்ஜியம் நொறுங்கியது. 1912 ஜனவரியில் சீனக் குடியர சின் தற்காலிக அரசாங்கம், சன் யாட் சென்னைத் தற்காலிகத் தலைவராகக் கொண்டு நான்கிங் கில் நிறுவப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சீன நிலப்பிரபுத்துவ மன்ன ராட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. ஜனநாயகக் குடியரசு என்ற கருத்து மக்களின் மனதில் ஆழம் வரை நுழைந்தது. ஆனால், புரட்சிக்குத் தலைமை தாங்கிய முதலாளித்துவத்தார் இயல் பில் சமரசத் தன்மை கொண்டவர்களாக இருந் தனர். கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ வர்க் கத்தின் நிலப்பிரபுத்துவ ஆட்சியை ஒழித்துக் கட்ட அவர்கள் பரந்த விவசாய வெகுமக்களை அணிதிரட்டவில்லை. மாறாக, ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ நிர்ப்பந்தத்துக்கு உட் பட்டு அரசதிகாரத்தை வடக்கு யுத்தப்பிரபு யுவான் ஷி - காயிடம் ஒப்படைத்தனர். விளைவாக புரட்சி தோல்வியில் முடிந்தது.
மே 4 இயக்கம், 1919: ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான சீன முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சியில் இது ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. புரட்சிக் கான தயாரிப்புக்களை அதன் உண்மையான பொருளில் முதிர்ச்சி அடையச் செய்ய, மேல்கட்டுமான தளத்தில் வெளிப்பட்ட, ஒரு சக்திவாய்ந்த கலாச்சார சீர்திருத்த இயக்கமாக அது வடிவெடுத்தது. ஏகாதிபத்தியமும் நிலப் பிரபுத்துவமும் அதன் மிகத்தெளிவான தனித்த இலக்குகளாக இருந்தன. தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றும் புதிய தேசிய முதலாளி கள் கொண்ட புதிய சமூக சக்திகளின் முகாமை அது வடிவமைத்தது. ஆயிரக்கணக்கான மாண வர்கள் இந்த இயக்கத்தில் துணிச்சலுடன் பங் கேற்றனர். சீன புரட்சிகர சமூக ஜனநாயக இயக்கத்தில் அறிவாளிப் பிரிவினர்தான் முதன் முதலில் விழிப்புணர்வு பெற்றனர். ஆனால், மே 4 இயக்க காலங்களில் அறிவாளிப் பிரிவினர் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்ததுடன் கூடுதல் அரசியல் உணர்வு பெற்றவர்களாகவும் இருந்தனர். அதே நேரம் அவர்கள் தொழிலா ளர்களுடன், விவசாயிகளுடன் ஒன்றிணைய தயாராக இருக்கிறார்களா இல்லையா என்ற அடிப்படையில் புரட்சிகர அறிவாளிப் பிரிவினர் அல்லது புரட்சிகரமல்லதாத அறிவாளிப் பிரிவினர் என பிரித்து நிறுத்தும் கோடும் தெளி வாக வரையறுக்கப்பட்டது.
மே 30 இயக்கம்: 1921 மே 30 அன்று ஷாங்காயில் பிரிட்டிஷ் காவல்துûறால் சீன மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதி ராக நாடு தழுவிய அளவில் நடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் இது. அந்த மாதத் துவக்கத் தில் சிங்டூ மற்றும் ஷாங்காயில் இருந்த ஜப்பா னிய ஜவுளி ஆலைகளில் பெரிய வேலை நிறுத் தங்கள் வெடித்தன. ஜப்பானிய ஏகாதிபத்திய மும் அதன் ஏவல் நாய்களான வடக்கு யுத்தப் பிரபுக்களும் அவற்றை ஒடுக்கினார்கள். மே 15 அன்று ஷாங்காயில் இருந்த ஜவுளி உரிமை யாளர்கள் ஒரு தொழிலாளியை சுட்டுக்கொன் றனர்; பல தொழிலாளர்கள் படுகாயமடைந்த னர். மே 28 அன்று சிங்டூவில் பிற்போக்கு அர சாங்கத்தால் 8 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மே 30 அன்று 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிலாளர்க ளுக்கு ஆதரவாகவும் அந்நியருக்கு வழங்கப் பட்ட சலுகைகள் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கிளர்ச்சியில் இறங்கினர். பிரிட்டிஷ் காவல்துறை தலைமை யகத்தின் முன் 10000 பேரை அணிதிரட்டினர்; ஏகாதிபத்தியம் ஒழிக, சீன மக்களே ஒன்று படுங்கள் என்று முழக்கமிட்டனர். பிரிட்டிஷ் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இது நாடு முழுவ தும் தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுகடை உரிமையாளர்களின் எதிர்ப்பை, ஆர்ப்பாட்டங் களை வேலை நிறுத்தங்களைத் தூண்டியது.
சீனப் புரட்சியின் துவக்கக் கட்டத்தில் ஆலைத் தொழிலாளர்கள் அல்லது பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை வெறும் 20 லட்சம் தான். இந்த ஆலைத் தொழிலாளர்கள் ரயில்வே, சுரங்கம், கப்பல் போக்குவரத்து, ஜவுளி மற்றும் கப்பல் கட்டுதல் என்ற அய்ந்து தொழில்களில் முதன்மையாக பணியில் இருந்த னர். இந்தத் தொழிலாளர்களின் பெரும்பகுதியி னர் அந்நிய மூலதனத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் அடிமைகளாக இருந்தனர். எண்ணிக்கைரீதியாக இவர்கள் சிறிய சக்தி என்றாலும், அவர்கள் சீனத்தின் புதிய உற்பத்தி சக்திகளை, மிகவும் முற்போக்கான சக்தியை பிரதிபலித்தனர். சீனப் புரட்சியின் வழிநடத் தும் சக்தியாக அவர்களுடைய உள்ளாற்றல், மாலுமிகள் வேலை நிறுத்தம், ரயில்வே வேலை நிறுத்தம், கைலான் மற்றும் சியோட்சோ நிலக்கரிச் சுரங்க வேலை நிறுத் தம், மே 30 சம்பவத்துக்குப் பிறகு ஷாங்காயி லும் ஹாங்காங்கிலும் நடந்த பொது வேலை நிறுத்தங்கள் போன்ற சமகால போராட்டங்களில் அவர்களுடைய வலிமையால் மெய்ப்பிக் கப்பட்டது.
தொகுத்துச் சொல்வதானால், புரட்சிக்கு முந்தைய சீன சமூகம், அரை - நிலப்பிரபுத் துவமாக வடிவமைக்கப்பட்ட பழைய நிலப்பிரபுத்துவம், பல ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அந்நிய மூலதனத்தின் விளைவால் உருவான அரை - காலனியம், சூழ்நிலை கைதியாக எழுந்த சீன முதலாளித்துவம் என்ற, மூன்று பரஸ்பர உறவு கொண்ட கூறுகளின் உயிரார்ந்த முழுமை என்ற சிக்கலான வடிவம் கொண்டிருந்தது. தெளிவாக, இதற்கு எதிராக, விவசாயப் போராட்டங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், தேச அளவிலான விழிப்புணர்வு மற்றும் இயக்கங்கள், கடைசி யாக உருவான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் ஆகியவை, சீன சமூகத்தின் உந்துசக்தியாக எழுந்தன.
(மத்தியத்துவப்படுத்தப்பட்ட நிலப்பிரபுத் துவத்தின் உறுதி குலைந்த) அரை - நிலப்பிரபுத் துவம், (எந்த ஏகாதிபத்திய சக்தியின் தனிப் பட்ட மேலாதிக்கம் இல்லாத நிலையிலான) அரை - காலனியம் மற்றும் சீன முதலாளித் துவத்தின் உள்ளார்ந்த பலவீனம், ஆகியவற் றால் ஏற்பட்டிருந்த உள்ளூர கட்டமைக்கப் பட்ட ஸ்திரமின்மையால், புதிதாக எழுந்தி ருந்த சீன ஆளும் வர்க்கம், ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கூட முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களை முன்னேற்றும் நிலையில் இல்லை. எனவே, அவர்களுக்கு மிகவும் குறை வான வாய்ப்புக்களே இருந்தன. நாட்டை, சமூகத்தை ஆள, பிராந்திய நிலப்பிரபுத்துவ ஆதிக்க சக்திகளின் பிரதிநிதிகளானயுத்தப் பிரபுக்கள் முதல் மத்தியப்படுத்தப்பட்ட ஆயுதப் படைகள் வரை ஆயுதப் படைகள் மற்றும் வன்முறை வழிமுறைகளையே சார்ந் திருக்க வேண்டியிருந்தது.
இந்தப் பின்னணியில், பாட்டாளி வர்க்கம் மற்றும் பிற சிந்திக்கிற முதலாளித்துவத்தார் அல்லது குட்டி முதலாளித்துவ கட்சிகள் அல்லது குழுக்கள் சீனாவில் தோன்றின.
- தொடரும்
****************
புரட்சிகர இளைஞர் கழக கருத்தரங்கம்:
கொள்ளையனே வெளியேறு
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று பன்னாட்டு உள்நாட்டு மூலதனக் கொள்ளையரிடம் இருந்து விடுதலை பெறுவது குறித்து புரட்சிகர இளைஞர் கழகம் திருபெரும்புதூரில்  கருத்தரங்கம் நடத்தியது. ஏசியன் பெயின்ட், டென்னகோ, என்இஎச், எச் அண்ட் எஃப், ÷ண்டாய், பிரைட் ஆட்டோ மியாங்கோ போன்ற தொழிற்சாலைகளைச் சேர்ந்த 75 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கிற்கு தோழர் ராஜகுரு தலைமை வகித்தார். ஏசியன் பெயின்ட் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ராஜேஷ், என்இஎச் தொழிலாளர் தோழர் வெங்கடேஷ், பிரைட் ஆட்டோ தொழிலாளர் தோழர் விஜயகுமார், எச் அண்ட் எஃப் தொழிலாளர் ராஜேஷ், டென்னகோ தொழிலாளர் தோழர் செந்தில் ராஜா ஆகியோர், இப்பகுதியில் உள்ள ஆலைகளில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது, தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது பற்றியும், ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் மோசமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது பற்றியும், தொழிலாளர் ஒற்றுமையின் அவசியம் பற்றியும் பேசினார்கள். திருவள்ளூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழக தோழர் அன்பு உரையாற்றினார்.
புரட்சிகர இளைஞர் கழகம் நடத்திய இளம் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வின் முடிவு அறிக்கையை அமெரிக்காவின் யுஎடபிள்யுயுவை சேர்ந்த திரு.பிரவின் பவுல் வெளியிட புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி பெற்றுக் கொண்டார். திரு பிரவின் பவுல் மற்றும் யுஎடபிள்யுயு சட்டக்குழுவை சேர்ந்த சுசேன் அட்லி ஆகியோர் உரையாற்றினர். நிர்வாகத்தின் ஒடுக்குமுறையை எதிர்கொள்வது பற்றியும், அரசாங்கங்கள் செய்யத் தவறிய கடமைகள் பற்றியும், சமூக மாற்றத்தில் இளைஞர்கள் பங்கேற்பது பற்றியும் தோழர் பாரதி சிறப்புரையாற்றினார். மேலும், தொழிற்சங்க அங்கீகார சட்டம், பயிற்சியாளர் நலன் காக்கும் திருத்த மசோதா, ஒப்பந்த முறை ஒழிப்பு, குறைந்தபட்சக் கூலி ரூ.15,000 ஆகிய கோரிக்கை களுடன் இளம்தொழிலாளர்களை அமைப்பாக்க, சில மாதங்களில் பெரும்அணிதிரட்டல் மேற்கொள்ள கருத்தரங்கம் முடிவு செய்தது.
****************
சண்டை வேண்டுமா? 
சமாதானம் வேண்டுமா?
நாட்டு மக்கள் விலை உயர்வால், ஊழலால் அதிருப்தி அடைந்து கடுமையான சீற்றத்தில் உள்ளனர். முதலாளித்துவ அரசியல் வாதிகள் மீதும் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இந்தச் சீற்றம், முதலாளித்துவ அமைப்பு முறை யின் மீது  திரும்பாமல் இருக்க நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்கள் மிகவும் கவனமாக திசை திருப்பும் நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மக்களுக் கானவர்கள் என்பதோ பாகிஸ்தான் ராணுவம் அமைதியை விரும்புகிறது என்பதோ நம் கருத்து அல்ல. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் 5 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் .கே. அந்தோணி முதலில் சொன் னார். இல்லை இல்லை பாகிஸ்தான் ராணுவம் தான் எல்லை தாண்டி வந்தது என பாஜக கூப்பாடு போட்டது. பாதுகாப்பு அமைச்சர் தான் முன்னர் சொன்னதை திரும்பப் பெற்றுக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தக் குற்றத்தைச் செய்தது என்று சொல்லி அதற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தின் மீது, பாகிஸ்தான் ராணுவத்தின் மீது, பாகிஸ்தான் அரசின் மீது அய்க்கிய அமெரிக்கா பெரும் செல்வாக்கு கொண்டுள்ளது. ஆனால், தங்கள் நாட்டு மக்களை  ஆளில்லா டிரோன் விமானம் மூலம் படுகொலை செய்யும் அய்க்கிய அமெ ரிக்காவை பாகிஸ்தான் மக்கள் வெறுக்கிறார் கள். அய்க்கிய அமெரிக்கா பாகிஸ்தான் மீது செல்வாக்கு செலுத்த பாகிஸ்தான் ராணு வத்தை முதன்மையாகப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் ராணுவம் தேர்தல் மூலம் வந்த பல ஜனநாயக ஆட்சிகளை கடந்த காலத்தில் ராணுவக் கவிழ்ப்புகள் மூலம் அகற்றி சர்வாதி கார ஆட்சிகளை திணித்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு  தேர்ந்தெடுக்கப்பட்ட சர்தாரிஆட்சி, ஆட்சிக் காலம் முடியும் வரை பதவியில் இருந்தது. அதற்குப் பிறகு தேர்தல் மூலம் நவாஸ்ஷெரிப் பிரதமர் ஆகியுள்ளார்.
நவாஸ்ஷெரீப் இந்தியாவோடு பகைமை வேண்டாம், நட்பு வேண்டும் என்றும், இரு நாடுகளும் பெருமளவில் ஆயுதக் குறைப்பில் ஈடுபட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை கள் துவங்குவதும் நீடிப்பதும் வேண்டும் என் றும் வலியுறுத்தி வருகிறார். இந்த முயற்சிக்கு பாகிஸ்தானுக்குள்ளிருந்தே உயர் மட்டத்திலி ருந்து எழுந்துள்ள ஓர் எதிர்ப்பாக, இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொலையானதைக் காண வேண்டும்.
இரு நாடுகளிலுமே போருக்கு உசுப்பி விடும் மூர்க்கமான குரல்களே ஊடகங்களால் முதன்மைப்படுத்தப்படுகின்றன. பெரிய முத லாளித்துவக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாகிஸ்தான் எதிர்ப்பு கூக்குரலில் இணைந்து கொள்கின்றன. நட்பிற்கான, சமாதானத்திற்கான குரல்கள் இரண்டு நாடுகளிலும் வலுப்பதற்கு பாடுபடுவதும், இரு நாடுகளும் அய்க்கிய அமெரிக்காவுக்கு எதிரான அய்க்கியத்தை பலப்படுத்தப் பாடுபடுவதும், முற்போக்கு ஜனநாயக, தேசபக்த சக்திகளின் கடமையாகும்.
சீனாவின் சர்வதேச ஆய்வுகள் கழகத்தின் துணைத்தலைவரான திரு ருவான், சீனாவிற்கும்  இந்தியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை, சீனாவுக்கும் பிலிப்பைன்ஸ÷க்கும், சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனைகள் போல் பதட்டம் நிறைந் ததல்ல என்கிறார். பிலிப்பைன்ஸ், ஜப்பான் இரண்டு நாடுகளும் சீனாவோடு பகைமை பாராட்டுவதில் அய்க்கிய அமெரிக்காவின் தூண்டுதல் ஒரு வலுவான காரணமாக இருக்கி றது என்று அவர் சொல்கிறார். இந்தியா எந்த ஒரு பெரிய நாட்டின் போர்த்தந்திரத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும், இந்தியாவிற்கு அத்தகைய ஒரு போர்த்தந்திர சுயாட்சியும் சுதந்திரமும் முக்கியமானது என்றும் வலியுறுத்து கிறார். சீனாவும் இந்தியாவும் துரிதமாகவும் கூட்டாகவும் எல்லைப் பதட்டங்களை தணித்துவிட்டன என சுட்டிக்காட்டுகிறார்.
திரு ருவான் சொல்லும் பின்வரும் விசயம் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ‘இந்தியாவுக் கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச் சனைகள் மிகவும் சிக்கலானவை. கண்ணுக்குத் தெரிகிற எதிர்காலத்துக்குள் திறமையாகவும், புத்திசாலித்தனமாகவும் இப்பிரச்சனையைத் தீர்ப்பது ஒரு நல்ல வழியாகும். இந்தியாவின் வளர்ச்சி இல்லாமல் ஆசியாவிற்கு ஓர் ஒளி மயமான எதிர்காலம் கிடையாது. வருங்காலத் தில் இரு நாடுகளுக்கும் பொதுவான விசயங்கள் நிறையவே இருக்கும்; பகிர்ந்து கொள்கிற நலன்கள் நிறையவே இருக்கும்.’
பக்கத்து நாடுகளான பாகிஸ்தானோடு சீனாவோடு பகைமை வளர்க்காமல் நட்பை யும், ஒத்துழைப்பையும் பேணி வளர்ப்பதுதான் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது.
****************
குஜராத்தின் கூடுதல் காவல்துறைத் தலைவர் ஓடிப் போய்விட்டாராம்!
மோடியின் ராஜ்ஜியத்தில், இந்துக்களின் வாக்குகளைப் பெற, அவருக்கு இசுலாமியத் தீவிரவாதிகளால் ஆபத்து என்று காட்ட பல மோதல் படுகொலைகள் நடந்தன. 2004ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான் என்ற இளம் இசுலாமியப் பெண் இன்னும் சில இளைஞர்களுடன் ÷ன் 15, 2004 அன்று அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குஜராத்தில் தற்போது கூடுதல் டிஜிபியாக இருக்கும் பி.பி.பாண்டே மீது மத்திய புலனாய்வு துறை ÷லை 3 அன்று முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.
அவர் மத்திய புலனாய்வு துறை நீதிமன்றத்திற்கு முதலில் ஸ்ட்ரெச்சரில் (தூக்கி வரப்படும் படுக்கையில்) வந்தார். அடுத்த முறை சக்கர நாற்காலியில் வந்து முன்ஜாமீன் கேட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் துள்ளி எழுந்து ஓடி காரில் பறந்துவிட்டார். குஜராத் உயர்நீதிமன்றம் ஜாமீன் தரவில்லை. அவர் இடைக்கால முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 8 அன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
 அவர் நீதிமன்றத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த போது தமது (மதச்சார்பற்ற) தன்மையைப் புலப்படுத்த அந்த நாற்காலியைத் தள்ளுவதற்கு இரண்டு இசுலாமியர்களை அழைத்து வந்திருந்தார். இவர் காணாமல் போகும் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் காவல்துறைப் பிரிவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது குஜராத் காவல்துறைத் தலைவர், இவர் காணாமல் போய்விட்டார் (அப்ஸ்காண்ட்டட்) என்று சொல்லி ரயில், விமான நிலை யங்கள், சோதனைச் சாவடிகள் என எல்லா இடங்களிலும் இவரைத் தேடிப் பிடிக்குமாறு கண்காணிப்பாளர்களுக்கும் ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதான் மோடியின் நல்லாட்சி.
****************
கனிம வளங்கள் கொள்ளை போவது தடுக்கப்பட வேண்டும்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் கலெக்டர்கள் உருவானார்கள். கலெக்டர்க ளாய் வெள்ளைக்காரர்களே இருந்தார்கள். வருவாய் வசூல் மற்றும் சமூகம் பதட்டம் இன்றி பார்த்துக் கொள்வது அவர்களுடைய கடமைகளாக இருந்தன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களும் அந்தப் பதவிக்கு வந்தார்கள். அதாவது இந்திய நாட்டு செல்வத்தை வெள்ளையன் கொள்ளையடிக்க, அதை எதிர்க்கும் இந்திய மக்களை அடக்கி ஒடுக்க, பிரிட்டிஷ் ஆட்சியின் நலன்களைப் பாதுகாக்க இந்தியர்கள் அமர்த்தப்பட்டனர். அது ஓர் அடிமைத் தொழில்.
சுதந்திரம் பெற்ற பிறகு, அந்த அடிமைத் தொழிலை சுதந்திரமாக இந்தியர்கள் செய்தார் கள். வெள்ளை எசமானர்களின் இடத்தில் கொள்ளைக்காரர்கள் வந்தார்கள். முதலாளித் துவ அரசு நிர்வாகத்தின் பணிகளை அய்ஏஎஸ் அதிகாரிகள் செய்கிறார்கள். அதே வரி வசூல், அதே சமூகப் பதட்டக் கட்டுப்பாடு. இப் போது இன்னும் சிலபல கூடுதல் பணிகள்.
முதலாளித்துவ சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் இந்தப் பணிக்கு துரதிர்ஷ்டவச மாக சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் எக்கச்சக்கம்.
ஆட்சிகள் மாறும்போது அதிகாரிகள் மாற் றப்படுவார்கள். கருணாநிதிக்கு ஆதரவான அதிகாரிகளை ஜெயலலிதா மாற்றுவார்; ஜெய லலிதாவுக்கு ஆதரவான அதிகாரிகளை கருணா நிதி மாற்றுவார். அந்தந்த இடங்களுக்கு ஏற்பபொருத்தமான அதிகாரிகளை அமர்த்துவது உங்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று முத லாளிகளுக்கு அரசு தரும் சமிக்ஞை. பொருத் தமற்றவர்கள் அல்லது பொருந்திப் போக மறுப் பவர்கள் தொந்தரவு இல்லாத வேறிடத்துக்கு மாற்றப்படுவார்கள். காங்கிரஸ் கட்சியின் முக் கியமான மருமகன் ராபர்ட் வாத்ரா அரியானா வில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்திருப் பதாகச் சொன்ன அய்ஏஎஸ் அதிகாரி கேம்கா அந்தப் பதவியில் தொடர முடியவில்லை. மணல் மாஃபியா மீது நடவடிக்கை எடுத்த துர்கா சக்தி நாக்பால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். உங்கள் அய்ஏஎஸ் அதிகா ரிகள் இல்லாமலே நாங்கள் நிர்வாகத்தை நடத்திக்கொள்கிறோம் என்கிறார் அகிலேஷ். இதுபோன்ற இடமாற்ற சம்பவங்களில், சில சமயங்களில் எந்த முறைகேட்டுக்காக இட மாற்றம் செய்யப்பட்டார்களோ, அந்த முறை கேடுகள் அம்பலத்துக்கு வருவதை விட அதி காரிகள் இடமாற்றம் பெரிய பிரச்சனையாகி விடுகிறது.
அய்ஏஎஸ் அதிகாரிகள் இப்படி மாற்றப் படும் சம்பவங்கள், சமூகத்தில் நடக்கும் ஒட்டு மொத்த சம்பவத் தொகுப்பில் பார்க்கும்போது சிறிதளவே. கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழு வதும் ஆட்சியில் உள்ளவர்களுடன் ஒத்துப் போகாததால் 200 அய்ஏஎஸ் அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டனர் என்று அய்ஏஎஸ் அதிகாரிகள் அமைப்பு சொல்கிறதுஅப்படியா னால், பெரும்பான்மை அய்ஏஎஸ் அதிகாரிகள் சமரசம் செய்துகொள்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாமா? அல்லது பழிவாங்கும் இடமாற் றம் இல்லாத மற்ற காலங்களில் எப்படி பணியாற்றினார்கள் என்று கேள்வி எழாதா? எப்படியாயினும், தமிழ் நாட்டில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த வைகுண்டராஜனின் தூக்கத்தை தூத்துக்குடி கலெக்டர் அஷீஷ் குமார் கலைத்துவிட்டார். அதனால் அவர் தூத்துக்குடி கலெக்டர் பதவியில் இருந்து சமூக நலத் துறை துணைச் செயலராக மாற்றப்பட்டு விட்டார். அவர் இடத்தில் அரியலூர் கலெக் டர் எம்.ரவிகுமார் அமர்த்தப்பட்டிருக்கிறார். கிரானைட் ஊழல் பிரச்சனையில் பிஆர்பி விசயத்தில் நடந்த உடனடி கைது நடவடிக்கை கள், உறவினர் வீடுகளில் தேடல் ஆகியவை, வைகுண்டராஜன் விசயத்தில் இன்னும் நடக்க வில்லை என்றால் வைகுண்டராஜன் இன்றைய தமிழகத்தில்விசேசமானவர் என்று பொருள்.
தூத்துக்குடியில் உள்ள வைப்பார் மற்றும் வேம்பார் கிராமங்களில் வெறும் 4 ஹெக்டேர் பரப்பில் மட்டும் மணல் எடுக்க அனுமதி பெற் றிருந்த விவி மினரல்ஸ் நிறுவனம் 30 ஏக்கர் நிலப்பரப்பில் தாது மணல் எடுத்திருப்பதாகவும் வைப்பார் கிராமத்தில் அரசு அனுமதியின்றி 2,30,000 டன் மணலை எடுத்திருப்பதாகவும் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும் அஷீஷ் குமார் சொல்கிறார். இது பற்றி அவர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் இந்த முறை கேடான மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற் பட்ட நட்டம் பற்றி மதிப்பிடவில்லை. 2012 ÷ன் மாதம் தலைமைச் செயலருக்கு அவர் அனுப்பிய அறிக்கைக்கு எந்த பதிலும் வராத நிலையில் அவர் அனுப்பிய இரண்டாவது அறிக்கை சென்று சேரும் முன், மணல் குவாரி களை சோதனை செய்த அன்றே, இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். பீச் மினரல்ஸ் கம்பெ னியும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக அதிகாரிகள் சொல்கின்றனர். இது வைகுண்ட ராஜனின் தம்பி சுகுமார் நடத்துகிற நிறுவனம்.
பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத் தின் முதல் கலெக்டரான வி.சுந்தரம் 2013 ஜனவரியில் தலைமைச் செயலருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் விவி மினரல்ஸ் சட்டவிரோ தமாக மணல் அள்ளியதில் அரசுக்கு ரூ.46,000 கோடி இழப்பு என்று சொல்லியுள்ளார்.
விவி மினரல்சின் மணல் கொள்ளையைப் பற்றி விசாரிக்க வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக முதலமைச்சர் குழு போட்டிருக்கிறார். குழு தனதுவேலையை செய்துகொண்டிருக்கிறது. குழு தனது விசாரணையை முடிக்கும் வரை மணல் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்ட ராஜன் தாதுப் பொருட்களை ஏற்றுமதி செய் யும் தொழில் நடத்துகிறார். (அவர் ஜெயா டிவி யின் பங்குதாரர் என்பது தற்செயலானது என்று நம்புவோம்). அவர் எடுக்கும் மணலில் இருந்து பிரித்து எடுப்பது கார்னைட், இல்மனைட், ரூடைல், மோனசைட் போன்ற அரிய வகை தாதுக்கள். இதற்காக பவளப் பாறைகளை உடைப்பது, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குற்றகும்பல்களை ஏவுவது அவரது சிறப்பு நடவடிக்கைகள் என்று சொல்லப்படுகிறது. அந்த மணல் ராஜ்ஜியத்துக்கு இடையூறு ஏற்ப டாமல் அதிகாரிகள் அரணாக இருப்பதாக மக் கள் சொல்கிறார்கள். கடலோரப் பகுதிவாழ் மக்களுக்கு வைகுண்டராஜன் தயவில் நரகம் உருவாகிறது. மணலில் இருந்து தாதுக்களை பிரித்து எடுக்கும்போது ஏற்படும் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்கக் கூடியது. கடல் மணலை எடுத்து எடுத்து அரிப்பு ஏற்பட் டுள்ளதால் கடலலைகள் வீடுகளுக்கு மிகவும் அருகில் வந்து விடுவதாக வைப்பார் கிராம மக்கள் சொல்கின்றனர். விவி மினரல்ஸ் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, போட்டி நிறுவனத்தால் தூண் டப்பட்டவை என்று நிறுவனம் சொல்கிறது.
பெரும்தொழில் குழுமச் சூறையாடல் என்பது தேச கருவூலத்தை மோசடி செய்து ஏமாற்றும் ஒரு செயலாகவும் தேச வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு செயலாகவும், மக்க ளின் உரிமைகளை கொள்ளையடிக்கும் ஒரு செயலாகவும் உள்ளது என்று மாலெ கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ் அறிக்கை சொல்கிறது. உழைப்பைச் சுரண்டி லாப விகிதத்தை அதிக ரிப்பதோடு கூடுதலாக இயற்கை வளங்களை அபகரித்து செல்வம் குவிப்பது கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் பாணி. தமிழ்நாட்டிலும், நாடு முழுவதும் இதை நீண்டகாலமாக செய்து கொண்டிருக்கும் மாஃபியாக்கள் அங்கு இங்கு என்று எப்போதாவது சிக்குகிறார்கள். விவி மினரல்ஸ் நிறுவனம் மீது புகார் எழுவது இது முதல் முறையல்ல. பிஆர்பி வெளியில் வந்து விட்டதுபோல், வைகுண்டராஜனும் எழுந்த பிரச்சனையை எளிதாக சமாளித்துவிடுவார். ஆனால், இயற்கை வளங்கள் கொள்ளை போவது வேறுவேறு வடிவங்களில் தொடரும். என்எல்சி மக்கள் சொத்து, அதைப் பாதுகாக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்திய தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டின் கடலோர வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க கறாராக நடவடிக்கை எடுப்பாரா? முன்னாள் திருநெல்வேலி கலெக்டர் வி.சுந்தரம் அரசுக்கு இழப்பு பற்றி சொல்லும் விசயத்தில் தற்போ தைய சிறப்புக் குழு விசாரணை கவனம் செலுத்துமா?
கொள்ளை போவது தேசத்தின் சொத்து. மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துவிட்டு இதற்கு இவ்வளவு கோடி செலவாகும் என்று, அதனால் ஏற்படும் கூடுதல் செலவை தமிழக அரசு எப்படியாவது சமாளிக்கும் என்று  தியாகி போல் தோற்றம் தரும் முதலமைச்சர், தாது மணல் மட்டுமல்ல, ஆற்றுமணல் கொள்ளை, கனிம வளங்கள் கொள்ளை, அவற்றால் அரசு கருவூலத்துக்கு ஏற்படும் இழப்பு ஆகியவை பற்றி முழுமையான பாரபட்சமற்ற, வெளிப் படையான ஆய்வு நடத்தி வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கொள்ளை போவது தடுக்கப்பட வேண்டும்.
****************
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்
யு 90, சகர்புர், டெல்லி - 110092
06 ஆகஸ்ட் 2013
பெறுநர்
திரு..சிதம்பரம்
நிதியமைச்சர்
இந்திய அரசு
பொருள்: பாலியல் வன்முறைக்குள்ளான, திராவக வீச்சுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவச் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் இழப்பீடு கிடைக்கும் வகையில் நிர்பயா நிதி உருவாக்கப்பட வேண்டும்.
அய்யா,
கடந்த டிசம்பரில், 23 வயதுப் பெண் டெல்லிப் பேருந்து ஒன்றில் படுபயங்கரமான கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த டெல்லியும் பெரும்இயக்கமாக வீதிகளில் திரண்டது. அந்த இயக்கம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்குத் தண்டனை என்பது மட்டுமின்றி, பெண்கள் பாலியல் கொடுமை மற்றும் வன்முறை பயமின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையும் வேண்டும் எனக் கோரியது. பாலியல் வன்முறையால், திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு ஆதரவும் தைரியப்படுத்தலும் கிடைக்காமல் அவர்களால் நீதிக்காக தொடர்ந்து போராட முடியாது என்கிற நிலையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் தாங்கள் அறிவித்த நிர்பயா நிதி பாதிக்கப்பட்டவர்களின் மனதில் நம்பிக்கைகளை உருவாக்கியது. ஆனால், இப்போது அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.
பாலியல் கொடூரத்திற்குள்ளானவர்களுக்கும் திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவச் செலவு மிகமிக அதிகமாக உள்ளது. திராவக வீச்சால் ஏற்படும் தீக்காயங்களுக்கு சில மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோரமாகிக் போன முகத்தைச் சீர் செய்வதற்கான அறுவை சிகிச்சைக்கு அதிகமான பணம் தேவைப்படுகிறது. திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட சோனாலி முகர்ஜி அறுவை சிகிச்சை மேற்கொள்ள 40 லட்ச ரூபாய் ஆனது என்கிறார். சமீபத்தில் உச்சநீதிமன்றம், திராவக வீச்சு வழக்குகளில் பாதிக்கப் பட்டோருக்கு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு தொடர்பாக ஒரு கொள்கையை மத்திய அரசு அறிவிக்கச் சொல்லியுள்ளது. புதிய சட்டம் திராவக வீச்சில் குற்றம் செய்தவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர் குற்றவாளி தண்டிக்கப்படும் வரை இழப்பீட்டிற்காகக் காத்துக் கொண்டிருக்க முடியுமா? குற்றவாளிக்கு தண்டனை கொடுத்த பின்பு அவரிடம் இருந்து இழப்பீட்டுப் பணம் பெற்றாலும்கூட  இழப்பீடு அரசாங்கமும் கொடுக்க கடமைப்பட்டதாகும்.
பாலியல் வன்முறையாலும் திராவக வீச்சாலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவச் செலவுகளையும் தாண்டி, தங்கள் வாழ்க்கையைப் புனரமைக்கப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு, குறிப்பாக ஊனமடைந்தவர்களுக்கு முகச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.
1995ல் தேசிய பெண்கள் ஆணையம், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்களுக்கு இழப்பீடு மற்றம் மறுவாழ்வு தொடர்பாக ஒரு திட்டத்தை உருவாக்கி மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது. அந்தத் திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவே இல்லை. மேலும், தேசிய பெண்கள் ஆணையம், திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான, குற்றங்களால் ஏற்பட்ட காயங்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான வாரியங்களை தேசிய, மாநில, மாவட்ட மட்டங்களில் அமைத்து மாவட்ட மட்ட கண்காணிப்புக் குழுக்கள் மூலம் உதவிகள், நிவாரணங்கள் ஆகியவை திராவக வீச்சு, பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களுக்குச் சென்றடைவதைக் கண்காணிக்கும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கி யது. இந்த திட்டங்கள் எல்லாம் தாள்களில்தான் உள்ளன. பாதிக்கப்பட்ட இந்தப் பெண்கள் நிலை பற்றி மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம்கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
பாலியல் வன்முறையால், திராவக வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ செலவுகளை, இழப்பீடு மற்றும் மறுவாழ்க்கைகான செலவுகளை மத்திய, மாநில அரசாங்கங்கள்தான் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கம் நிர்பயா பெயரில்  நிதி உருவாக்கி அதற்கு மிகக் குறைந்த அளவே ஒதுக்கீடு செய்துள்ளது வெட்கக்கேடானதுதிட்டத்தின் நோக்கமே தெளிவில்லாமல் உள்ளது.
நிர்பயாவுக்கு அரசாங்கம் என்ன கொடுத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதோ அந்த சிறப்பான மருத்துவச் சிகிச்சை  அரசின் செலவிலேயே பாலியல் வன்முறைக்குள்ளான எல்லா பெண்களுக்கும் கிடைக்கச் செய்வதே நிர்பயா நிதியை அவர் பெயருக்கு அர்ப்பணிப்ப தில் அர்த்தம் தரும் என நாங்கள் கூறுகிறோம். நிர்பயா நிதி, ஒரு முழுமுற்றூடான மறுவாழ்வு மற்றும் இழப்பீட்டிற்கான நிதி ஒதுக்கீட்டைக் கொண்டதாக பெண்கள் அமைப்புகளைக் கலந்தாலோசித்து உருவாக்கப்பட வேண்டும். பெண்கள்  அமைப்புகளைக் கலந்தாலோசித்து தேசிய பெண்கள் ஆணையத்தால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களை செழுமைப்படுத்தி, மிக விரைவில் அமல்படுத்த வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.
கவிதா கிருஷ்ணன்
தேசியச் செயலாளர்
அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்
பாலியல் வன்முறையால், திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வுத் திட்டம் கோரி முற்போக்குப் பெண்கள் கழகம் போராட்டம்
ஆகஸ்டு 6 அன்று டெல்லி நாடாளுமன்ற வீதியில் (ஜந்தர் மந்தர்) பாலியல் வன்முறையால், பாலியல் தாக்குதலால், திராவக வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை, இழப்பீடு, மறுவாழ்வு வழங்கக் கோரி முற்போக்கு பெண்கள் கழகம் ஏற்பாடு செய்த தர்ணா போர் நடைபெற்றது. பல்வேறு பல்கலைக் கழகங்கள் உட்பட டெல்லி முழுவதும் இருந்து பெண்கள் இந்த தர்ணாவில் கலந்து கொண்டார்கள். வசிர்புர் குடிசை வாழ் பகுதியிலிருந்து, நரேலா, மந்தவ்லியில் இருந்தும் பெண்கள் கலந்து கொண்டனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் சுஜேதா டே தர்ணாவை முன்நின்று நடத்தினார். தர்ணாவில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ராதிகா, ஸ்வேதா, சிந்து, டெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரேமா, நரேலாவிலிருந்து சீலா, மந்தவாலி பள்ளிக்கூட மாணவி சிக்கா, நீலம், நஜக்ராவைச் சேர்ந்த சோனி, வாசிப்பூரில் இருந்து சகுந்தலா, அகில இந்திய மாணவர் கழகத்தின் ஜாஸ்மின், ஓம்பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் வன்முறைச் சம்பவம் பற்றி பல்வேறு பல்கலைக் கழக மாணவர்களும் கண்டனம் தெரிவித்ததோடு இதுபோன்ற தாக்குதல்களுக்கு பெண்களைக் குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக, பெண்களின் தனித்துவத்தை, அவர்களுடைய முடிவுகளை மதிக்க ஆண்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்கள். மேலும், இழப்பீடு, மறுவாழ்வு போன்றவற்றை தர்மமாக அல்ல, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் கவுரவத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதை உத்தரவாதப்படும் உரிமையாகக் கேட்கப்படுகிறது என்றார்கள்.
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசியச் செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.
தமிழில்: ஜி.ரமேஷ்
****************
கல்வி சிறந்த
தமிழ்நாடு!
சிறப்பு 1: திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் டி.டி. மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் நகையை அடகு வைத்து, நிலத்தை அடகு வைத்து ரூ.20 லட்சம் வரை கணக்கில் வராத கட்டணம் கட்டி 200 மாணவர்கள் மருத்துவராகும் கனவுகளுடன் மாணவர்களாய் சேர்ந்தார்கள். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக இணையதளத்தில் இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. கல்லூரியில் சேரும்போது 10ஆம் வகுப்பு, +2 அசல் சான்றிதழ்களையும் கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் ஒப்படைத்துவிட்டார்கள்.
ஊழல் நிறைந்த இந்திய மருத்துவக் கவுன்சில், தான், முதலில் இந்தக் கல்லூரிக்கு தந்திருந்த அங்கீகாரத்தை பிறகு ரத்து செய்து விட்டது. பல்கலைக் கழகமும் இணைப்பை துண்டித்துவிட்டது. கல்லூரியின் தலைவர் தீனதயாள நாயுடு சிறையில் இருக்கிறார்.
மாணவர்களும் பெற்றோர்களும் பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குடும்பங்களின் மொத்த எதிர்காலமும் திடீரென தொலைந்து போய்விட்டது.
தமிழக அரசு அந்த மாணவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
சிறப்பு 2: திருடர்கள், குற்றவாளிகள் படங்களை காவல்நிலையங்களிலும் பொது இடங்களிலும் வைப்பதுபோல், போடிநாயக்கனூரில் ஸ்டேட் வங்கிக் கிளை ஒன்று கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாத மாணவர்களின் படங்களுடன் டிஜிட்டல் போர்டு வைத்துள்ளது. ஆயிரமாயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை வாங்கியவர்கள் யார் என்ற விவரங்கள் வங்கி ரகசியம் என்று சொல்லப்படுகிறது. சாராய ஆலை, கிரிக்கெட் டீம் என்று வேறுவேறு தொழில்களில் பணத்தை குவித்துவைத்திருக்கிற, ஆனால் தனது கிங்ஃபிஷர் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி வைத்திருக்கிற விஜய் மல்லையாவுக்கு மீண்டும் கடன் தர ஸ்டேட் வங்கி உட்பட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயற்சிகள் மேற்கொள்கின்றன. ஆனால், வேறு வழியின்றி படிப்பதற்குக் கடன் வாங்கிய மாணவர்களை குற்றவாளிகளாகச் சித்தரித்து பொது இடத்தில் படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்தான் அந்த வங்கி அதிகாரிகளுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்கிறது.
ஸ்டேட் வங்கி அதிகாரிகள் படம் வைத்தது தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? அரசியல்ரீதியாக விமர்சனம் செய்பவர்கள் மீது கூட தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக வழக்குப்போடும் தமிழக முதலமைச்சர், ஸ்டேட் வங்கியால் களங்கப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
சிறப்பு 3: இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் 80,000 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காசு கொடுத்துப் படிக்க வசதியில்லாமல் மதிப்பெண் பெற்றிருந்தும் இடம் கிடைக்காத மாணவர்கள் எண்ணிக்கை பற்றி விவரங்கள் இல்லாததால் அப்படிப்பட்ட மாணவர்கள் இல்லை என்று பொருளில்லை. மறுபுறம், கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவது தமிழ்நாட்டில் ஒரு தொழிலாக நடக்கிறது. தொழில், பணப் போக்குவரத்து என்றான பிறகு அது குற்றமயமும் ஆகிறது. மாணவர்கள் இல்லாத கல்லூரிகள், கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், கல்விச் சூழலில் குற்றமயம் என்ற அதிசிறந்த நிலைக்கு தமிழ்நாட்டை உயர்த்தியதற்கு தமிழக அரசு பொறுப்பேற்குமா?
****************

Search