டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சி வெற்றி
பெரியநாயக்கன்பாளையம், எல்எம்டபிள்யூ பிரிவு சாமையன் நகர்,
இந்திரா காந்தி வணிக வளாகம், கூடலூர், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி புரட்சிகர இளைஞர் கழகம் பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிய மனு மீது இரண்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் புரட்சிகர இளைஞர் கழகம் தாக்கல் செய்த ரிட் மனு எண்
8675/2013 என்ற வழக்கில் 08.04.2013 அன்று உத்தரவிட்டது. உத்தரவுக்கான நகலை மாவட்ட ஆட்சியருக்கும், டாஸ்மாக் மண்டல மேலாளருக்கும் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புரட்சிகர இளைஞர் கழகம் கோரியது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசையும், டாஸ்மாக் மண்டல மேலாளரையும் கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற கோரியும் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. 22.04.2013 தேதியிட்ட
உத்தரவின்
மூலம்
காவல்துறை
அனுமதி
மறுத்தது.
அனுமதி மறுப்பு கடிதத்தில் கோவையில் பதட்டமான சூழல் நிலவுவதாகவும், 1861 காவல் சட்டப்படி அனுமதி மறுக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத் தில் ரிட் மனு எண் 13615/2013 தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர், புரட்சிகர இளைஞர் கழகம் பதிவு பெற்ற சங்கம் இல்லை என்றும், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், பிரிக்கால் நிர்வாகத்தை மிரட்டவே ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அரசியல் கட்சிக்கு அனுமதி தந்த பின்னணியில், மனுதாரர் சங்கம் அனுமதி கோரும் புதிய மனுவை காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என்றும், அந்த மனுவின் மீது மூன்று நாட்களுக்குள் காவல் துறை உத்தரவிட வேண்டும் என்றும் 08.07.2013 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படியில் புரட்சிகர இளைஞர் கழகம் அனுமதி கோரி மனு அளித்து, காவல்துறை அனுமதி அளித்து 20.07.2013 அன்று பெரியநாயக்கன்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தேசியச் செயலாளர் பாரதி, தேசியக் குழு உறுப்பினர் வெங்கடாசலம், மாநிலக் குழு உறுப்பினர் ரத்தீஷ் குமார் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, எல்எம்டபிள்யூ பிரிவு சாமையன் நகர்,
இந்திரா காந்தி வணிக வளாகம், கூடலூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற ஆட்சியருக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி கிடைத்தவுடன் கடைகள் இடம் மாற்றப்படும் எனவும் கோவை மண்டல டாஸ்மாக் நிர்வாகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் வழக்கு நடத்திய தோழர் பாரதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். போராட்டம் முதல் கட்ட வெற்றியை எட்டியுள்ளது.
- வெங்கடாசலம்
********
இளவரசனுக்கு
அஞ்சலி கூட்டம்
புதுக்கோட்டை
மாவட்டம் ஆண்டிக்குளப்பம்பட்டியில்
அஞ்சலி கூட்டம்
நடைபெற்றது. அங்கு
வைக்கப்பட்டிருந்த
இளவரசன் படத்துக்கு
ஊர் இளைஞர்களும்,
சிறுவர்களும்
மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர்.
இகக(மாலெ) கட்சி
மாநில கமிட்டி
உறுப்பினர்கள்
கலைசெல்வன், முருகதாஸ்,
ரெங்கசாமி, மாவட்டச்
செயலாளர் தோழர்
ஆசைத்தம்பி ஆகியோர்
அஞ்சலி செலுத்தி
சாதி ஆதிக்கத்திற்கு
எதிராக உரை நிகழ்த்தினர்.
********
தலையங்கம்
அரசியல் கொலையா?
கொலை அரசியலா?
கொலைகள்
கண்டிக்கப்பட
வேண்டியவை. பாரதிய
ஜனதா கட்சி மாநிலப்
பொதுச் செயலாளர்
ஆடிட்டர் ரமேஷின்
கொலையும் கண்டனத்
துக்குரியது.
ரமேஷின் கொலையை
பல்வேறு கட்சிகளும்
கண்டித்துள் ளன.
மனித நேய மக்கள்
கட்சி, இந்திய
சோசலிஸ்ட் ஜனநாயக
கட்சியும் கொலையை
கண்டித்துள்ளன.
ஜனநாயகத்தில்
கொலைகளுக்கு இடமில்லை
என்று பல கட்சிகளும்
கருத்து தெரிவித்துள்ளன.
பாரதிய ஜனதா
கட்சித் தலைவர்களும்
இந்து இயக்கத்
தலைவர் களும் அடுத்தடுத்து
கொல்லப்படுவதற்கு
வெங்கைய்யா நாயுடு
உள்ளிட்ட பல தலைவர்கள்
கடும் கண்டனத்தை
வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
குஜராத் முதல்வரும்
பாஜகவின் தேசிய
பிரச்சாரக் குழுவின்
தலைவரு மான மோடி,
ரமேஷைக் கொன்றவர்கள்
கடுமையாக தண்டிக்கப்பட
வேண்டுமென்று
காட்டமாக கூறியிருக்கிறார்.
நரேந்திர
மோடி ஆட்சியில்
குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான
இஸ்லாமியர்கள்
அரக்கத்தனமாக
கொல்லப்பட்ட மனிதப்
படுகொலையில் சம்பந்தப்பட்ட
குற்றவாளிகள்
எவராயினும் அனைவரையும்
தண்டிப்பேன் என்று
மோடி ஒருபோதும்
சொன்னதில்லை. பலவகையிலும்
இந்தப் படுகொலைகளை
நியாயப்படுத்தியே
பேசியிருக்கிறார்.
பொய்யான மோதலில்
கல்லூரி மாணவி
இஷ்ரத் ஜெஹானைக்
கொன்றவர்கள் தண்டிக்கப்பட
வேண்டுமென்று
பாஜக தலைவர்கள்
எவரும் சொல்ல வில்லை.
பாஜக தலைவர்
ரமேஷைக் கொன்றவர்கள்
தண்டிக்கப்பட
வேண்டும். குஜராத்
மனித படுகொலைக்
குற்றவாளிகளும்
இஷ்ராத் ஜெஹானைக்
கொன்றவர்களும்
விடுவிக்கப்பட
வேண்டுமென்றே
மோடி உள்ளிட்ட
பாஜக தலைவர்கள்
விரும்புகிறார்கள்!
எங்காவது எப்போதாவது
குற்றவாளிகள்
தங்களையே தண்டிக்க
வேண்டும் என்று
சொல்லிக் கொண்டதுண்டா?
தங்களைத் தாங்களே
தண்டித்துக் கொண்டதுண்டா?
பரமக்குடியில்
தலித்துகள் ஏழு
பேர் போலீசாரால்
சுட்டுக் கொல்லப்
பட்டனர். வன்முறையாளர்கள்,
பொதுமக்களுக்கும்
பொதுச் சொத்துக்கும்
அழிவை உருவாக்கி
விடாமல் தடுக்கவே
துப்பாக்கிச்
சூடு நடத்தப்பட்டது
என்று பேசினார்
முதல்வர். சிபிஅய் விசாரணை
வேண்டும், நீதி
விசாரணை வேண்டும்
என்ற ஜனநாயக கோரிக்கைகள்
வலுப்பெற்ற போதும்
15 நாட்கள் கழித்தே
விசாரணைக் கமிசன்
அமைத்தார். இளவரசன்
மரணத்துக்கு நீதி
விசாரணை வேண்டும்,
மத்திய புலனாய்வு
விசாரணை வேண்டுமென
இளவரசன் பெற்றோர்களும்
நாடு தழுவிய ஜனநாயக
கோரிக்கையும்
தீவிரமாக வலியுறுத்தப்பட்ட
போதும் நான்கு
நாட்கள் கழித்தே
முதலமைச்சர் ஒரு
நபர் விசாரணைக்
கமிசனை அமைத்தார்.
ஆனால், ஆடிட்டர்
ரமேஷ் கொலை நடந்த
அடுத்த நாளே டிஜிபி
பொறுப்பில் சிறப்பு
புலனாய்வுக் குழு
விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
சென்ற ஆண்டு
நவம்பர் 7ல் தருமபுரி
மாவட்டத்து 3 கிராமங்களை
சாதி வெறி பாமக,
அதிமுக, தேமுதிக,
திமுக குண்டர்கள்
காட்டுமிராண்டித்
தனமாக தாக்கினர்.
தேசம் முழுவதும்
அதிர்ச்சியடைந்தது.
கடும் கண்டன
அலைகள் எழுந்தன.
ஆயினும் முதலமைச்சரோ
‘வருத்தமளிக்கிறது’ என்ற
ஒற்றைச் சொல்லை
உதிர்த்து முடித்துக்
கொண்டார்! ஆனால்,
ரமேஷ் கொலைக்கு
முதலமைச்சர் கடும்கண்டனம்
தெரிவித்தார்.
ரமேஷ் குடும்பத்துக்கு
ஆழ்ந்த இரங்கல்
தெரிவித்தார்.
பாஜகவினர்
இது அரசியல் கொலை
என்கிறார் கள். இது
அரசியல் கொலையா,
ஆதாயக் கொலையா
என்பதை சிறப்பு
புலனாய்வுக் குழு
கண்டுபிடித்தாக
வேண்டும். ஆனால்
முதலமைச்சரின்
அறிவிப்புக்கு
அடுத்த நாளே, ரமேஷ்
கொலையோடு தொடர்புபடுத்தி
குற்றவாளி என அடையாளப்படுத்தும்
ஒருவரின் மாதிரி
படத்துடன், அத்வானி
ரத யாத்திரைப்
பாதையில் வெடி
குண்டு வைத்த குற்றம்
உள்ளிட்ட பல கொலைக்
குற்றச்சாட்டுகளில்
தொடர்புடையோர்
என்ற அறிவிப் புடன்
மூன்று இஸ்லாமியர்களுடைய
படங்களை காவல்துறை
அவசர அவசரமாக வெளியிட்டிருக்கிறது.
புலனாய்வு
தொடங்கும் முன்பே
குற்றவாளிகளை
முடிவு செய்தது
எப்படி என்ற கேள்வி
எழுகிறது. காவல் துறைக்குப்
பொறுப்பு வகிக்கும்
முதலமைச்சரின்
அறிக்கை இதற்கு
விளக்கமளிக்கிறது.
காவல் துறை
யில் உள்ள மத தீவிரவாத
சிறப்பு புலனாய்வு
பிரிவு முடுக்கிவிடப்பட்டுள்ளதாக
அறிவித்துள்ளார்.
தெளி வான திசையில்
செல்லுமாறு காவல்துறைக்கு
உத்தர விட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
இந்த அடிப்படை
யிலேயே காவல்துறை
தேடப்படும் குற்றவாளிகளின்
படத்தை வெளியிட்டுள்ளது.
ஆக பாஜக,
இந்து இயக்கத்
தலைவர்கள் எங்காவது
கொல்லப்பட்டால்
அதற்கு முஸ்லீம்கள்
மட்டுமே காரணம்
என்ற முடிவின்
அடிப்படையில்
ஜெ அரசாங்கம் செயல்படுகிறது. இஸ்லாமை
சாத்தானாக வும்
இஸ்லாமியர்களை
தீவிரவாதிகளாகவும்
சித்தரிக் கும்
அமெரிக்காவின்
கொள்கையை ஹிலாரி
கிளின்ட னுடன்
கைகுலுக்கும்
ஜெயலலிதாவும்
பின்பற்றுகிறார்.
கட்சித்
தலைவர் கொல்லப்பட்டதைக்
கண்டித்து எதிர்ப்பு
தெரிவிப்பது கட்சிகளின்
வழக்கம்தான். தமிழக
மக்களின் உயிருள்ள
பிரச்சனைக்காக
பந்த் எதுவும்
நடத்தாத பாஜக ரமேஷ்
கொலையைக் கண்டித்து
ஆர்ப்பாட்டங்கள்,
சாலை மறியல்கள்
என இறங்கியது.
ஒரு நாள் பந்த்
போராட்டத்துக்கும்
அழைப்பு விடுத்தி
ருந்தது! முதலமைச்சரின்
கண்டனம், இரங்கல்,
விசாரணை அறிவிப்புக்குப்
பிறகும் பந்த்
போராட்டத்தை பாஜக
திரும்பப் பெற்றுக்
கொள்ளவில்லை.
இளவரசனின்
சந்தேகத்துக்குரிய
மரணத்தை அடுத்து
ஆயிரக்கணக்கில்
திரண்ட தலித்துகளை
தடுத்து நிறுத்தவும்
போராட்டங்கள்
நடத்துவதை தடுக்கவும்
தருமபுரி மாவட்டம்
முழுவதும் அதிமுக
ஆட்சி 144 தடை உத்தரவு
போட்டது. அரசியல்
கட்சித் தலைவர்கள்
அதிலும் தலித்
கட்சித் தலைவர்
கள் மாவட்டத்திற்குள்
நுழைவதற்கு தடை
விதித்தது. இளவரசனின் இறுதிச்
சடங்கில் கலந்து
கொள்வதற்கு திருமாவளவனுக்கு
தடை விதிக்கப்பட்டது.
இகக(மா) சட்டமன்ற
உறுப்பினர்கள்
பாலபாரதிக்கும்
டெல்லிபாபு வுக்கும்
அனுமதி வழங்கிய
அரசாங்கம், விடுதலை
சிறுத்தைக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
திருமாவளவனுக்கு
அனுமதி மறுத்துவிட்டது.
மீண்டும் மீண்டும்
தாக்கப்படுகிற
தலித் சமூகம் தங்கள்
நியாயமான எதிர்ப்புகளை
உரிமைகளை வெளிப்படுத்தத்
தடை, ஆனால், பாஜகவின்
அவசியமற்ற பந்த்துக்கு
தடையில்லை.
பாஜக பந்த்தின்
போது பல இடங்களில் பாஜக
வினர் வன்முறையில்
இறங்கியுள்ளனர்.
பேருந்துகள்
அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
கண்ணாடிகள்
உடைக்கப்பட்டுள்ளன.
கடைகளை மூடுமாறு
வியாபா ரிகளை அச்சுறுத்தியுள்ளனர்.
காவல்துறை
யாரையும் தடுத்து
நிறுத்தவோ பொதுச்
சொத்துக்களை பாதுகாக்
கவோ முயற்சிக்கவில்லை.
சேதப்படுத்திய
பாஜக தலைவர்கள்,
தொண்டர்கள் மீது
வழக்கேதும் இல்லை.
தமிழ்நாட்டையே
144 தடை உத்தரவின்
கீழ் கொண்டு வரும்
முதலமைச்சர் தனக்கு
வேண்டியவர்களுக்கு
ஒரு நீதி, வேண்டாதவர்களுக்கு
ஒரு நீதி எனச்
சொல்கிறார்! இந்துத்துவா
பாஜக வன்முறை நடத்த
அனுமதி, ஒடுக்கப்பட்ட
தலித்துகளுக்கு
தலைவர்க ளுக்கு
தடை! சமூக நீதி
காத்த வீராங்கனையின்
பல்லாண்டு பேசும்
ஈராண்டு சாதனை
இது!
பந்த்துக்கு
மக்களிடையே ஆதரவு
இல்லா தபோதும்
பல்லாயிரம் பேர்
கைது சென்னை யில்
36 இடங்களில் மறியல்
என்பது போன்ற செய்திகளுடன்
படங்களையும் பெரிய
அளவில் ஊடகங்கள்
வெளியிட் டிருந்தன.
பதினோறு பேர் கலந்து
கொண்ட ஆர்ப்பாட்
டத்தையும் படத்துடன்
வெளியிட்டு தினமணி
போன்ற நாளேடுகள்
அதிக முக்கியத்துவம்
கொடுத்தன! மாநில
அளவிலான பந்த்துக்கு
அழைப்பு விடுகிற
அளவுக்கு பெரிய
கட்சி என்ற தோற்றத்தை
உருவாக்கிக் கொள்ள
விரும்பிய பாஜகவின்
திட்டத்துக்கு
ஆதரவு தெரிவிப்
பதாகவே ஜெயலலிதாவின்
செயலும் ஊடகங்களின்
அணுகுமுறையும்
இருந்துள்ளன.
ரமேஷ்
கொலையை அரசியலாக்க
விரும்ப வில்லை
எனக் கூறியுள்ளார்
வெங்கைய்ய நாயுடு. ஆனால்,
முதலமைச்சரின்
சிறப்பு புலனாய்வுக்
குழு விசாரணையை
வரவேற்று முதலமைச்சருக்கு
நன்றியும் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள்
பற்றி துப்புக்
கொடுப் பவர்களுக்கு
ரூ.22 லட்சம் பரிசு
தரப்படும் என்று
காவல்துறை அறிவித்துள்ளது.
தேசிய நலன் கருதி
22 லட்சத்துக்கு
அதிகமாகக் கூட
பரிசு கொடுக்கலா
மென்று பாஜக மாநிலத்
தலைவர் பொன்.ராதாகிருஷ்
ணன் கருத்துக்
கூறியுள்ளார்!
இந்துக்கள்தான்
தேசம் என்று கூறுகிறார்.
பிரதமர் வேட்பாளர்
என்று அறிவிக்
கப்பட்டுள்ள மோடியும்
தன்னை இந்து தேசியத்
தலைவர் என்று கூறிக்
கொள்கிறார்.
ஓராண்டில்
12 பேர் தாக்கப்பட்டுள்ளதாகவும்
கொல்லப்பட்டுள்ளதாகவும்
பாஜக கூறுகிறது. இதன்
பின்னணியை ஆய்வு
செய்வதற்காக மூவர்
குழு ஒன்றையும்
பாஜக தலைமை அனுப்பி
வைத்துள்ளது.
பல சம்பவங்கள்
நடந்திருந்த போதும்
ரமேஷ் கொலை விசயத்தில்
பாஜக கொந்தளிப்பது
ஏன்? நாடாளுமன்ற
தேர்தல் தயாரிப்பு
விறுவிறுப்படைந்து
வருகிற வேளை யில்
பாஜகவின் தேர்தல்
பிரச்சாரக் குழுத்
தலைவராக ஜெயலலிதாவின்
அரசியல் நண்பர்
மோடி நியமிக்கப்
பட்டுள்ள பின்னணியில்
பாஜக தமிழ் நாட்டில்
தனது தோற்றத்தை
மேம்படுத்திக்
கொள்ள ஆடிட்டர்
ரமேஷ் கொலையை திறம்பட
பயன்படுத்திக்
கொள்ளப் பாடுபடு
கிறது. கல்லூரி
மாணவி இஷ்ரத் ஜெஹான்
போலி மோதலில் கொல்லப்பட்டிருக்கிறார்
என்ற உண்மை வெளிச்சத்துக்கு
வந்துவிட்ட பிறகும்
அது போலி மோதல்
என்று சொல்கிறார்களே
என ஆதங்கபடுகி
றார் பாஜக தேசிய
செயற்குழு உறுப்பினர்
இல.கணே சன்! ரமேஷ்
கொலையையும் இஷ்ரத்
ஜெஹான் கொலையையும்
இணைத்துப் பேச
வேண்டிய அவசிய
மென்ன? மோடி முதற்கொண்டு
ரமேஷ் வரை தாக்கப்
படுகிறார்கள்
என்று காட்டி அனுதாபத்தை
சம்பாதிக்க விரும்புகிறார்
கணேசன்!
யாருடனும்
கூட்டு சேராமல்
தனித்துப் போட்டி
யிட்டு 40 தொகுதிகளையும்
பிடிக்கும் திட்டத்துடன்
இருக்கும் ஜெ. ஒரு வலுவான
எதிரணி உருவாகாமல்
இருப்பதற்காகவே
திமுக, தேமுதிக,
பாமக உள்ளிட்ட
கட்சிகள் மீது
ஓயாத தாக்குதலில்
இறங்கி உள்ளார்.
ஆனாலும், பாஜகவுக்கு
இத்தனை அனுசரணையாக
ஆதரவாக இருப்பதன்
காரணம் என்ன?
காரணம் வெளிப்படையானது.
பாஜக அதிமுகவுக்கு
சவாலாக இருக்கப்
போவதில்லை. மேலும் தமிழக
பாஜகவை சந்தோசப்படுத்துவது
அகில இந்திய பாஜகவிடமிருந்து
ஆதாயம் பெற முடியும்.
தமிழ்நாட்டில்
உண்மையான இடது
ஜனநாயக, தலித்,
சிறுபான்மை மக்கள்
போராட் டங்கள்
வளர்வது ஜெயலலிதாவுக்கு
இனிப்பானதல்ல.
பெரும்தொழில்குழும
- பாசிச பாஜக வளர்வது
இனிப் பானது.
ஏனெனில் அதிமுகவுக்கும்
பாஜகவுக்கும்
கொள்கை நெருக்கம்
அதிகம். கூட்டணி
நெருக்கம் எப்படியான
போதிலும் கொள்கை
நெருக்கம்தானே
முக்கியம்!
பாஜக
பந்த்தை பாட்டாளி
மக்கள் கட்சியும்
இந் திய ஜனநாயக
கட்சியும் ஆதரித்துள்ளன. தேமுதிக
தலைவர்கள் ரமேஷ்
வீட்டுக்குச்
சென்று ஆறுதல்
தெரி வித்துவிட்டு
வந்துள்ளனர்.
திமுக, மதிமுக
உள்ளிட்ட கட்சிகளும்
ரமேஷ் கொலையைக்
கண்டித்துள்ளனர்.
ஜனநாயகத்தில்
கொலைக்கு இடமில்லை
என்றும் கூறியுள்ளனர்.
நல்லது ஒரு அரசியல்
சதியின் மூலம்
இஷ்ரத் ஜெஹான்
உள்ளிட்ட பலரை
பொய்யான மோத லில்
அரக்கத்தனமாக
சுட்டுக் கொன்றது
ஜனநாயகமா என்று
கேட்க இந்தக் கட்சிகளுக்கு
துணிச்சல் இல்லாமல்
போனது ஏன்?
தமிழ்நாட்டில்
கட்சிப் பிரமுகர்கள்
பலரும் தொடர்ந்து
கொலை செய்யப்படுகின்றனர்
இந்தக் கொலைகள்
பெரும்பாலும்
தொழில் போட்டி, அதிகாரப்
போட்டி காரணமாகவே
நடைபெறுகிறது.
அதிலும் பெரும்தொழில்
மய்யமாக வளர்ந்து
வருகிற இடங்களில்
எல்லாம் இத்தகைய
கொலைகள் அதிகம்
நடக்கின் றன.
செங்கல்பட்டு
மாவட்டம் முதலிடம்
வகிக்கிறது. இருக்கிறது.
திமுக, அதிமுக
கட்சிகளைச் சேர்ந்தவர்
களே அதிகம் கொல்லப்படுகிறார்கள்.
தா.கிருஷ்ணன்
முதற்கொண்டு சமீபத்தில்
கொல்லப்பட்ட அதிமுக
முருகன் வரை நீண்ட
பட்டியலைக் காட்ட
முடியும். ரியல் எஸ்டேட்
தொழிலில் ஈடுபடும்
நில மாபியாக் களுக்கு
அரசியல் போர்வை
ஆளுங்கட்சி அடையா
ளம் தேவைப்படுகிறது.
அரசியல் தலைவர்கள்
தங்கள் அரசியல்
அந்தஸ்தை வைத்துக்
கொண்டு ரியல் எஸ்டேட்
தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களுக்குள்
மோதல் கொலை வரை
செல்கிறது. இவற்றை அரசியல்
கொலைகள் என்று
கொண்டால் அரசியல்
கொலைகள் அதிகம்
நடைபெறுகிற மாநிலம்
தமிழ்நாடாகத்தான்
இருக்கும்.
பாஜகவின்
மாவட்ட மாநிலத்
தலைவர்கள் பலரும்
நகர்ப்புற ரியல்
எஸ்டேட் தொழிலில்
ஈடுபடுபவர்கள். ரியல்
எஸ்டேட் மாபியாக்களுடன்
கந்துவட்டிக்
கும்ப லுடன் நெருக்கம்
உள்ளவர்கள். இஸ்லாமியர்கள்
பொருளாதார செல்வாக்குடன்
இருக்கும் இடங்களில்
இவர்கள் இஸ்லாமியர்களுக்கு
எதிரான வெறுப்பு
பிரச்சாரத்தை
கட்டவிழ்த்து
விடுகிறார்கள்.
முஸ்லீம் களை
தொழில்ரீதியாக
ஒழித்துக்கட்ட
நேரடியாகவோ மறைமுகமாகவோ
உதவுகிறார்கள்.
இதன் விளைவாக
இவர்கள் தாக்குதலுக்கும்
ஆளாகிறார்கள்.
முதலமைச்சரின்
அன்பைப் பெற்ற
டிஜிபி ராமா னுஜம்
ஜூலை 26 அன்று வெளியிட்டுள்ள
நீண்ட அறிக்கை
இதை தெளிவுபடுத்துகிறது. ஆனால்,
இந்த அறிக்கையை
முதலமைச்சரின்
அறிக்கைக்கு முன்பா
கவே ஏன் வெளியிடவில்லை
என்ற கேள்வி நியாய
மானது. எட்டு
நாள் கழித்து வெளியிடுவதன்
அவசியம் என்ன?
இஸ்லாமியர்களை
நோக்கி கை காட்டியுள்ள
முதலமைச்சரின்
செயல் இஸ்லாமியர்களை
அதிருப்தி கொள்ள
வைத்துள்ளது என்பதுதான்
காரணம்.
பாஜக
அதிமுக தொடங்கி
பல கட்சிகளும்
ஊட கங்களும் காவல்துறையும்
கொலையை அரசியலாக்கப்
பார்க்கின்றன. கொலைகளை
அரசியலாக்குவது
முத லாளித்துவ
கட்சிகளுக்கு,
தமிழ்நாட்டுக்குப்
புதிதல்ல. மேலே
வரிசைப்படுத்தப்பட்டுள்ள
நிகழ்வுகளை விருப்பு
வெறுப்பின்றி
பார்த்து இது அரசியல்
கொலையா, கொலை அரசியலா
என்று வாசகர்கள்
முடிவுக்கு வர
வேண்டும். பாஜக
உள்ளிட்ட கட்சிகள்
அரசியல் கொலைகள்
நடக்கக் கூடாது
என்று உண்மையிலேயே
விரும்பினால்
அக்கட்சிகளில்
உள்ள ரியல் எஸ்டேட்
மாபியா, கிரிமினல்
பேர் வழிகளை அப்புறப்படுத்த
வேண்டும்.
********
ஜார்க்கண்டில்
அமைகிற புதிய அரசாங்கத்துக்கு
சூறையாடல் பலமடங்கு
அதிகரிப்பு என்று
பொருள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யாவுடனான நேர்காணல்
கேள்வி:
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட்
- லெனினிஸ்ட்) சட்டமன்றம்
கலைக்கப்பட வேண்டும்
என்று கோரியுள்ளது.
ஜேஎம்எம்மின்
ஹேமந்த் சோரன்
தலைமையிலான அரசாங்கத்தை
உருவாக்க, இப்போது,
ஜேஎம்எம், காங்கிரஸ்
மற்றும் ஆர்ஜேடி
அடங்கிய ஒரு புதிய
கூட்டணி எழுந்துள்ளது.
தற்போதைய அரசியல்
மாற்றங்களை நீங்கள்
எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: புதிய
அரசாங்கம் மற்றுமொரு
சந்தர்ப்பவாத
கார்ப்பரேட் ஆதரவு
கூட்டணி. இன்னும்
கூடுதலான கோல்கேட்டுகளைத்தான்
காங்கிரசால் தர
முடியும். ஜார்க்கண்டில்
காங்கிரஸ் நேரடியாக
ஆட்சியில் இல்லாதபோதே,
சுபோத்காந்த்
சஹாய், நவீன் ஜிந்தால்
போன்ற காங்கிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
ஜார்க்கண்டின்
விலைமதிப்பற்ற
செல்வாதாரங்களை
கொள்ளையடிப்பதில்,
சூறையாடுவதில்
பெரிதும் ஈடுபட்டிருந்தனர்.
இப்போது அவர்கள்
நேரடியாக ஆட்சியில்
இருப்பதால், கொள்ளை
பல மடங்கு அதிகரிக்கும்.
பாஜகவுடனோ,
காங்கிரசுடனோ
கூட்டணி வைப்பதில்
ஜேஎம்எம்முக்கு
எந்தப் பிரச்சனையும்
இல்லை. பீகாரில்
அய்க்கிய ஜனதா
தளத்தை ஆதரித்துக்
கொண்டு, ஜார்க்கண்டில்
ஆர்ஜேடியுடன்
அதிகாரத்தை பகிர்ந்து
கொள்வதில் காங்கிரசுக்கு
எந்தப் பிரச்சனையும்
இல்லை.
சட்டமன்றம்
கலைக்கப்பட்டு
தேர்தல்கள் புதிதாக
நடத்தப்பட வேண்டும்
என்று நாங்கள்
கோருகிறோம். ஏனென்றால்,
அதிகாரப் பசி கொண்ட
சந்தர்ப்பவாதிகளை,
கார்ப்பரேட் கொள்ளையின்
மேலாளர்களை, அதை
முன்னேற்றுபவர்களைத்
தண்டிக்க, ஜார்க்கண்ட்
மக்களுக்கு ஒரு
வாய்ப்பு வேண்டும்
என்று நாங்கள்
கருதுகிறோம். அது நடக்கவில்லை;
ஆனால், சந்தர்ப்பவாதம்
மற்றும் கார்ப்பரேட்
கொள்ளைக்கு எதிரான
எங்கள் போராட்டத்தைத்
தீவிரப்படுத்துவதில்
நாங்கள் உறுதியாக
இருக்கிறோம்.
கேள்வி:
மதவாத சக்திகளை
இந்தக் கூட்டணி
கட்டுக்குள் வைத்துள்ளது
என்று காங்கிரசும்
பிற கூட்டாளிகளும்
சொல்கின்றனர்.
இதை நீங்கள்
ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில்: காங்கிரஸ்
எப்போதுமே மதவாத
சக்திகளை அமைதிப்படுத்தி
துணிவூட்டி வந்திருக்கிறது.
பாஜகவை, சங்பரிவாரை
விஞ்ச, காங்கிரசே
சமயங்களில் போட்டி
மதவாதத்தை நடைமுறையாகக்
கொண்டிருக்கிறது.
காங்கிரஸ்
மதவாதத்தை எதிர்கொண்டதாக
சான்றுகள் இல்லை.
காங்கிரசின்
ஆட்சியில் பாஜக
வளர்வதை வேறெப்படி
விளக்க முடியும்?
மதவாத சக்திகளை
கட்டுக்குள் வைப்பதாகச்
சொல்வது ஒரு வெற்றுக்
கூற்று. உண்மை
என்னவென்றால்,
காங்கிரஸ் ஓட்டுநர்
இருக்கையில் இருந்து
கொண்டு கார்ப்பரேட்
கொள்ளையை நிர்வகிக்க
விரும்புகிறது.
கேள்வி:
பாஜகவும் ஜேவிஎம்மும்
ஹேமந்த் சோரன்
தலைமையில் ஆட்சி
அமைவதற்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.
கறை படிந்த
சட்டமன்ற உறுப்பினர்களுடன்
காங்கிரஸ் குலாவுவதாகவும்
கூட்டணிக் கட்சிகளுடன்
திரைமறைவு ஊடாடல்கள்
வைத்திருப்பதாகவும்
அவர்கள் குற்றம்
சுமத்துகின்றனர்.
மற்ற எதிர்க்கட்சிகளில்
இருந்து இகக (மாலெ)
எப்படி ஒரு தெளிவாக
வரையறுக்கப்பட்ட
பிரித்து நிறுத்தும்
கோட்டைப் போடுகிறது?
பதில்: ஈயம்
பித்தளையைப் பார்த்து
இளித்த கதை இது.
பாஜகவிடம்
இருந்து பிரிந்து
போனதால் மட்டும்
ஜேஎம்எம் கூடுதல்
கறை படிந்ததாகிவிட்டதா?
பாஜகவும் ஜேவிஎம்மும்
கறைபடிந்த தலைவர்கள்
நிறைந்த கட்சிகளல்லவா?
மதச்சார்பின்மை
சான்றிதழ் வழங்க
காங்கிரசுக்கு
உரிமை இல்லாததுபோலவே,
நேர்மைக்கான முத்திரைகளை
வழங்க பாஜகவுக்கும்
ஜேவிஎம்முக்கும்
உரிமை இல்லை.
கேள்வி:
ஊழல் பேர்வழிகளின்,
ஊழல் அரசியல்வாதிகளின்
விளைநிலமாக ஜார்க்கண்ட்
மாறிவிட்டது. நவீன் ஜிந்தாலும்
சுபோத்காந்த்
சஹாயும் சமீபத்தில்
கோல்கேட் ஊழலில்
குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.
2010 மாநிலங்களவை
தேர்தலின்போது
நடந்த குதிரைபேர
ஊழலில் 11 சட்டமன்ற
உறுப்பினர்கள்
குற்றச்சாட்டுகள்
எதிர்கொள்கிறார்கள்.
இன்னும் பலரும்
மத்திய புலனாய்வு
துறையின் பார்வையில்
இருக்கிறார்கள்.
மது கோடாவும்
அவரது கூட்டாளிகளும்
பல்லாயிரக்கணக்கான
கோடி ரூபாய் ஊழல்
குற்றச்சாட்டில்
இன்னும் சிறையில்
இருக்கிறார்கள்.
இந்த அரசியல்
சூழலில் மக்கள்
விருப்பங்கள்
எப்படி நிறைவேற்றப்படும்?
பதில்: ஜார்க்கண்ட்
உருவானதில் இருந்து
ஊழலும் கார்ப்பரேட்
கொள்ளையும் ஜார்க்கண்டின்
துயரங்களாகிவிட்டன.
சித்தோ, கனு,
பிர்சா போன்றவர்கள்
காலனிய ஒடுக்குமுறையாளர்களுக்கு
எதிராகப் போராடினார்கள்.
தனிமாநில கோரிக்கையை
வென்றெடுக்க, டில்லியிலும்
பாட்னாவிலும்
இருந்த அரசாங்கங்களுக்கு
எதிராக ஜார்க்கண்ட்
இயக்கம் போராடியது.
இப்போது வளர்ச்சிக்கான,
ஜனநாயகத்துக்கான
மக்களின் விருப்பங்களை
யதார்த்தமாக்க,
கார்ப்பரேட் கொள்ளை
மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு
எதிரான நமது போராட்டத்தை
நாம் தீவிரப்படுத்த
வேண்டும்.
கேள்வி:
மாநிலத்தில் இடதுசாரி
ஒற்றுமைக்கான
புதிய முன்முயற்சிகளை
இககமாலெ எடுத்து
வருகிறது. இப்போது,
மார்க்சிஸ்ட்
ஒருங்கிணைப்பு
கமிட்டியின் சட்டமன்ற
உறுப்பினரான அருப்
சேட்டர்ஜி அரசாங்கத்தில்
பங்கு வகிக்கிறார்.
இதுபோன்ற நிலைமைகளில்
இடதுசாரி ஒற்றுமை
என்பதை எப்படி
தொடர்வீர்கள்?
பதில்: காங்கிரசுடன்
கூட்டணி என்ற எம்சிசியின்
முடிவு துரதிர்ஷ்டவசமானது.
ஒன்றுபட்ட
இடதுசாரி இயக்கம்
என்ற இயக்கப்போக்கு,
விவாதங்கள், வேறுபாடுகள்
என்ற வளைந்து நெளிந்த
பாதையில்தான்
செல்ல வேண்டியிருக்கும்.
அரசாங்கம்
மக்கள் விரோதப்
பாதையை பின்பற்றும்போது,
அரசாங்க ஆதரவு
இடதுசாரி ஒற்றுமை
இருக்க முடியாது.
இடதுசாரி இயக்கத்தின்
ஒற்றுமையும் திசைவழியும்,
எப்போதும், மக்கள்
மாற்றுக்கான மக்கள்
போராட்டங்களின்
ஊடே தீர்மானிக்கப்படும்.
கேள்வி:
மாநிலத்தில் பொதுவாக
இடதுசாரிகளுக்கும்
குறிப்பாக இகக
மாலெவுக்கும்
என்ன பாத்திரம்,
என்ன வாய்ப்பு
இருப்பதாக நீங்கள்
கருதுகிறீர்கள்?
பதில்: இடதுசாரிகளுக்கு,
குறிப்பாக, நாட்டில்
உள்ள இடதுசாரி
இயக்கத்தின் மிகவும்
கோட்பாட்டுரீதியான,
விடாப்பிடியான,
உறுதியான பிரிவான
இகக மாலெவுக்கு
நல்ல வாய்ப்புக்கள்
உள்ளன. சந்தர்ப்பவாதம்
மற்றும் ஊழலால்
மக்கள் வெறுப்படைந்து
உள்ளனர். ஜார்க்கண்டில்
மக்கள் மத்தியில்
தங்களுக்கு துரோகம்
இழைக்கப்பட்டுள்ளதாக
ஓர் ஆழமான உணர்வு
உள்ளது. அடுத்தடுத்த
அரசாங்கங்களால்
அவர்கள் ஏமாற்றப்பட்டதாக,
கைவிடப் பட்டதாக
உணர்கிறார்கள்.
காங்கிரஸ், பாஜக
போன்ற பெரிய தேசிய
கட்சிகளானாலும்
சரி, அதிகாரத்தில்
இருந்த ஜேஎம்எம்,
ஜேவிஎம், ஏஜேஎஸ்யு
போன்ற முக்கியமான
பிராந்திய சக்திகளானாலும்
சரி, மக்கள் நலன்களுக்கு
துரோகம் இழைப்பதில்,
பொதுச் செல்வத்தைக்
கொள்ளையடிப்பதில்
கையும் களவுமாக
பிடிபட்டுள்ளனர்.
உண்மையான மாற்றத்துக்கான
அதிகரிக்கிற விருப்பமும்,
மக்கள் நலன்களைப்
பாதுகாக்க, மாற்றத்தைக்
கொண்டுவர மாலெ
கட்சி ஆற்றிய பாத்திரத்துக்கு,
அது கொடுத்த விலைக்கும்
ஆதரவும் காணப்படுகிறது.
மக்களின் விருப்பங்களுக்கு
நாம் ஸ்தூலமான
வடிவம் தர வேண்டியுள்ளது.
ஜார்க்கண்டில்
பூர்விகக் குடிகளின்
போராட்ட முகாமுக்குள்
ஒற்றுமைக்கான,
இடதுசாரிகளுடன்
ஒத்துழைப்புக்கான
புதுப்பிக்கப்பட்ட
விழிப்புணர்வும்
காணப்படுகிறது.
இது ஒரு நல்ல
அறிகுறி. நாம்
இந்தத் திசையில்
முன்செல்ல வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய
வளர்ச்சி என்ற
பெயரில், கார்ப்பரேட்
சூறையாடலுக்கு
உதவ, அனைத்து ஒடுக்கப்பட்ட,
ஓரங்கட்டப்பட்ட
மக்களையும் அரசு
மிருகத்தனமாக
வெளியேற்றும்போது,
ஓரங்கட்டப்பட்ட,
வறிய, போராடுகிற
மக்களின் அனைத்து
பிரிவினரையும்
ஒன்றிணைத்து, மக்கள்
எதிர்ப்பு இயக்கத்தைத்
தீவிரப்படுத்த
இகக மாலெ தனது
முயற்சிகளைத்
தொடரும்.
லிபரேசன்,
ஆகஸ்ட் 2013
********
நாய்க்குட்டியைக்
கொன்ற உங்கள் கார்
விபத்துக்குள்ளாகப்
போகிறது....
நரவேட்டை
நரந்திர மோடி அவர்களுக்கு,
நீங்கள்,
வெறும் நரந்திர
மோடியாக அல்லாமல்
நரவேட்டை நரேந்திர
மோடி என்றே பொதுவாக
அழைக்கப்படுவதை
தாங் கள் அறிவீர்கள். அந்த
அடைமொழி இல்லாமல்
உங்களைப் பற்றிக்
குறிப்பிடுவது
முழுமையா னதாக
இருப்பதில்லை.
2002 குஜராத்
மனிதப் படுகொலை
பற்றி சமீபத்தில்
சொன்னபோது, நாய்க்குட்டிகள்பால்
நீங்கள் கொண்டுள்ள
கரிசனம் பற்றி குறிப்
பிட்டிருந்தீர்கள்.
கார் சக்கரத்தில்
நாய்க்குட்டி
ஒன்று மாட்டிக்
கொண்டு செத்துப்போனால்,
நீங்கள் பின்இருக்கையில்
இருந்தாலும் உங்கள்
மனம் துடிப்பதில்லையா
என்று கேட்டீர்கள்.
அது உங்கள்
குழந்தை மனத்தைக்
காட்டுகிறது என்று
உங்கள் கட்சிக்காரர்கள்
சொன்னார்கள்.
அப்படிச் சொன்னதில்
தவறென்ன இருக்கிறது
என்று தொலைக்காட்சிகளில்
எதிர்க்கட்சிக்
காரர்களிடம் எதிர்கேள்விகள்
கேட்டார்கள்.
எங்களுக்குப்
புரிகிறது.
நோபல் பரிசு
பெற்ற லத்தீன்
அமெரிக்க எழுத்தாளர்
காப்ரியல் கார்சியா
மார்க்வெஸ் லவ்
இன் த டைம்ஸ் ஆஃப்
காலரா என்ற தனது
கதையில் செல்லப்
பிராணிகளிடம்
அன்பைப் பொழியும்
மனிதர்கள், மனிதர்கள்
பால் கற்பனை செய்ய
முடியாத அளவுக்கு
மிகவும் கொடூரமாக
நடந்து கொள்ளும்
ஆற்றல் கொண்டவர்களாக
இருப்பார்கள்
என்று சொல்கிறார்.
செல்லப்
பிராணிகள் வளர்ப்பதை
கவுரவச் சின்னமாகக்
கருதுகிற குட்டி
முதலாளித்துவ
பொய்மைகளுக்கு
மார்க்வெஸ் சொல்வது
அதிர்ச்சி தரக்கூடும். ஆனால்,
நீங்கள், அவர்
சொல்வதில் இருக்கும்
உண்மையை உங்கள்
செயல்பாட்டில்
2002ல் மெய்ப்பித்தவர்.
தீர்க்கதரிசி
நீங்களா, மார்க்வெசா
என்ற விவாதத்தை
நான் இங்கு எழுப்பவில்லை.
நான் சொல்ல
வந்த விசயமும்
அதுவல்ல. அது ஓர்
எச்சரிக்கை தொடர்பானது.
நாய்க்குட்டிகளை
கார் ஏற்றிக் கொன்று
விடுவதைக் கூட
கேள்விக்கு உட்படுத்த,
வழக்கு தொடுக்க,
தண்டனைக்கு உட்படுத்த
ஜனநாயக நாட்டில்
சட்டங்கள் உண்டு. அதற்கான
சங்கங்கள் உண்டு.
நாய்க்குட்டியை
கார் ஏற்றிக்கொன்று
விட்டு எளிதில்
தப்பித்து விட
முடியாது. குறைந்தபட்சம்
அபராதமாவது செலுத்த
வேண்டியிருக்கும்.
நாய்க்குட்டியிடம்
இத்தனை கனிவு காட்டும்
நீங்கள் உண்மையில்
மனிதர்கள்பால்
எவ்வளவு கொடூரமாக
நடந்துகொண்டீர்கள்
என்பதை 2002 குஜராத்
எடுத்துக்காட்டியது.
நீங்கள்
செய்தது மனிதப்படுகொலை. ஆயிரக்கணக்கான
இசுலாமியர்களை
உங்கள் நேரடிப்
பார்வையில் உங்கள்
கட்சிக்காரர்கள்
வேட்டையாடினார்கள்.
இசுலாமிய ஆண்களும்
பெண்களும் குழந்தைகளும்
முதியவர்களும்
உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு
ஓடிய போது, கொடுவாள்களுடன்
அவர்களைக் கொல்லத்
துரத்தியவர்களைத்
தடுக்க நீங்கள்
எந்த முயற்சியும்
எடுக்கவில்லை.
மாறாக, அவர்கள்
தங்கள் சீற்றத்தை
வெளிப்படுத்தட்
டும் என்று அவர்களுக்கு
பச்சைக்கொடி காட்டினீர்கள்.
இசுலாமிய குடியிருப்புக்கள்
பற்றியெரிந்தன.
இசுலாமியர்
கடைகள் சூறை யாடப்பட்டன.
இசுலாமிய கர்ப்பிணிப்
பெண்கள் வயிற்றில்
சுமந்த குழந்தைகளுடன்
வாள்பாய்ச்சுக்கு
ஆளாகி உயிர்விட்டார்கள்.
2002ல் குஜராத்தில்
உங்கள் ஆட்சியில்
இசுலாமிய மக்கள்
மீது நடத்தப்பட்ட
கொடுந் தாக்குதல்கள்
பற்றி எழுதினால்
இப்போது கூட கைகள்
நடுங்குகின்றன. கண்களில்
நீர் தேங்க, முகத்தில்
மரணபயம் உறைந்திருக்க,
கூப்பிய கைகள்
விட்டு விடுங்கள்
என்று கெஞ்சிக்
கொண்டிருக்க, இந்தியாவின்
பத்திரிகைகளின்
முதல் பக்கத்தில்
வெளியான அந்த இசுலாமியர்
நிழல்படத்தை நாட்டு
மக்கள் மறக்க முடியாது.
பாதிக்கப்பட்ட
இசுலாமிய மக்கள்
பதினோரு ஆண்டுகளாக
நீதிகேட்டுப்
போராடிக் கொண்
டிருக்கிறார்கள்.
ஹிட்லரின்
கொலைபாதகச் செயல்களை
ஒத்த உங்கள் செயல்களை
உலகமே கண்டித்
தது. உலகெங்கும்
தனது பயங்கரவாதக்
கரங் களை பரப்பியிருக்கிற
அய்க்கிய அமெரிக்கா
கூட, தோற்றத்துக்காக,
தான் ஜனநாயகத்தைப்
பின்பற்றுவதாகக்
காட்டிக் கொள்ள
உங்க ளைத்தான்
பயன்படுத்தியது.
உங்களை தனது
நாட்டுக்கு வர
அனுமதிக்கவில்லை.
நீங்கள்
ஆயிரக்கணக்கான
இசுலாமியர் களை
துள்ளத்துடிக்கப்
படுகொலை செய்து
விட்டு அந்த மனிதப்
படுகொலையை விபத்து
என்று சொல்லப்
பார்க்கிறீர்கள். அந்த
விபத்து நடந்தபோது,
நீங்கள் பின்இருக்கையில்
இருந் ததாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
இஷ்ரத் ஜெஹான்,
சொராபுதின், அவரது
மனைவி ஆகியோர்
கொல்லப்பட்டபோதும்
நீங்கள்தான், உங்கள்
பிரியமான உள்துறை
அமைச்சர் அமித்
ஷாவு டன் பின்இருக்கையில்
இருந்திருக்கிறீர்கள்
என்று பல விவரங்கள்
வெளியாகியுள்ளன.
கார் உங்களுடையது.
ஓட்டுநர் உங்கள்
ஒப்புதலுட னேயே,
உங்கள் கட்டளைப்படியே
ஓட்டி னார் என்பதும்
உண்மை.
இத்தனையும்
செய்துவிட்டு,
நாய்குட்டி மீது
கார் ஏறிவிட்டது,
நான் தவறேதும்
செய்யவில்லை, ஏனென்றால்
நான் பிடிபட வில்லை
என்று உங்களால்
சொல்ல முடிகிறது
என்றால், மார்க்வெஸ்
சொன்னதன் மனித
வடிவமல்லவா நீங்கள்?
உங்கள் நரவேட்டை
நடவடிக்கைகளுக்கு
நீங்கள் குஜராத்தை
குத்தகை எடுத்துக்
கொண்டது போல் உங்கள்
கட்சிக்காரர்கள்
நாடு முழுவதும்
வெவ்வேறு பகுதிகளை
வித விதமான பாசிச
தாக்குதல்களுக்கு
பரிசோ தனைக் கூடங்களாக்குகிறார்கள்.
அயோத்தி யில்
கோயில் கட்டச்
சொல்கிறார்கள்.
ஆங்கி லம் படிக்கக்
கூடாது என்கிறார்கள்.
பெண்கள் ஆண்களுடன்
பழகக் கூடாது என்கிறார்கள்.
ஒரு பக்கம்
கலாச்சாரக் காவலர்களாக
பாசிச நடவடிக்கைகளில்
ஈடுபடும் அதே நேரம்,
மறுபக்கம் கார்ப்பரேட்
காவலர்களாக தேசத்
தின் செல்வம் சூறையாடப்படுவதற்கு
துணை போகிறார்கள்.
சிங்கூர் மக்களால்
விரட்டப் பட்ட
டாடாவுக்கு அபயம்
தந்தது நீங்கள்தான்.
மேற்கத்திய
கலாச்சாரம் வேண்டாம்,
ஆனால், நவதாராளவாதக்
கொள்கை வேண்டும்
என்கிறீர்கள்.
இந்த ஆபத்தான
பாசிச - கார்ப்ப
ரேட் கலவை நாட்டு
மக்களுக்கு, நாட்டு
மக்கள் நலன்களுக்கு
விரோதமானது. கடுமை யான நம்பகத்தன்மை
இழப்புக்கு ஆளாகியுள்ள
காங்கிரசை நம்பிப்
பயனில்லை என்பதால்
கார்ப்பரேட் நிறுவனங்களும்
மோடி மந்திரம்
ஜெபிக்கத் துவங்கிவிட்டன.
உங்கள் காட்டில்
கார்ப்பரேட் மழை
பெய்கிறது. ஆனால், குஜராத்தில்
ஒட்டுமொத்த மக்கள்
வளர்ச்சி, இசுலாமிய
மக்கள் மகிழ்ச்சி
என்று காட்டப்
படுவது காத்திரமான
ஆய்வுக்கு உட்படுத்தப்
பட்டால் உண்மை
வெளிவரும்.
அன்று
உங்கள் ஆசான் அத்வானியின்
ரதம் நாட்டை வலம்
வந்தபோதும் ரத்த
ஆறு ஓடி யது. கடப்பாரைக்
கூட்டங்கள் பாப்ரி
மசூதியை இடித்துத்
தகர்த்தன. கூடவே இசுலாமிய
மக் கள் இந்திய
அரசியல் சாசனத்தின்
மீது கொண் டிருந்த
நம்பிக்கையும்
தகர்க்கப்பட்டது.
நாட் டின் ஒரு
மிகப்பெரிய மனிதப்பிரிவை
அச்சத் தில், நம்பிக்கையின்மை
இருட்டில் தள்ளி
விட்டு நாட்டை
ஆள வாய்ப்பு கேட்டார்கள்.
நீங்கள்
நவீனத்தில் ஆர்வமுடையவர்
என்பதால் காரில்
பயணிக்கிறீர்கள். ஆயினும்
பாதையிலும் பயணத்திலும்
பெரிய வேறுபாடு
ஏதும் இல்லை.
அதே ரத்த ஆறு.
அதே இசுலா மியர்
வேட்டை. 2002ல்
குஜராத்தில் நடத்தி
யதை நாடு முழுவதும்
நடத்த இப்போது
நீங்கள் வாய்ப்புக்
கேட்கிறீர்கள்.
நான் ஒரு இந்து
தேசியவாதி என்று
நீங்கள் சொல்கிறீர்கள்.
நான் ஒரு இசுலாமிய
தேசியவாதி என்று
ஓர் இசுலாமியர்
சொல்வதை உங்களால்
ஏற்றுக் கொள்ள
முடியுமா? கடப்பாரைகளுடனும்
கொலைவாள்களுடனும்
காத்திருக்கும்
உங்கள் கட்சிக்காரர்கள்
அடுத்த நரவேட்டையில்
இறங்கிவிட மாட்டார்களா?
இந்தியா போன்ற
பல மதங்களைச் சேர்ந்த
மக்கள் நல்லிணக்கத்து
டன் சேர்ந்து வாழும்
ஒரு நாட்டை ஆள்பவருக்கு
இந்திய மக்கள்
நலனே மேலானதாக
இருக்க வேண்டும்
என்பது சாமான்ய
மக்களின் எதிர்ப்
பார்ப்பு. அந்த
சாதாரண எதிர்ப்பார்ப்பைக்
கூட நிறைவேற்ற
முடியாது என்று
பிரதமர் கனவு காணும்
நீங்கள் சொல்கிறீர்கள்.
உங்களுக்கு
இசுலாமிய மக்கள்
மீது வெறுப்பு
இருப்பதுபோல்,
உங்கள் நரவேட்டை
நடவடிக்கைகளால்
உங்கள் மீதும்
நாட்டு மக்களுக்கு
வெறுப்பு ஏற்பட்டுள்ளது
என்பதை நீங்கள்
புரிந்துகொள்வது
அவசியம்.
செல்லப்
பிராணிகளை கார்
ஏற்றிக் கொலை செய்வது
உங்களுக்கு பொழுதுபோக்
காக இருக்கலாம். ஆனால்,
கார்ச் சக்கரத்தில்
நாய்க்குட்டி
மாட்டிக் கொள்வது
இயல்பானது என்று
நீங்கள் சொல்லும்போது,
நீங்கள் பயணிக்கிற
கார் விபத்தில்
சிக்கிக் கொள்வதும்
இயல்பானது என்பதை
மறந்துவிடுகிறீர்கள்.
நீங்கள்
பயணிக்கிற அந்த
ஆபத்தான கார்
2014ல் கடுமையான விபத்தை
எதிர்கொள்ளப்
போகிறது. நீங்கள்
கார் பயணத்தைத்
தவிர்த்து விடுவது
நல்லது.
- ஓர்
இந்தியப் பிரஜை
********
சீனப் புரட்சி
மற்றும் அது தரும்
பாடங்கள் பற்றிய
ஒரு சுருக்கமான
சித்திரம்
டி.பி.பக்ஷி
முன்னுரை
தீப்பொறி
ஆசிரியரிடம் நான்
உறுதி அளித்ததன்
பேரில், சீனப்
புரட்சி பற்றிய
ஒரு சுருக்கமான
விவரணையை எழுத
நான் முயற்சி செய்கிறேன். தற்போதைய
சூழலில் அது உயிரோட்டமான
ஒரு தலைப்பாக இருக்குமா
எனக்கு உறுதியாகச்
சொல்ல முடியவில்லை.
ஏனென்றால்,
தற்போதைய சீனா,
உற்சாகம் தருவதற்கு
பதிலாக, அதன் ‘சீரழிவு’ மட்டத்தை
அளப்பதற்காக விவாதிக்
கப்படுகிறது.
ஆயினும், சோவியத்
வீழ்ச்சிக்குப்
பிறகு, ‘சோசலிச
முகாம்’ வீழ்ச்சிக்குப்
பிறகு, சீனாவில்
நடக்கிற இன்றைய
மாற்றங்கள், மானுட
வரலாற்றின் முன்னேற்றத்தில்,
அதுவும் ஆசியாவின்
ஒரு மிகப்பெரிய
பின்தங் கிய விவசாய
நாட்டில், பாட்டாளி
வர்க்க மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைமையில், வரலாற்றுச்
சிறப்புமிக்க
தகர்த்து முன்னேறு
தலை உருவாக்கிய
சீனப் புரட்சியின்
முக்கியத் துவத்தை
மறுதலிக்கவோ நிராகரிக்கவோ
முடியாது. சீனப்
புரட்சியை அதன்
சரியான பொருத்தப்பாட்டில்,
இயங்கியல் முறையில்
இறுகப் பற்றிக்
கொள்ள முடியுமானால்,
பல புரட்சிகளைப்
போலவே, சீனப் புரட்சியும்
தொடர்ந்து உற்சாகமூட்டும்;
அது தரும் பாடங்கள்,
இந்தியப் புரட்சி
என்ற லட்சியத்தை
முன்னெடுத்துச்
செல்ல நமக்கு ஒளியூட்டும்.
சீனா
இந்தியாவின் அண்டை
நாடு மட்டு மல்ல;
இந்த இரண்டு நாடுகளும்
மகத்தான நாகரிகத்தின்
வழிமரபை பிரதிநிதித்துவப்
படுத்துகின்றன. ஆசியாவின்
இந்த இரண்டு பெரிய
நாடுகளும் சமூக
- பொருளாதாரம்
மற்றும் கலாச்சாரம்
என்ற பொருளில்
ஒரு நீண்ட வரலாற்று
ஊடாடலை, பரிமாற்
றத்தைக் கொண்டுள்ளன.
அனைத்தையும் விஞ்சுகிற
சமூக முன்னேற்றம்,
வகைமாதிரி தேக்கம்
மற்றும் நீடித்த
சுணக்கம் ஆகியவை
இந்த இரண்டு நாடுகளுக்கும்
இடையிலான ஒற்றுமைகளை
பிரதிபலிக்கின்றன
என்றால், ஏகாதிபத்திய
காலனிமயமாக்க
இயக்கப்போக்கு
ஒரு மிகப்பெரிய
வேறுபாட்டை குறிக்கிறது.
இந்திய சமூகத்தின்
வளர்ச்சி இயக்கப்போக்கில்
உள்ளூர கட்டமைக்கப்பட்டுள்ள
பலவீனங் கள், 200 ஆண்டுகளுக்கும்
மேல் அதன் காலனிய
தலைவிதிக்கு பங்களித்தது.
ஆனால், பல முயற்சிகளும்
வெறித்தனமான தலையீடு
களும் இருந்தபோதும்
எந்த ஏகாதிபத்திய
சக்தியாலும் சீனாவை
ஒரு ‘காலனி’ நாடாக
ஆக்க முடியவில்லை.
சுதந்திரமான
முதலாளித்துவ
வளர்ச்சி என்பதற்கு
பதிலாக, சீனாவிலும்
இந்தியாவி லும்
இருந்த, முறையே
அரை - காலனிய ‘வளர்ச்சிப்’ பாதையும்
காலனிய ‘வளர்ச்சிப்’ பாதையும்,
ஏகாதிபத்திய சக்திகளின்
நலன்க ளுக்காக,
பின்தங்கிய நிலை
மற்றும் மத்திய
காலத் தன்மை மற்றும்
நவீன தொழில் வளர்ச்சி
என்ற வகைமாதிரி
சேர்க்கைக்கு
பங்களித்தன. இந்த இயக்கப்போக்கு,
ஒரு பின்தங்கிய
ஆகமேலோங்கிய ஒரு
விவசாய சமூகத்தில்
நவீன தொழில்துறை
தொழிலாளி மற்றும்
பாட்டாளியின்
உருவாக்கத்தை
முன்நகர்த்தியது.
நவீன தொழிலாளர்
வர்க்கம் உருவான
பின்னணியில்,
1917ல் ரஷ்யாவில்
நடந்த முதல் வெற்றிகரமான
பாட்டாளி வர்க்க
புரட்சியின் தாக்கமும்
புதிதாக எழுந்த
முன்னேறிய குட்டி
முதலாளித்துவ
அறிவாளிப் பிரிவினரின்
செய லூக்கமான பாத்திரமும்
இருக்க, சீனாவிலும்
இந்தியாவிலும்
இருபதாவது நூற்றாண்டின்
1920களின் துவக்கத்தில்
கம்யூனிஸ்ட் கட்சி
(சீனாவில் 1921, இந்தியாவில்
1925) உருவாக்கப்பட்டது.
பல்வேறு
திருப்பங்கள்
மற்றும் மாற்றங்
கள், முன்னேற்றங்கள்
மற்றும் பின்னடைவுகள்,
வெற்றி மற்றும்
தோல்வி ஆகியவற்றுடனான
28 ஆண்டு கால நீண்ட
சிக்கலான பயணத்தின்
ஊடே, கம்யூனிஸ்ட்
கட்சியால் வழிநடத்தப்
பட்ட சீன ஜனநாயகப்
புரட்சி 1949 அக்டோப
ரில் அதன் இறுதி
வெற்றியை அடைந்தது.
மறுபக்கம்,
கிட்டத்தட்ட
90 ஆண்டு கால போராட்டம்,
தியாகம் மற்றும்
அர்ப்பணிப்பு
என்ற புகழ்மிக்க
வழிமரபு இருந்தபோதும்,
இந்திய கம்யூனிச
இயக்கம் இன்னும்
நிறை வடையாத ஜனநாயகப்
புரட்சியை நிறை
வேற்ற முடியவில்லை.
இரண்டு கம்யூனிஸ்ட்
கட்சிகளும், பல்வேறு
வகைப்பட்ட சந்தர்ப்பவாத
மற்றும் அராஜகவாத
மற்றும் சாகசவாத
போக்குகளை மய்யங்கொண்டு
கடுமையான கருத்தியல்
-அரசியல் போராட்டத்தை
எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
சீனப்
புரட்சியின் தாக்கம்
என்ற விசயத் தில்,
இந்திய கம்யூனிச
இயக்கத்தில் எதிரெதி
ரான போக்குகளை
நாம் காண்கிறோம். சீனப்
புரட்சி உருக்கொண்ட
காலத்தில் இருந்தே,
அது மிகவும் சாதகமான,
உணர்வூட்டுகிற
தாக்கம் செலுத்தியது.
மறுபுறம், சீனப்
புரட்சியின் தாக்கத்தை
பின்னுக்குத்
தள்ளுகிற வலுவான
போக்கும் இருந்தது.
‘மாதிரிகளை பின்பற்றும்’ அணுகுமுறை,
பிரிட்டிஷ் கம்யூ
னிஸ்ட் தலைவர்
ரஜனி பாம் தத்தின்
செல்வாக்கு ஆகியவற்றில்
இருந்து, சீனப்
புரட்சியை பாட்டாளி
வர்க்கப் புரட்சி
என்று ஏற்றுக்கொள்வதா
கூடாதா என்ற கேள்வியை,
இந்தப் போக்கு
எழுப்பியது. தோழர் மாவோ விவசாய
எழுச்சியின் தலைவரா,
அல்லது, ஒரு கம்யூனிஸ்ட்
அல்லது பாட்டாளி
வர்க்கத் தலைவரா
என்று கூட முறைசாரா
விதத்தில் விவாதிக்கப்பட்டது.
சீனப்
புரட்சியை புரிந்துகொள்வதில்
இருந்த இந்த மோதல்,
இந்தியப் புரட்சியின்
வழி பற்றிய ஒரு
காத்திரமான விவாதத்தைத்
தூண்டியது. ஒரு
குறிப்பிட்ட கட்டத்தில்
இந்த விவாதம் ரஷ்யப்
புரட்சி எதிர்
சீனப் புரட்சி
என்று வடிவம் பெற்றது.
இந்தப் பின்னணியில்,
நிஜாம் தலைமையிலான
மாகாண அரசாங்கத்
துக்கு எதிராக
தெலுங்கானாவில்
ஆயுதம் தாங்கிய
விவசாய எழுச்சி
இந்திய கம்யூனிச
இயக்கத்தில் ஒரு
புதிய வரலாற்றை
உருவாக்கி யது;
சீன வழியை பொருத்துவதற்கான
மாதிரியாக முன்நின்றது.
ஆனால், அதிகாரம்
மாற்றப்பட்ட பிறகு,
நேரு தலைமையிலான
காங்கிரஸ் அரசாங்கத்துடன்
அரசியல் ஒப்பந்
தம் என்ற அடிப்படையில்
தெலுங்கானா அப்பட்டமாக
சரணடைதலுக்கு
உள்ளான துயரமான
முடிவு, இந்திய
கம்யூனிச இயக்கத்
துக்கு ஒரு பெரிய
அடி கொடுத்தது;
அது படிப்படியாக,
இந்திய வகை ‘நாடாளுமன்ற
முடக்குவாதம்’ என்ற
போக்கை உருவாக்கி
யது. ஆனால், இந்திய
கம்யூனிச இயக்கத்தில்
நடந்த கருத்தியல்
போராட்டத்தை அதனால்
தடுத்துவிட முடியவில்லை;
மாறாக, இந்தியப்
புரட்சியின் வழி
என்ற கேள்வி மீதான
போராட்டம் மீண்டும்
மேலெழுந்தது.
அதே சமயம்,
சோவியத் கம்யூனிஸ்ட்
கட்சியின் இருபதாவது
காங்கிரசுக்குப்
பிறகு, இருபதாம்
நூற்றாண்டின்
அறுபதுகளில் ஒரு
காத்திரமான கருத்தியல்
போராட்டத்தின்
ஊடே, சர்வதேச கம்யூனிச
இயக்கமும் ஒரு
புதிய பரிமாணம்
பெற்றது. நவீன
திரிபுவாதத் துக்கு
எதிரானப் போராட்டம்
என்று இந்தப் போராட்டம்
பிரபலப்படுத்தப்பட்டு,
குருஷ் சேவ் தலைமையிலான
சோவியத் எதிர்
மாவோ தலைமையிலான
சீனா என்று எதிரெதிராக
நிறுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிச
இயக்கமும் இந்த
‘மாபெரும் விவாதத்தில்’ இருந்து
தப்பித்து விடவில்லை.
மாறியிருக்கிற
உலகச் சூழலில்
‘சோசலிசம் நோக்கிய
அமைதிப் பாதை’, ‘சோவியத்
உதவி மற்றும் ஆதரவுடன்
வளருகிற நாடுகளில்
முதலாளித்துவம்
அல்லாத வளர்ச்சிப்
பாதை’, ‘சோசலிச சமூகத்தில்
வர்க்கப் போராட்டம்’ நிலவுவது
என்ற கேள்விகள்
மீது அது குவிமய்யம்
கொண்டது.
இந்த
இயக்கப்போக்கில்,
சோவியத் எதிர்
சீனா போராட்டம்,
இந்திய கம்யூனிச
இயக் கத்தில் உள்வயமானது. இந்தப்
போராட்டம் இந்தியப்
புரட்சியின் வழி
பற்றிய விவாதத்தை
மீண்டும் கொண்டு
வந்தது. இந்த
இயக்கப் போக்கு,
இந்திய கம்யூனிச
இயக்கத்தில், முதல்
பிளவை உருவாக்கியதோடு,
காலனியத்துக்குப்
பிந்தைய இந்தியாவில்,
இந்தியப் புரட்சியை
முன்னகர்த்த, சீன
வழி படைப்பாற்றல்மிக்க
விதத்தில் பொருத்தப்பட்ட,
நக்சல்பாரி விவசாய
எழுச்சி மூலம்,
‘கிராமப்புற வறியவர்கள்
பகுதி அடிப்படையில்
அதிகாரத்தைக்
கைப்பற்றும்’ மாதிரியை
உருவாக்கிய, முதல்
காத்திரமான முயற்சியையும்
வடிவமைத்தது. இதையடுத்து,
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட்
லெனினிஸ்ட்) என்ற
புதிய புரட்சிகர
கட்சியின் உருவாக்கம்
மற்றும் நாடு முழுவதும்
புரட்சிகர போராட்ட
அலைகள் எழுந்ததைத்
தொடர்ந்து, இந்திய
கம்யூனிச இயக்கத்தில்
மற்றுமொரு பெரிய
பிளவு உருவானது.
புரட்சியின்
விதியின்படி, பாட்டாளி
வர்க் கம் அதிகாரத்தைக்
கைப்பற்றும் முதல்
முயற்சி, பின்னடைவை
எதிர்கொள்ளும். இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்
லெனினிஸ்ட்) தலைமையிலான
இந்தியப் புரட்சியின்
தலை யெழுத்தும்
வேறுவிதமாக எழுதப்படவில்லை.
1972 முதல் நாம்
கடுமையான தாக்குதல்களை
எதிர்கொண்டோம்.
அது படிப்படியாக,
கட்சியின், புரட்சிகர
இயக்கத்தின் புனர்நிர்மா
ணத்தின் புதிய
அத்தியாயத்தை
துவக்கியது. நக்சல்பாரியும்
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட்
லெனினிஸ்ட்)டும் உருவாக்கிய
புரட்சிகர வழிமரபை
உயர்த்திப் பிடிப்பது,
நமது அனுபவங்களில்
இருந்து பாடங்கள்
பெறுவது, புதிய
மாற்றங்களை பற்றிக்
கொள்வது என்பவை
நமது அணுகுமுறை
களாக இருந்தன.
வெகுமக்களிடம்
இருந்து கடுமையாக
தனிமைப்பட்டிருப்பதை
உடைத் தெறிவது,
இந்திய யதார்த்தத்தை
அதன் இயக்கத்தில்
புரிந்துகொள்வது
என்பதில் நமது
கவனம் குவிக்கப்பட்டது.
இந்த புதிய
இயக்கத்தில் இருந்து,
நமது சிந்தை இயக்கப்போக்கை
நாம் மாற்றிக்
கொள்ள வேண்டியிருந்தது;
அறிவின் இயங்கி
யல் தத்துவத்தைப்
பற்றிக் கொள்ள
வேண்டியிருந்தது.
சீனப் புரட்சியில்
இருந்து பாடங்கள்
பெறுவது, வேறு
எந்தப் புரட்சியில்
இருந்தும் பாடங்கள்
பெறுவதை ஒருபோதும்
மறுதலிக்காது
என்று நாம் உணர்ந்து
கொண் டோம்; பாடங்கள்
பெறுவது என்பதை,
எந்தப் புரட்சியையும்
அப்படியே பொருத்தப்
பார்ப்பது என்பதில்
இருந்து வேறுபடுத்தியாக
வேண்டும். ‘ஸ்தூலமான
நிலைமைகளின் ஸ்தூ
லமான பகுப்பாய்வே
மார்க்சியத்தின்
உயிருள்ள ஆன்மா’ என்ற
லெனினின் அடிப்
படைப் பாடத்தை
நாம் எப்படி நிராகரிக்க
முடியும்?
ஆக, ‘சீனப்
பாதை எங்கள் பாதை’ என்பதில்
இருந்து துவங்கி,
‘சீனப் பாதையின்’ இந்திய
வழியைத் தேட நாம்
பாடுபட்டோம்; இறுதியில்,
மார்க்சியம் -
லெனினியம் - மா
சே துங் சிந்தனையின்
இந்தியமயமாக்கத்தின்
மூலம் இந்தியப்
புரட்சியின் பாதையை
தீர்மானிப்பது
என்ற முடிவுக்கு
வந்தோம்.
வெவ்வேறு
கட்டங்களில் சீனப்
புரட்சி யின் தாக்கம்
பற்றி மேலே சொல்லப்பட்டுள்ள
பின்னணி, சீனப்
புரட்சியை எப்படி
புரிந்து கொள்வது
என்ற உண்மையான
விவாதத்தை முன்னகர்த்த
போதுமானது இல்லை.
ஆனால், அதை எப்படிப்
பார்க்க வேண்டும்
என்பது பற்றிய
சரியான அணுகுமுறையை
அது தரும்.
எண்ணிலடங்கா
விவரங்கள் அடங்கிய
மகத்தான அனுபவங்களை
சீனப் புரட்சி
பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே
விவரங் கள் என்ற
காட்டில் சிக்கிக்கொண்டு,
விவரங்களில் இருந்து
நாம் உண்மையைப்
பெறுவதை தடுத்துவிடும்
சாத்தியப்பாடும்
இருக்கிறது. எனவே, நாம் பின்வரும்
விஞ்ஞானபூர்வமான
வழிமுறையை பின்பற்ற
வேண்டும்.
முதலாவதாக,
சீனாவில் கம்யூனிஸ்ட்
கட்சியையும் புரட்சிகரப்
போராட்டத்தையும்
வடிவமைத்த குறிப்பான
வரலாற்று இயக்கப்
போக்கை நாம் புரிந்துகொள்ள
வேண்டும்.
இரண்டாவதாக,
சீனப் புரட்சியின்
போர்த் தந்திரக்
கடமையை தீர்மானிக்க,
புரட்சிக்கு முந்தைய
சீன சமூகத்தின்
சரியான மதிப் பீட்டை
சீன கம்யூனிஸ்ட்
கட்சி எப்படி மேற்
கொண்டது என்று
நாம் படிக்க வேண்டும்.
மூன்றாவதாக,
சீனாவின் முதலாளித்துவத்
தார் மற்றும் விவசாய
சமூகத்துடனான
உறவின் அடிப்படையில்,
சீனப் புரட்சியின்
செயல்தந் திர வழி
எப்படி வடிவமைக்கப்பட்டது
என்பதை நாம் பற்றிக்
கொள்ள வேண்டும்.
அதேபோல், சூழல்
மாறியதற்கேற்ப
செயல்தந்திர வழி
எப்படி மறுவடிவமைப்பு
செய்யப்பட்டது
என்பதையும் பற்றிக்
கொள்ள வேண்டும்.
நான்காவதாக,
சீனப் புரட்சி
முன்செல்லும்
போக்கில், நிலைமைகளுக்கு
ஏற்றவாறு, அரசி
யல் செயல்தந்திரமும்
ராணுவ செயல்தந்திர
மும் எப்படி திறன்மிக்க
விதத்தில் இணைக்கப்
பட்டன என்பதை புரிந்துகொள்ள
வேண்டும்.
அய்ந்தாவதாக,
சீனப் புரட்சி
மிகப் பெரிய பின்னடைவுகளை
எப்படி சமாளித்தது,
அவற்றை முக்கியமான
வெற்றிகளாக எப்படி
மாற்றியது என்று
புரிந்துகொள்ள
வேண்டும்.
ஆறாவதாக,
புரட்சிகர விவசாயப்
போராட்டம், நிலச்சீர்திருத்தம்
மற்றும் கூட்டுறவு
இயக்கம் பற்றியும்,
சோசலிசத்திற்கு
மாறிச் செல்வதை
நோக்கி புதிய ஜனநாய
கத்தை வடிவமைப்பது
பற்றியும் படிக்க
வேண்டும்.
ஏழாவதாக,
சீனாவில், குறிப்பாக
புரட்சி கர கட்டத்தினூடே,
கம்யூனிஸ்ட் கட்சியை
கட்டும் உறுதிப்படுத்தும்
இயக்கப்போக்கை
நாம் பற்றிக் கொள்ள
வேண்டும்.
சீனப்
புரட்சியின் முக்கியமான
தருணங் கள், நிகழ்வுகள்
மற்றும் கட்டங்கள்
ஆகியவை பற்றிய
தரவுகளுடன் இந்த
வழிமுறையை பின்
பற்ற நாம் முயற்சி
செய்யலாம்.
- தொடரும்
********
அம்பத்தூரில்
1000 படுக்கைகள் கொண்ட
அரசு மருத்துவமனை
வேண்டும்
அம்பத்தூரில்
1000 படுக்கைகள் கொண்ட
அரசு பொது மருத்துவமனை,
அரசுக் கல்லூரி,
4 அரசு மேல்நிலைப்
பள்ளிகள் ஏற்படுத்தக்
கோரியும், மகா
கணேசா வித்யாசாலா,
குப்தா உயர்நிலைப்
பள்ளிகளை அரசே
ஏற்று நடத்தி,
மேல்நிலைப் பள்ளிகளாக்கி
கட்டணமில்லா கல்வி
வழங்க வலியுறுத்தியும்
அகில இந்திய மாணவர்
கழகம், புரட்சிகர
இளைஞர் கழகம்,
உழைப்போர் உரிமை
இயக்கம் இணைந்து
13.07.2013 அன்று பட்டினிப்
போராட்டம் நடத்தின.
மாலெ கட்சி
மாவட்டக்குழு
உறுப்பினரும்,
உழைப்போர் உரிமை
இயக்க மாவட்டத்
தலைவருமான தோழர்
ஆர்.மோகன் தலைமையில்
நடைபெற்ற இந்தப்
போராட்டத்தில்
மாணவர், ஆசிரியர்,
பெற்றோர் - ஆசிரியர்
கழகத்தினர் மற்றும்
பல்வேறு அமைப்பினர்
உள்பட அம்பத்தூர்
பகுதி குடியிருப்போர்
திரளாகக் கலந்து
கொண்டனர்.
புரட்சிகர
இளைஞர் கழக தேசிய
செயலாளர் கே.பாரதி,
சிபிஅய்எம்எல்
கட்சியின் மாவட்டச்
செயலாளர் தோழர்
சேகர், அகில இந்திய
மாணவர் கழக திருவள்ளூர்
மாவட்டச் செயலாளர்
தோழர் வி.சீதா,
புரட்சிகர இளைஞர்
கழக காஞ்சிபுரம்
மாவட்டச் செயலாளர்
ராஜகுரு, அகில
இந்திய முற்போக்கு
பெண்கள் கழக மாநிலத்
தலைவர் தோழர் தேன்மொழி,
சிபிஅய்எம்எல்
கட்சியின் மாவட்டக்குழு
உறுப்பினர்கள்
தோழர்கள் தேவகி,
பசுபதி, வேணு கோபால்,
புகழ்வேந்தன்
உள்ளிட்டோர் பேசினர்.
அம்பத்தூர்
மக்கள் நல்வாழ்வு,
முன்னேற்றம், வளர்ச்சியை
வலியுறுத்தி நடைபெற்ற
இப்போராட்டத்தில்
ஏஅய்டியுசி கட்டுமான
சங்க மாநில செயலாளர்
தோழர் துரைசாமி,
தமிழ்நாடு கலை
இலக்கிய பெருமன்ற
பொறுப்பாளர் தோழர்
நாச்சியப்பன்,
புரட்சிகர இளைஞர்
முன்னனியைச் சேர்ந்த
தோழர் மார்க்ஸ்,
தமிழின உணர்வாளர்
கூட்டமைப்பைச்
சேர்ந்த தோழர்
இளங்கோ, மகாகணேசா
பள்ளியின் முன்னாள்
மாணவர் தோழர் பாலாஜிபாபு,
சுதேசி இயக்கத்தைச்
சேர்ந்த தோழர்
குமரி நம்பி, குப்தா
பள்ளி பெற்றோர்
- ஆசிரியர் கழகத்
தலைவர் சரவணபவ,
மகா கணேசா வித்யாசாலா
பெற்றோர் - ஆசிரியர்
கழகத் தலைவர் பாலாஜி
உள்ளிட்டோர் கோரிக்கைகளை
ஆதரித்துப் பேசினர்.
கோரிக்கைகள்
மீது 1 லட்சம் கையெழுத்து
இயக்கம் நடத்த
முடிவு செய்யப்பட்டது.
********
கட்சி ஆவணங்களைப்
படிப்பது:
ஓர் அனுபவம்
கட்சியின்
9ஆவது காங்கி ரஸ்
ராஞ்சியில் 2013 ஏப்ரல்
2 முதல் 6 வரை நடைபெற்றது. காங்கிரசில்
கட்சியின் ஒரு
சதம் உறுப்பினர்கள்
மட்டுமே கலந்து
கொள்ள முடிந்தது.
கட்சியின்
0.1 சதம் உறுப்பினர்கள்
மட் டுமே காங்கிரஸ்
விவாதங்களில்
நேரடியாக பங்குபெற
முடிந் தது. காங்கிரசுக்கு
முன்பாக கட்சி
முழுவதும் நகல்
ஆவணங் களை விவாதிப்பது
நடந்திருந்தா
லும், காங்கிரஸ்
ஆவணங்களை கட்சி
உறுப்பினர்கள்
அனைவர் மத்தியிலும்
கட்சி உறுப்பினர்கள்
தாண்டியும் எடுத்துச்
செல்ல வேண்டிய
கடமை நமக்கு இருக்
கிறது. இந்த வகையில்
கட்சியின் தமிழ்நாடு
மாநிலக் கமிட்டி,
முதல் சுற்றில்
15.07.2013 முதல் 31.08.2013 வரை
கட்சி மாவட்டக்
குழு உறுப்பினர்கள்
பகுதிக் குழு உறுப்பினர்கள்
உள்ளூர் கமிட்டி
செயலர்கள் வரையிலான
தோழர்கள் மத்தியில்
காங்கிரஸ் ஆவணங்களை
படித்து விவாதித்து
விளக்கு வதை ஓர்
இயக்கமாக நடத்த
முடிவு செய்தது.
ஒரு வகுப்பில்
குறைந்தபட்சம்
25 பேராவது இருக்க
வேண்டும் எனவும்
முடிவு செய்தது.
எப்போதும்
இருக்கும் அரசியல்
வேலை கள் தலையீடுகள்
இவற்றையெல்லாம்
தாண்டி காங்கிரஸ்
ஆவண வகுப்புகள்
நடந்தாக வேண்டும்
என முடிவு எடுக்கப்பட்டது. தமிழ
கத்தில் கட்சிக்கு
மாவட்டக் கமிட்டி
இருக்கிற 10 மாவட்டங்களிலும்
19.07.2013க்குள் கட்சி
அமைப்புச் சட்டம்,
கட்சியின் பொதுத்
திட் டம் தொடர்பான
வகுப்புகள் நடந்துவிட்டன.
இங்கு, கோவை
மாவட்ட அனுபவத்தை
பற்றி மட்டுமே
முன்வைக்கப்படுகிறது.
கட்சியில்,
விழுப்புரம், கன்னியாகுமரி
கோவை மாவட்ட கமிட்டிகள்
புதிதாக சமீப காலத்தில்
உருவாக்கப்பட்டவை. கோவை
மாவட்ட கமிட்டி
உருவாக்கம் சம்பந்தமாக
கட்சி காங்கிரசின்
கட்சி அமைப்பு
அறிக்கை பின்வருமாறு
சொல்கிறது: “தொழிற்சங்க
செயல்வீரர்களின்
அணிவரிசை ஒன்றை
உரு வாக்குவதும்,
தொழிற்சங்க இயக்கத்துக்குள்ளே
இருந்து கட்சி
ஊழியர்களை வளர்த்தெடுப்ப
தும் முக்கியமானதொரு
சவாலாகவே இருக்கி
றது. தொழிலாளர்
வர்க்க இயக்கத்திலிருந்து
கட்சி கட்டுதலுக்கு
உற்சாகமூட்டும்
உதார ணத்தை கோயம்புத்தூர்
வழங்குகிறது.
பிரிக் கால் போராட்டத்திலிருந்து
உருவாகி இருக்
கும் தோழர்கள்
பிற ஆலைகளில் துறைகளில்
உள்ள தொழிலாளர்களை
சங்கமாக்குவதி
லும், மாவட்டத்தில்
கட்சியைக் கட்டுவதிலும்
தலைமைப் பாத்திரம்
வகித்துள்ளனர்.”
கோவையில்
பிரிக்கால் போராட்டத்திலி
ருந்து கட்சி எழுந்தது
என்ற போதிலும்,
பிரிக் கால் தாண்டி
வேலைகள் என்பது
மிகவும் அவசியமாகியுள்ளது. பூகோளரீதியாகவும்
அரங்கரீதியாகவும்
வேலைகளின் இயல்புரீதி
யாகவும் தோழர்கள்
விரிவாக்கத்திற்கு
கடுமை யான முயற்சிகளை
எடுத்து வருகின்றனர்.
இருந்தபோதும்
பிரிக்கால் வேலையின்
முக்கி யத்துவம்,
ஒரு யதார்த்தமாக
முன்னே நிற்கி
றது. பிரிக்கால்
நிர்வாகம் தான்
போட்ட ஒப்பந்தப்படி,
தான் தந்த வாக்குறுதிகள்படி,
100 தொழிலாளர்களை
வேலைக்கு எடுக்க
மறுத்து சங்கத்திற்கும்
தொழிலாளர்களுக்கும்
உங்களால் என்ன
செய்ய முடியும்
என சவால் விடும்போது,
சங்கத் தரப்பில்
14.08.2013 முதல் வேலை நிறுத்தம்
செய்வதெனவும்
அதற்கு முன் பொதுமக்களிடம்
30,000 கையெழுத்துக்
கள் வாங்கி முதலமைச்சரிடம்
ஒப்படைப்பது எனவும்
1200 அஞ்சல் அட்டைகளை
தொழிலா ளர்கள்
கையொப்பமிட்டு
முதல்வருக்கு
அனுப்புவதெனவும்
முடிவெடுத்து
வேலைகள் நடைபெற்று
வருகின்றன. பெரியநாயக்கன்
பாளைம், வீரபாண்டி,
கூடலூர் கவுண்டம்
பாளையம் பேரூராட்சிகளின்
தலைவர்கள், இவர்களில்
இரண்டு பேர் அதிமுகவைச்
சேர்ந்தவர்கள்.
மூன்றாமவர்
திமுகவைச் சேர்ந்
தவர். வேறு
பல கட்சிகளின்
வார்டு உறுப்பி
னர்கள் பிரிக்கால்
தொழிலாளர்கள்
கோரிக் கைக்கு
ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர்.
இதுவரை 23,500 கையெழுத்துக்கள்
பெறப்பட் டுள்ளன.
உத்தர்கண்ட் வெள்ள
நிவாரணம் திரட்டுதல்,
டாஸ்மாக் கடைகளை
மூடக் கோரி ஆர்ப்பாட்டம்
கட்சியின் மத்திய
மாநில அழைப்புகளை
நிறைவேற்றுவது
ஆகிய வேலைகளிலும்
கோவை மாவட்ட கட்சி
அமைப்பு முன்வரிசையிலேயே
உள்ளது.
ஆவண வாசிப்பு
மற்றும் விவாதத்தை
நடத்துவது என்ற
பிரச்சனையில்,
கோவையின் பெரும்பாலான
தோழர்கள் புதியவர்கள். தொழிலாளர்
வர்க்கத்தைச்
சேர்ந்தவர்கள்.
மாவட்டக் கமிட்டி
அளவிலேயே ஏகப்பெரும்
பான்மையினர் பகுதி
நேர ஊழியர்கள்
என்ற பின்னணியை
கணக்கில் கொண்டுதான்,
ஆவண வகுப்புக்கள்
நடத்த வேண்டியிருந்தது.
ஆவணத்தை முழுமையாகப்
படிப்பது, கலந்துகொள்பவர்கள்
பங்கேற்புக்கு
ஏதாவது விதத்தில்
வழி செய்வது, ஆவணங்களை
விளக் குவது ஆகிய
மூன்று முக்கிய
அம்சங்களுக்கும்
இடம் இருக்குமாறு
பார்த்துக் கொள்வது,
அதற்கேற்ப நேரம்
ஒதுக்கிக் கொள்வது
என தீர்மானிக்கப்பட்டது.
கட்சி
அமைப்புச் சட்டம்
மற்றும் கட்சிப்
பொதுத் திட்டம்
தொடர்பான வகுப்பு
12.07.2013 மாலை 5.45 மணியளவில்
துவங்கி நடத்தப்பட்டது. தோழர்
என்.கே.நடராசன்
வகுப்பை நடத்தினார்.
உறுப்பினர் சேர்ப்பு
புதுப்பித்தல்,
உறுப்பினர் கடமைகள்
உரிமை கள், தேர்வுக்
கோட்பாடு, கிளை
உள்ளூர் கமிட்டி
மற்றும் கட்சி
அமைப்பு முறை,
ஜனநாயக மத்தியத்துவ
கோட்பாடு ஆகியவை
பற்றிய விளக்கங்களைத்
தந்து, அதற்குப்
பிறகு நகல் அமைப்புச்
சட்டத்தின் பல
பத்திகளை முழுமையாக
படித்துக் காட்டினார்.
ஏறத்தாழ முக்கால்
மணி நேரத்தில்
இந்த வகுப்பு முடிந்தது.
அதற்குப்
பிறகு கட்சிப்
பொதுத்திட்டம்
தொடர்பான வகுப்பு
ஏறத்தாழ மூன்று
மணி நேரம் நடைபெற்றது. தோழர்
குமாரசாமி வகுப்பெடுத்தார்.
வகுப்பில்
35 பேர் கலந்து கொண்டனர்.
பத்திபத்தியாக
பொதுத் திட்டம்
கலந்துகொண்ட வெவ்வேறு
தோழர்களால் வாசிக்கப்பட்டது.
வாசிப்பு முடிந்தவுடன்
சில கேள்விகள்
எழுப்பப்பட்டு
படித்தவர்களே
பதில் சொல்ல உற்சாகப்படுத்தப்பட்டனர்.
மேலோங்கிய
விவசாய சமூகம்,
பின்தங்கிய முதலாளித்துவ
சமூகம் என நாம்
ஏன் சொல் கிறோம்
என்ற கேள்விகளுக்கு
தோழர்களே பதில்
சொன்னார்கள். நமது,
அரைக்காலனிய அரை
நிலப்பிரபுத்துவ
சமூகம் என்ற விவ
ரிப்பை ஏன் மாற்றிக்
கொண்டோம், நிலப்பிர
புத்துவ தளைகள்,
மிச்சசொச்சங்கள்,
நிலப்பிரபு பாதை
முதலாளித்துவ
வளர்ச்சி, விவசாய
பாதை முதலாளித்துவ
வளர்ச்சி ஆகியவை
விளக்கப்பட்டன.
அரசில் யார் தலைமை
தாங் குகிறார்கள்,
யாரோடு கூட்டு
சேர்ந்துள்ளனர்,
ஏகாதிபத்தியத்தோடு
என்ன உறவு, நாடாளு
மன்ற ஜனநாயகம்
மதச்சார்பின்மை
சாதியம் ஆணாதிக்கம்
போன்றவை எப்படிச்
செயல்படு கின்றன
என்பவற்றை எல்லாம்
வாசித்த தோழர்களே
விளக்கினார்கள்.
பிரதான
முரண்பாடு என்பதில்
என்ன மாற்றம் ஏன்
மாற்றம் என்பதை
தோழர் குமாரசாமி
விளக்கினார். ஆனால்
வாசித்த தோழர்களே
பகையான மூன்று
முரண்பாடுகள்
பகையற்ற முரண்பாடு
போன்றவற்றை விளக்கினார்கள்.
ஜனநாயகப்
புரட்சியில் தொழிலாளர்
வர்க்கத் தலைமை
யார் கூட்டாளிகள்
எது வர்க்க வழி
போன்ற விசயங்களை
வாசித்த விசயங்களை
திரும்பப் படிப்பதன்
மூலம் விளங்கிக்
கொள்ளப்பட்டது. புரட்சிகர
எதிர்க்கட்சிப்
பாத்திரம் நாடாளுமன்றம்
தவிர்த்த பாதை,
கட்சியின் ஆயுதக்
கிடங்கில் ஒரு
மக்கள் ஜனநாயக
முன்னணியும் ஒரு
மக்கள் ராணுவமும்
புரட்சியின் இரண்டு
மிகவும் முக்கியமான
அம்சங்களாக இருக்கும்
போன்ற விசயங்கள்
விளக்கப்பட்டன.
மக்கள் ஜனநாயக
அரசு தலைப்பு முழுமையாக
நிதான மாக படிக்கப்பட்டு
ஆங்காங்கே விளக்கிக்கொள்ளப்பட்டது.
சர்வதேச சூழல்
தொடர் பான வகுப்பு
24.07.2013 அன்று நடத்த முடிவு
செய்யப்பட்டது.
24.07.2013 அன்று
வகுப்பு மாலை
5.30 மணியளவில் துவங்கியது. வகுப்பு
தோழர் குமாரசாமியால்
நடத்தப்பட்டது.
வகுப்பின் துவக்கத்தில்
முதலாளித்துவம்
சோசலிசம் ஆகியவற்றின்
இயல்புகள், முதலாளித்துவம்
ஏன் திரும்பத்திரும்ப
நெருக்கடியில்
சிக்கிக் கொள்கிறது,
சமகால விவாதப்படி
20ஆம் நூற்றாண்டு
சோசலிசத்தின்
பலவீனங்கள் எவை,
21ஆம் நூற்றாண்டு
சோசலிசம் என எந்த
விசயங்களைக் குறிப்பிடுகிறார்கள்
என் பவை பற்றிய
மிகவும் சுருக்கமான
ஓர் எழுத்து பூர்வமான
குறிப்பு தரப்பட்டது;
விவாதிக்கப் பட்டது.
அதன் பின்னர்
ஆவணத்தின் 33 பத்திகளை
வேறுவேறு தலைப்புகளில்
பிரித்து அவை தொடர்பான
கேள்விகள் எழுத்துபூர்
வமாக தரப்பட்டன.
பங்கேற்றவர்களிலிருந்து,
முதலில் கேள்விகளை
வாசித்துவிட்டு
தொடர்புடைய ஆவண
பத்திகளை வாசிக்குமாறு
சொல்லப்பட் டது. அதன்பிறகு
அவர்களே கேள்விகளுக்கு
விடை தந்தனர்.
தோழர்கள் ஜெயப்பிரகாஷ்
நாராயணன், ரத்திஷ்குமார்,
கிருஷ்ணமூர்த்தி,
பிரதீப், சாமிநாதன்,
ரவிசந்திரன், பாபு,
பால சுப்பிரமணியன்,
மணிகண்டன், ராஜா,
குரு சாமி, வெங்கடாசலம்
ஆகியோர் பதில்
தந்த னர். ஒரு
விதத்தில் வகுப்பில்
கலந்துகொண்ட மாணவர்களே
ஆசிரியர் பாத்திரத்தையும்
வகித்தனர். அந்தந்த பகுதியை
வாசித்து கேள்விகளுக்கு
பதில்களையும்
சொன்ன பிறகு தோழர்
குமாரசாமி தேவைப்படும்
இடங்களில் கூடுதலாக
சில விளக்கங்கள்
தந்தார்.
ஆக, இரண்டு
வகுப்புகளிலும்,
அமைப் பாக்கப்பட்ட
தொழிலாளர்கள்
மத்தியிலான கட்சி
என்ற வசதியும்
வாய்ப்பும் நமக்கு
இருந்ததால் குறுகிய
நேரத்தில் வாசிப்பது
பங்கேற்பது விளக்குவது
ஆகிய மூன்று விசயங்களையும்
செய்ய முடிந்தது.
போதுமான முன்தயாரிப்புகள்
இருந்ததால் இவை
சாத்திய மாயின.
நாடாளுமன்ற தேர்தல்
தயாரிப்புகள்
குறித்து விவாதிப்பதற்காக
கூட்டப்பட்ட கட்சியின்
27.07.2013 மாவட்ட குழு
கூட்டத்தில், அடுத்து
தேசிய சூழல் மற்றும்
அமைப்பு அறிக்கையை
இரு தினங்கள் மாலை
வேளைகளில் நடத்திக்
கொள்ளலாம் எனவும்
மீதம் உள்ள தலைப்புகளை
ஒரு முழு நாள்
வகுப்பின் மூலம்
நடத்தலாம் என்றும்
திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14, 2013 வேலை
நிறுத்தப் போராட்டம்
துவங்கிய பிறகு
வகுப்புகளை எப்படி
நடத்தப் போகிறோம்
என்ற கவலை உள்ளது.
முதல்
வகுப்பில் கலந்து
கொண்டவர்கள் அனைவருமே
கிட்டத்தட்ட இரண்டாம்
வகுப்பில் கலந்து
கொண்டனர். இரண்டாம்
வகுப்பில் ஒரு
சிலர் கூடுதலாகக்
கலந்து கொண்டனர்.
ஆனால் இரண்டு வகுப்புகளி
லும் ஒரு பெண்
தோழர் கூட (கட்சி
உறுப்பி னர்களில்
பெண்கள் இருபதுக்கும்
குறைவு) கலந்து
கொள்ளவில்லை என்பது
எவ்விதத்தி லும்
ஏற்றுக்கொள்ள
முடியாத ஒரு பிரச்சனை
யாகும். வகுப்பில்
கலந்துகொண்டவர்கள்
வகுப்பை ஏற்பாடு
செய்தவர்கள் வகுப்பு
நடத்தியவர்கள்
வகுப்பு பயனுள்ளதாக
இருந்ததாக உணர்ந்தனர்.
********
குமரியில் அணுஉலை
எதிர்ப்பு மாநாடு
ஏஅய்சிசிடியு
குமரி மாவட்ட மீன்பிடித்
தொழிலாளர் சங்கத்தின்
3வது மாநாடு அணுஉலை
எதிர்ப்பு மாநாடாக
ஜூலை 28 அன்று குளச்சலில்
நடைபெற்றது. மாநாட்டிற்கு
ஏஅய்சிசிடியு
மீன்பிடித் தொழிலாளர்
சங்கத்தின் தலைவர்
தோழர் ஆன்றோ லெனின்
தலைமை தாங்கினார்.
ஏஅய்சிசிடியு
மாநிலத் துணைத்தலைவரும்
இகக(மாலெ) குமரி
மாவட்டச் செயலாளருமான
தோழர் அந்தோணிமுத்து
துவக்கி வைத்தார்.
அணுசக்திக்கெதிரான
மக்கள் இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளர்
தோழர் சுப.உதயகுமார்
கைப்பேசியின்
வாயிலாக மாநாட்டை
வாழ்த்திப் பேசினார்.
அது நேரடியாக
ஒலிபரப்பப்பட்டது.
இகக(மாலெ) மாநிலக்குழு
உறுப்பினரும்
ஏஅய்சிசிடியு
மாநிலத் துணைத்
தலைவருமான தோழர்
ஜி.ரமேஷ் சிறப்புரையாற்றினார். மாலெ கட்சி
மாநிலக்குழு உறுப்பினர்
தோழர் மேரி ஸ்டெல்லா,
மார்க்சிஸ்ட்
கட்சியின் பொறுப்பாளர்
தோழர் முத்துக்குமார்,
எம்சிபிஅய்(யு) கட்சியின்
தோழர் ஜார்ஜ்,
அணுஉலை எதிர்ப்பு
நடவடிக்கைக்குழுவைச்
சேர்ந்த திரு.
மணிவண்ணன்,
குமரி மாவட்ட பாசனத்துறைத்
தலைவர் வில்ஸ்
ஆன்றோ, கந்துவட்டிக்கு
எதிரான மக்கள்
இயக்கத்தைச் சேர்ந்த
திரு. ரவி, தூத்துக்குடி
கன்யாகுமரி மாவட்டத்தைச்
சேர்ந்த பங்குத்
தந்தையர்கள் திரு.தாமஸ்
கொசேரி, திரு.செர்வாசிஸ்,
திரு.லூர்துசாமி,
திரு.ஆண்டனி கிளாரட்
ஆகியோர் உரையாற்றினர்.
ஏஅய்சிசிடியு
குமரி மாவட்டச்
செயலாளர் தோழர்
சுசிலா நன்றி கூறினார்.
********
வறுமை ஒழிப்பு
= வறியவர் ஒழிப்பு
= அய்முகூ
அய்முகூ
ஆட்சிக் காலத்தில்
வறியவர் எண்ணிக்கை
குறைந்துவிட்டதாக
அய்முகூ ஆட்சியாளர்கள்
சொல்வதில் என்ன
தவறு?
பீகாரில்
23 பள்ளிக் குழந்தைகள்
பள்ளியில் தரப்பட்ட
நஞ்சு கலந்த சத்துணவால்
செத்துப் போனார்கள். இரண்டு
அய்முகூ ஆட்சிக்
காலங்களிலும்
சேர்த்து 2 லட்சத்துக்கும்
மேற் பட்ட விவசாயிகள்
தற்கொலை செய்து
கொண்டார்கள்.
ஊட்டச்சத்து
உணவில்லாமல் லட்சக்கணக்கான
குழந்தைகள் ஒவ்வோர்
ஆண்டும் சாகிறார்கள்
என்று ஆய்வுகள்
சொல் கின்றன.
இன்னும் கணக்கில்
வராத பட்டினிச்
சாவுகள் பலப்பல.
நாட்டில்
வறியவர் எண்ணிக்கை
இப்படி யாக குறைந்து
கொண்டுதான் இருக்கிறது. இன்னும்
கூட வறியவர் எண்ணிக்கை
குறைய நாடு முழுவதும்
வெவ்வேறு மாநிலங்களில்
மத்திய, மாநில
அரசாங்கங்கள்
கடுமையான முயற்சியில்
ஈடுபட்டுள்ளன.
அரியானாவில்
அரசுத் திட்டத்தில்
வழங் கப்பட்ட மாத்திரைகள்
உட்கொண்ட 800 பெண்
மாணவர்கள் வாந்தி
பேதியுடன் மருத்
துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ்
நாட்டில் தனியார்
கல்விக்கு பெயர்போன
நாமக்கல் மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்ட
சாதியினருக்கான
பெண் மாணவர் விடுதியில்
வழங்கப்பட்ட உணவு
அந்த மாணவர்களை
வாந்தி பேதியுடன்
மருத்துவமனைக்கு
கொண்டு வந்தது.
அதற்கு சில
நாட்களுக்கு முன்பு
வேலூ ரில் பள்ளி
மாணவர்கள் பள்ளியில்
வழங்கப் பட்ட மதிய
உணவால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்கள்.
பிறிதொரு நாள்
பள்ளி குழந்தைகளுக்கான
சத்துணவுத் திட்டத்தில்
வழங்கப்பட இருந்த
அழுகிய முட்டைகள்
கண்டுபிடிக்கப்பட்டன.
இப்படி
அரசுத் திட்டங்களாலேயே
வறிய மக்களை சாகடித்துவிட
முடியும். இவையன்றி
தனியாக வறுமைக்கோடு
என்று காங்கிரஸ்
காரர்கள் சில நாட்களாக
பேசிக் கொண்டிருக்
கிறார்கள். மூத்த, அனுபவமிக்க
தலைவர்கள் என்று
அறியப்படுகிற
அந்த காங்கிரஸ்
தலை வர்கள் எவ்வளவு
பொறுப்பற்றவர்கள்
என்றும் அவர்களே
வெளிப்படுத்திக்
கொண்டார்கள்.
அய்ஸ்கிரீம்
வாங்க காசு செலவழிக்கும்
போது அரிசி வாங்க
காசு செலவழிக்கக்
கூடாதா என்று பொருளாதார
மாமேதை சிதம்பரம்
கேட்டு முடித்த
சில நாட்களில்
ஒரு மாதத்துக்கு
600 ரூபாயில் அய்ந்து
பேர் கொண்ட குடும்பம்
நல்வாழ்வு வாழ
முடியும் என்று
டில்லி காங்கிரஸ்
முதலமைச்சர் ஷீலா
தீக்சித் சொன்னார்.
இந்தச் சுற்றில்
காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர்கள்,
மத்திய அமைச்சர்கள்
என பலருக்கும்
நாக்கு ஸ்திரமின்றி,
மனமிருந்தால்
ரூ.1க்கு சாப்பாடு,
டில்லியில் ரூ.5க்கு
சாப்பாடு, மும்பையில்
12 ரூபாய்க்கு முழுச்சாப்பாடு
என்று சொல்லி,
நியாயப்படுத்த
முடியாததை நியாயப்படுத்த
முயன்று மூக்குடைபடுகிறார்
கள். அவர்கள்
இப்படியாக நியாயப்படுத்தப்
பார்த்தது திட்ட
கமிஷன் சொல்லியிருக்கிற
வறுமைக் கோடு.
கிராமப்புறங்களில்
நாளொன் றுக்கு
ரூ.27ம் நகர்ப்புறங்களில்
நாளொன்றுக்கு
ரூ.32ம் செலவு செய்பவர்
வறியவர் இல்லை
என்று சொல்லும்
வறுமைக்கோடு இரண்டாண்
டுகளுக்கு முன்
முன்வைக்கப்பட்டு
நாடு முழுவதும்
எழுந்த கடுமையான
எதிர்ப்பின் பின்னணியில்
அடங்கிய அய்முகூ
ஆட்சியாளர் கள்,
பொருளாதார நெருக்கடி,
ரூபாய் மதிப்பு
சரிவு ஆகியவற்றை
பயன்படுத்தி வறுமைக்
கோட்டை குறைத்துச்
சொல்லி மக்கள்
நலத் திட்டச் செலவுகளைக்
குறைத்து கார்ப்பரேட்
நலத்திட்டங்களை
செயல்படுத்தப்
பார்க்கிறார்
கள். தேர்தல்
தயாரிப்பு நேரத்தில்
மக்களை விட கார்ப்பரேட்
நிறுவனங்கள் முக்கியம்.
தேர்தல் செலவுகளை
சமாளிப்பது முக்கியம்.
அத்தியாவசியப்
பொருட்கள் விலை
உயர்வால் உண்மைச்
சம்பளம் நாளும்
குறையக் குறைய,
சாமான்ய மக்களின்
வாழ்க்கைத் தரம்
தேயத்தேய, மக்களின்
சீற்றம் பொங்கப்
பொங்க மக்கள் கேள்விகளுக்கு
பதில் சொல்ல முடியாத
காங்கிரஸ்காரர்கள்
அந்தப் படுமோச
மான வாழ்நிலைமைகளையே
ஆஹா, அற்புதம்
என்று சொல்லப்
பார்க்கிறார்கள்.
இப்போதும்,
வறிய மக்கள் மீதான
இந்த குரூர நகைச்சுவையை
நாட்டு மக்கள்
ஏற்றுக் கொள்ளவில்லை. திக்விஜய்
சிங்கும், கபில்
சிபலும் திட்டக்
கமிசன் சொல்கிற
வறுமைக் கோட்டை
புரிந்துகொள்ள
முடியவில்லை என்று
சொல்கின்றனர்.
இன்று நேற்றல்ல,
காங்கிரஸ்காரர்களுக்கு
66 ஆண்டுகளாக இது
புரியவில்லை.
புரிந்து கொள்ளும்
வாய்ப்புத் தர
நாட்டு மக்களும்
இனி தயாராக இல்லை.
********
நடன தொழிலாளர்களும்
திராவக வீச்சுக்கு
ஆளான பெண்களும்
மஞ்சுளா
மகாராஷ்டிரா
அரசாங்கம் மும்பை
நடன விடுதிகளுக்கு
விதித்திருந்த
தடையை நீக்கிய
மகாராஷ்டிரா உயர்நீதிமன்ற
தீர்ப்பை உச்ச
நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இந்தத்
தீர்ப்பு டன் உடன்படாத
மகாராஷ்டிரா உள்துறை
அமைச்சர் ஆர்.ஆர்.படீல்
நடன விடுதிகளுக்கு
தடை விதிக்க அவசரச்
சட்டம் கொண்டு
வரப் போவதாகச்
சொல்கிறார். மாநிலத்தின்
நலன்களை கருத்தில்
கொண்டு ஏகமனதாக
தடை கொண்டு வரப்பட்டது
என்றும் நடன விடுதிகள்
பல குடும்பங்களை
அழித்துவிட்டன
என்றும் சொல்கிறார்.
மும்பைச் சமூகம்
குற்ற மயமாவதை
தடுக்க வேண்டுமானால்
நடன விடுதிகள்
இருக்கக் கூடாது
என்கிறார். நடன
விடுதிகளே மும்பைச்
சமூகத்தை குற்றமய
மாக்கிவிடும்
என்றால், மூன்று,
நான்கு மற்றும்
அய்ந்து நட்சத்திர
விடுதிகளில் நடக்கும்
நடன நிகழ்ச்சிகள்
மட்டும் மும்பைச்
சமூகத்தை தூக்கி
நிறுத்தி அதை சொர்க்கபுரியாக்கி
விடுமா? நடன விடுதிகளை
தடை செய்ததன் மூலம்
பெண்களின் கண்ணியத்தைப்
பாதுகாப் பதும்
உயர்த்துவதும்
அரசின் கடமை என்று
அரசியல் சாசனம்
வழிகாட்டுவதை
நிறை வேற்றியிருப்பதாக
ஆர்.ஆர்.படீல்
சொல்கிறார். மும்பையின்
சிவப்பு விளக்குப்
பகுதியான காமத்திபுரா
மும்பை பெண்களின்
கவுரவத்தை எந்த
விதத்தில் பாதுகாக்கிறது
என்று ஆர்.ஆர்.
படீல் விளக்க
வேண்டும்.
மும்பை
பெண்களோ, பிற மாநிலங்களில்
இருந்து மும்பைக்கு
வரும் பெண்களோ,
நாங்கள் நடன விடுதியில்
நடனமாடும் வேலை
தான் செய்வோம்
என்று உறுதி பூண்டவர்கள்
இல்லை. வேறு
வேலை கிடைக்காமால்
நடன விடுதிகளுக்கு
வந்தவர்கள். மகாராஷ்டிரா
அர சாங்கமோ, மத்திய
அரசாங்கமோ கவுரவமான
வாழ்க்கைக்கான
போதுமான பாதுகாப்பான
வேலை வாய்ப்பை
உருவாக்கியிருந்தால்
நடன விடுதிகளுக்கும்
காமத்திபுராவுக்கும்
பெண்கள் செல்லப்
போவதில்லை. ஆண்களுக்கும்
கவுர வமான வாழ்க்கைக்கான
போதுமான பாதுகாப்
பான வேலை வாய்ப்பு
இருக்குமானால்
அவர்களும் ஆர்.ஆர்.படீல்
குறிப்பிடுகிற
குற்ற மய நடவடிக்கைகளில்
இறங்கப்போவதில்லை.
மகாராஷ்டிரா
அரசாங்கம் 2005ல்
மும்பை நடன விடுதிகளை
தடை செய்த போது,
அதை நம்பி வாழ்க்கை
நடத்திய நடனப்
பெண்கள் என்ன செய்வார்கள்
என்று சிந்திக்கவில்லை. மாற்று
வேலைவாய்ப்பு,
மறுவாழ்வு என எந்த
நடவடிக்கையையும்
முன்வைக்கவில்லை.
கலாச்சாரத்தைக்
காப்பாற்றப் பார்த்தவர்கள்
அந்தக் கலாச்சாரத்துக்கு
ஊறு விளைவித்துக்
கொண்டிருந்த பெண்களுக்கு
தந்த தண்டனை என்று
அதை கருதியிருக்கக்
கூடும்.
மும்பை
நடன விடுதிகள்
தடை செய்யப் பட்டபோது
அதை நம்பி வாழ்க்கை
நடத்திக் கொண்டிருந்த
75,000 நடனப் பெண்களின்
குடும்பங்கள்
தத்தளித்தன. அந்தப்
பெண்கள் வேறு வழியின்றி
பாலியல் தொழிலுக்குத்
தள்ளப்பட்டார்கள்.
சிலர், தம்மை
திருமணம் செய்துகொள்ளும்
விருப்பம் தெரிவித்த
வாடிக் கையாளர்களை
திருமணம் செய்து
கொண்டு கூடுதல்
துன்பத்தை எதிர்கொண்டார்கள்.
நடன விடுதிகளை
தடை செய்தது, நோயை
விட பாதகமான விளைவுகள்
கொண்ட சிகிச்சை
என்று நீதிபதிகள்
தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
மும்பை
போலீஸ் சட்டத்தில்
திருத்தம் செய்து
நடன விடுதிகளுக்கு
தடை கொண்டு வரப்பட்டது. திருத்தம்
நட்சத்திர விடுதிகளில்
நடனங்களை அனுமதித்தது.
இந்த பாகுபாட்
டையும் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் கேள்விக்கு
உட்படுத்தினர்.
விதிவிலக்களிக்கப்பட்ட
விடுதி களில் ஆடப்படும்
அதே நடனம் தடை
செய்யப்பட்ட விடுதிகளில்
ஆடினால் மட்டும்
இழிவாகிவிடும்
என்று சொல்வதில்
நியாயம் ஏதும்
இல்லை என்றும்,
மேட்டுக்குடியினர்
மற்றவர்களை விட
மேலான கண்ணியம்
மற் றும் குணம்
கொண்டவர்கள் என்ற
கருத்தின் அடிப்படையில்
இந்த தடை விதிக்கப்பட்டுள்
ளது என்றும், நடனம்
உருவாக்கக் கூடிய
பாலியல் தூண்டுதல்
தடை செய்யப்பட்ட
விடுதிக ளில் கூடுதலாகவும்,
அனுமதிக்கப்ட்ட
விடுதிக ளில் குறைவாகவும்
இருக்க முடியாது
என்றும் அது உயர்
வர்க்கத்துக்கு
ஓர் அளவாகவும்
கீழ் வர்க்கத்துக்கு
வேறொரு அளவாகவும்
இருக்க முடியாது
என்றும் நீதிபதிகள்
அல்டமாஸ் கபீர்
மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார்
குறிப்பிட்டனர்.
மத்திய சுகாதார
மற்றும் குடும்பநல
அமைச்சகம் வெளியிட்டுள்ள
தகவல்கள்படி
2010 நாட்டில் உள்ள
பதிவு செய்யப்பட்ட
பாலியல் தொழிலாளர்
எண்ணிக்கை 6,88,751. இதில்
மகாராஷ்டிராவில்
இருப்பவர்கள்
எண்ணிக்கை மட்டும்
25,859. இந்த விவரங்கள்
நிச்சயமாக குறைமதிப்பீடாகவே
இருக்கும். நேகோ என்ற அமைப்பு
நாட்டில் 12.63 லட்சம்
பாலியல் தொழிலாளர்கள்
இருப்பதாகச் சொல்கிறது.
பாரதிய பதீத உத்தர்
சபா எனும் அமைப்பு
அந்த எண்ணிக்கை
24 லட்சம் என்றும்
மகாராஷ்டிராவில்
இருப்பவர்கள்
எண்ணிக்கை 3.50 லட்சம்
என்றும் மும்பையில்
மட்டுமே 14 சிவப்பு
விளக்கு பகுதிகளில்
2 லட்சம் பாலியல்
தொழிலாளர் இருப்பதாகவும்
சொல்கிறது. எப்படியிருப்பினும்,
மறுவாழ்வு கோரி
எந்த நடன தொழிலாளியும்
இதுவரை அரசாங்கத்தை
அணுகவில்லை என்று
சொல் லும் ஆர்.ஆர்.படீல்
பாலியல் தொழிலாளர்
நலன் காக்க இதுவரை
ஏதும் செய்ததாகவும்
விவரங்கள் இல்லை.
இந்திய அரசாங்கமும்
இவர் களுக்காக
இதுவரை ஏதும் செய்ததில்லை.
சுதந்திர இந்தியாவில்
இவர்கள் எண்ணிக்கை
அதிகரித்துக்
கொண்டே செல்வது
யதார்த்தம்.
மன்னர் காலத்தில்
நாட்டிய மங்கையர் உண்டு.
நமது ஆணாதிக்கக்
கலாச்சாரத்தின்
பிரிக்க முடியாத
பகுதியாக அவர்களுடன்
தேவதாசிகளும்
எப்போதும் உண்டு.
ஜனநாய கம் மலர்ந்த
பிறகு, எல்லோரும்
இந்நாட்டு மன்னரான
பிறகு, மன்னர்,
அந்தப்புரம், அதில்
மன்னர்க்கு சேவை
செய்ய நாட்டிய
மங்கையர் என்பதற்கு
பதில், அனைவருக்கும்
பாத்தியதை இருக்கும்
விதம் நடன விடுதிகள்
உருவாகியி ருக்க
வேண்டும். ஆணாதிக்க
சமூகம் தனது குற்றங்களுக்கு
மிகவும் வசதியாக
பெண்களை காரணமாக்கி
தான் தப்பித்துவிடுகிறது.
ஆணாதிக்கச்
சமூகத்தின் இல்லாத
கவுர வத்தைக் காப்பாற்ற
பெண்கள் வீடுகளுக்குள்
சிறைபடுவது போலவே,
ஆணாதிக்க விருப்பங்
களுக்கு இரை போட
பெண்கள் அரை குறை
ஆடைகளுடன் ஆபாசமான
அங்க அசைவுகளுடன்
நடன விடுதிகளில்
ஆட வேண்டும். வீடு என்றாலும்
விடுதி என்றாலும்
ஆண் தேவையை பெண்
நிறைவேற்ற வேண்டும்.
ஒன்று இலவசம்.
மற்றொன்றுக்கு
விலை இருப்பதால்
அதற்கு அனைவருக்கும்
வசதி இல்லாமல்
போகலாம் என்பதால்
அதற்கு ‘மதிப்பு’ குறைவு.
இலவசமாகக்
கிடைப்பது தொடர
வேண்டும் என்பதால்
அதற்கு தெய்வீக
அந்தஸ்து. ரிக்
கார்ட் டான்ஸ்
பார்க்க விரும்பிய
கணவனை அதிலிருந்து
தடுக்க ‘கேட்டேளே
அங்கே’ என்று
பாட்டுப் பாடி
அதே ரிக்கார்ட்
டான்ஸ் ஆடிக் காட்டிய
மனைவியை தமிழ்நாட்டு
ஆணாதிக்கச் சமூகம்
கொண்டாடியதை இங்கு
நினைவுபடுத்திக்
கொள்ள வேண்டும்.
காசு கொடுத்தால்தான்
‘சேவை’ கிடைக்கும்
எனும் போது செலவைக்
குறைக்க அந்தத்
தெய்வீகப் பெண்
வழங்கிய அதே ‘சேவை’ சந்தைக்கு
வரும்போது இழிவாகிவிடுகிறது.
இந்த
இலவச ‘சேவை’ செய்ய
முடியாது என்று
மறுத்த பெண்... அல்ல...
சிறுமி லஷ்மி தொடுத்த
வழக்கு இன்று திராவக
வீச்சுக்கு ஆளான
பெண்களுக்கு ஓரளவு
ஆசுவாசம் தந்துள்ளது. டில்லியைச்
சேர்ந்த லஷ்மிக்கு
இன்று 24 வயது. அவரது 16 வயதில்,
32 வயதான ஓர் ஆண்
அவரை காதலிப்பதாகச்
சொன்னார். இது
பற்றிய அவரது மூன்றாவது
கேள்விக்கும்
பதில் சொல்லாத
லஷ்மியை பேருந்து
நிறுத்தத்தில்
நின்று கொண்டிருந்த
போது அனைவரும்
பார்க்க கீழே தள்ளி
முகத்தில் திராவகத்தை
ஊற்றினார். எரிச்சலில்
துடித்த லஷ்மி
உதவி கேட்டு அலறியபோது
பேருந்து நிறுத்தத்தில்
நின்று நடந்த தாக்குதலை
பார்த்துக் கொண்டிருந்தவர்கள்
எதிர்த்திசையில்
ஓடினார்கள் என்று
சொல்கிறார் லஷ்மி.
பிறகு மருத்துவமனையில்
அனுமதி, சிகிச்சை,
சிதைந்துபோன முகம்,
சமூகத்தின் நிராகரிப்பு
அனைத்தையும் எதிர்கொண்ட
லஷ்மி, எனக்கு
ஒரு கனவு இருக்கிறது,
நான் வாழ வேண்டும்
என்கிறார். புதுச்சேரியின்
வினோதினி, தமிழ்நாட்டின்
வித்யா, மும்பையின்
ப்ரீத்தி போன்ற
இளம் பெண்களுக்கும்
கனவுகள் இருந்தன.
அவர்கள் அனைவரும்
அவர்கள் போல திராவக
வீச்சுக்கு ஆளான
பெண்களும் தாக்குதல்
தொடுத்த ஆண்களுக்கு
இலவச ‘சேவை’ செய்ய
மறுத்தவர்கள்.
காதலித்த பெண்களை
இப்படி சிதைக்கிறார்களே,
அந்தக் காதல் உண்மையா
என்று சிலர் கேள்வி
கேட்கிறார்கள்.
உண்மையில்
இங்கு பிரச்சனை
காதல் மறுப்பு
அல்ல, ‘சேவை’ மறுப்பு.
மறுப்பு எப்படியிருந்தாலும்
அதை ஏற்றுக்கொள்ள
ஆண்கள் இன்னும்
பயிற்றுவிக்கப்படவில்லை
என்றும் சொல்லப்படுகிறது.
ஆண்கள் பல முனைகளில்
மறுப்புக்களை
எதிர்கொள்கிறார்கள்.
வேலை மறுக்கப்பட்ட
ஆண் முதலாளி மீது
திராவகம் ஊற்றுகிறாரா?
பொய் வழக்குக்கு
ஆளான ஒருவர் காவல்துறையினர்
மீது திராவகம்
ஊற்றுகிறாரா?
பொதுவெளியில்
தொடர்ந்து பல உரிமைகளும்
மறுக்கப்படும்
ஆண்கள் அனைத்து
மறுப்புக்களுக்கும்
திராவ கம் இருக்கட்டும்,
வேறு எந்த விதத்திலாவது
உடனடி எதிர்ப்பு
காட்டுகிறார்களா?
ஒரு பெண் நிராகரிக்கும்போது
ஆண்மை என்ற கற்பிதம்
அடிபட்டு திராவகம்
பதிலாகிறது. இதற்கு தீர்வு
பெரியார் சொன்னதுபோல்
ஆண்மையை அழிப்பதைத்
தவிர வேறில்லை.
2005ல் பாதிக்கப்பட்ட
லஷ்மி 2006ல் தொடுத்த
வழக்கில்தான்
இன்று உச்சநீதிமன்
றம், திராவக வீச்சில்
பாதிக்கப்பட்ட
பெண்க ளுக்கு மாநில
அரசாங்கங்கள்
ரூ.3 லட்சம் இழப்பீடு
தர வேண்டும், குற்றவாளிகளுக்கு
10 ஆண்டுகள் சிறை,
திராவக விற்பனையை
கட்டுப்படுத்த
வேண்டும் என்று
சொல்கிறது.
2005ல் மகாராஷ்டிராவிலும்
டில்லியிலும்
வெவ்வேறு புள்ளிகளில்
துவங்கிய அந்த
வெவ் வேறு போராட்டங்கள்
உச்சநீதிமன்றத்தில்
2013ல் பாதிக்கப்பட்ட
பெண்களுக்குச்
சாதக மான தீர்ப்பு
என்பதாக தற்காலிகமாக
நிறைவு பெற்றுள்ளன.
இந்த இரண்டு
தரப்பு பெண்க ளுக்கும்
இன்னும் பதில்
வராத கேள்விகள்
உள்ளன. எங்களை
நிரந்தரமாக சிதைத்து
விடுகிற குற்றவாளிகளுக்கு
நிரந்தரமான சிறை
தண்டனை தரப்பட
வேண்டும், ரூ.3 லட்சம்
இழப்பீடு போதுமா,
எங்கள் மருத்துவத்துக்கு
நாங்கள் செலவு
செய்தது, இன்னும்
இருக்கிற மருத்துவ
செலவுகளுக்கு
என்ன செய்வது,
(25 அறுவை சிகிச்சைகள்
செய்ய வேண்டியிருந்த
அர்ச்சனா குமாரி
இதுவரை ரூ.15 லட்சம்
செலவு செய்துள்ளார்)
சிதைந்து போன எங்கள்
தோற்றத்தைப் பார்த்து
வேலை தர மறுக்கும்
போக்கு இருக்கும்போது
எங்கள் வேலை வாய்ப்புக்கு
என்ன செய்வது என்று
திராவக வீச்சுக்கு
ஆளான பெண்கள் கேட்கிறார்கள்.
8 ஆண்டுகளாக
வேலை இல்லாமல்
வாழ்க்கை இழந்த
நடன தொழிலாளர்கள்
இழந்ததை மீட்க
முடியாமல் திண்டாடுகிறார்கள்.
தமிழ்நாட்டில்
தமிழக மக்களின்
வாழ்க் கையை மேம்படுத்த
தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா ‘அதிதீவிர
நடவடிக்கைகள்’ எடுத்துக்
கொண்டிருந்தபோது,
ஓடும் பேருந்தில்
ஒரு மருத்துவர்
உடன் பயணித்த இரண்டு
பேரால் பாலியல்ரீதியாக
தாக்கப்பட்டார்.
அந்தக் கயவர்களிடம்
இருந்து தன்னை
பாது காக்கக் கோரிய
அந்தப் பெண்ணிடம்
நீ தந்த 500 ரூபாய்க்கு
அது வேறு செய்ய
வேண்டுமா என்று
ஓட்டுநர் கேட்டார்.
தொடர்ந்த சில மணி
நேர தாக்குதலை
பொறுத்துக் கொள்ள
முடியாமல் தனது
தந்தைக்கு அலைபேசியில்
நடப்பதை தெரிவித்த
பிறகு சக பயணிகள்
இரண்டு பேர் அந்தப்
பெண்ணுக்கு ஆதரவாக
குரல் எழுப்பினர்.
தாக்குதலுக்கு
ஆளான அந்தப் பெண்
நடத்தை கெட்டவராகக்
காட் டப்பட்டார்.
குற்றவாளிகள்
கைது செய்யப் பட்டுள்ளனர்.
அந்நிய நேரடி
முதலீட்டை எதிர்க்கப்
புறப்பட்டவிட்ட
ஜெயலலிதா இன்னும்
இதுபற்றி ஏதும்
சொல்லவில்லை.
அய்முகூ
அரசாங்கம் கிடப்பில்
போட்டு விட்ட நீதிபதி
வர்மா பரிந்துரைகளுக்கு
உயிர் தரும் போராட்டங்கள்
முன்செல்லும்போது,
பெண்களின் இடைவிடாத
போராட்டங்கள்
என்கிற தாக்குதலுக்கு
ஆளாகியுள்ள ஆணா
திக்கச் சமூகமும்
அதனைக் கட்டிக்
காக்கும் அரசாங்கங்களும்
கலாச்சாரக் காவலர்களும்
தங்கள் சிதைந்து
போன முகங்களை திருத்திக்
கொள்ளும் நடவ டிக்கைகளை
விரைந்து எடுக்க
வேண்டியிருக்கும்.
********
ஓராண்டாக சிறையில்
இருக்கும்
மாருதி தொழிலாளர்களை
விடுதலை செய்!
மனேசர் மாருதி
தொழிலாளர்கள்
147 பேர் கைது செய்யப்பட்டு
சிறையிலடைக்கப்பட்டு
ஓராண்டு நிறைவுறும்
நிலையில் பொய்யாக
குற்றம் சாட்டப்பட்டு
சிறையிலிருக்கும்
அனைவரையும் விடுதலை
செய்ய வேண்டும்,
வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கும்
2000க்கும் மேற்பட்டோருக்கு
மீண்டும் பணி வழங்க
வேண்டும், தொழிலாளர்களை
ஒட்டச் சுரண்டும்
ஒப்பந்த முறையை
அனுமதிக்கக் கூடாது
என்பன போன்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி ஜூலை
18 அன்று நாடு முழுவதும்
நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்
பகுதியாக தமிழகத்தின்
பல இடங்களிலும்
ஏஅய்சிசிடியு
ஆர்ப்பாட்டம்
நடத்தியது.
20000 அமைப்பாக்கப்பட்ட
மற்றும் அமைப்புசாரா
தொழிலாளர்கள்
மாருதி தொழிலாளர்களுக்கான
கோரிக்கைகள் அச்சிடப்பட்ட
அட்டையை அன்று
அணிந்திருந்தனர்.
சென்னையில்
மய்ய தொழிற்சங்கங்கள்
இணைந்து ஆர்ப்பாட்டம்
நடத்தின. ஆர்ப்பாட்டத்திற்கு
ஏஅய்சிசிடியு
மாநில துணைத் தலைவர்
தோழர் குமரேஷ்
தலைமை தாங்கினார். அம்பத்தூர்,
திருவெற்றியூர்
தொழில்பகுதிகளின்
அமைப்பாக்கப்பட்ட
தொழிலாளர்கள்
கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில்
ஏஅய்சிசிடியு,
தொமுச, உழைக்கும்
மக்கள் மாமன்றம்,
எச்எம்எஸ், சிஅய்டியு,
ஏஅய்யுடியுசி
ஆகிய தொழிற்சங்கங்களைச்
சேர்ந்த 500க்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள்
பங்குபெற்றனர்.
ஏஅய்சிசிடியுவின்
மாநிலச் செயலாளர்
தோழர் இரணியப்பன்
உரையாற்றினார்.
கோவையில்
மாருதி தொழிலாளர்களுக்கு
ஆதரவாக பிளாண்ட்
1 மற்றும் பிளாண்ட்
3 வாயில்களில்
நூற்றுக்கணக்கனோர்
கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. பிளாண்ட்
1 ஆர்ப்பாட்டத்திற்கு
தோழர் கிருஷ்ணமூர்த்தியும்,
பிளாண்ட் 3 ஆர்ப்பாட்டத்திற்கு
தோழர் குருசாமியும்
தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு
தயாரிப்பாக ஜூலை
14 அன்று ஏஅய்சிசிடியு
மாருதி தொழிலாளர்
ஒருமைப்பாடு கருத்தரங்கம்
நடத்தியது. கருத்தரங்கில்
ஏஅய்டியுசி, சிஅய்டியு,
தொமுச, எச்எம்எஸ்,
அய்என்டியுசி,
பிஎம்எஸ் மற்றும்
எல்எம்டபிள்யு
தொழிலாளர் சங்கங்களின்
தலைவர்கள் கலந்து
கொண்டு மாருதி
தொழிலாளர்களுக்கு
ஒருமைப்பாடு தெரிவித்தனர்.
திருபெரும்புதூரில்
கண்டனப் பொதுக்
கூட்டம் நடைபெற்றது. தோழர்
ராஜகுரு தலைமை
வகித்தார். கூட்டத்தில்
ஏஅய்சிசிடியு
மாநிலச் செயலாளர்
தோழர் கே.பழனிவேல்,
இரணியப்பன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
ஹ÷ண்டாய்
மற்றும் ஹ÷ண்டாய்
துணை நிறுவனங்களின்
தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டனர்.
நாமக்கல்
மாவட்டம் குமாரபாளையத்தில்
மாருதி தொழிலாளர்களுக்கு
ஆதரவாக ஜூலை 18 அன்று
பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்று
வேலைக்கு சென்ற
விசைத்தறித் தொழிலாளர்களுக்கு
மாருதி தொழிலாளர்களுக்கு
ஆதரவான கோரிக்கை
அட்டைகள் வழங்கப்பட்டன.
விசைத்தறி,
கட்டுமானம் மற்றும்
அமைப்புச்சாரா
தொழிலாளர்கள்
கோரிக்கை அட்டை
அணிந்து சென்றனர்.
நாமக்கல் ஏஅய்சிசிடியு
மாவட்ட செயலாளர்
தோழர் எ.கோவிந்தராஜ்
தலைமையில் நடைபெற்ற
பிரச்சார இயக்கத்தில்
மாவட்டக் கமிட்டி
தோழர்களுடன் சிவில்
சப்ளைஸ் கார்ப்பரேசன்
சங்க மாநிலப் பொதுச்
செயலாளர் தோழர்
கே.கோவிந்தராஜ்
கலந்துகொண்டார்.
சேலத்தில்
ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு
மாநில துணைத் தலைவர்
தோழர் சந்திரமோகன்,
சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில்
எச்எம்எஸ் தோழர்
கணேசன், டியுசி
தோழர் நீலகண்டன்
மற்றும் ஏஅய்டியுசியின்
தோழர் விமலன் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
தஞ்சையில்
கட்டுமானத் தொழிலாளர்கள்
கூடுமிடங்களில்
கோரிக்கை அட்டை
அணிந்து தங்களது
கண்டனம் தெரிவித்தனர்.
திருச்சியில்
துப்பாக்கித்
தொழிற்சாலையில்
நிரந்தரத் தொழிலாளர்களும்,
ஒப்பந்தத் தொழிலாளர்களும்
கோரிக்கை அட்டை
அணிந்து வேலைக்குச்
சென்றனர்.
களச்
செய்திகள் தொகுப்பு:
தேசிகன்
********
கூடங்குளம்
அணுஉலை திறப்பு
ஒரு மோ(ச)டி
வேலை
ஆபத்தான அணுஉலையை
உடனே மூட வேண்டும்
ஜூலை
13 அன்று அணுசக்தித்
துறை, இந்திய அணுசக்திக்
கழக அதிகாரிகள்
கூடங் குளம் அணுஉலையில்
மின்உற்பத்தி
தொடங்கி விட்டதாக
அறிவித்தார்கள். பதினைந்து
நாள் வாய்தா மந்திரி
நாராயணசாமியோ
இன்னும் ஆறு மாதத்தில்
இரண்டாவது அணுஉலை
இயங்கத் துவங்கும்
என அடுத்த சுற்று
வாய்தா அறிவிப்பை
ஆரம்பித்துவிட்டார்.
கூடங்குளத் தில்
உற்பத்தியாகும்
மின்சாரம் தமிழகத்திற்குத்
தான் என்று வாசனில்
இருந்து சுதர்சன
நாச்சியப்பன்
வரைக்கும் கிளிப்பிள்ளை
போலச் சொல்லிக்
கொண்டிருக்க, அணுசக்தித்
துறை அதிகாரிகளோ
நாங்கள் மின்சாரத்தை
உற்பத்தி செய்து
மத்திய தொகுப்பிற்கு
அனுப்பி விடுவோம்.
அவர்கள்தான்
மாநிலங்களுக்குப்
பகிர்ந்து தர வேண்டும்
என்கிறார்கள்.
உச்சநீதிமன்றம்
அணுஉலையைத் திறக்க
மே 6 அன்று பச்சைக்
கொடி காட்டியது. அதே வேளை,
அணுசக்தி ஒழுங்கு
முறை ஆணையம், அணுசக்தித்
துறை, இந்திய அணுசக்திக்
கழகம், ஆகியவை
“எல்லாம் சரியாக
இருக்கிறது” என்று
அறிக்கையை உச்சநீதிமன்றத்தில்
சமர்ப் பித்த பின்தான்
அணுஉலையில் உற்பத்தியை
ஆரம்பிக்க வேண்டும்
என்றது. ஆனால்,
இந்த மூன்று அமைப்புகளும்
ரகசியமாக உறையிட்ட
அறிக்கையை உச்சநீதிமன்றத்தில்
தந்துவிட்டு பதிலுக்குக்
கூட காத்திராமல்
அவசர அவசர மாக
அணுஉலையைத் திறந்துள்ளார்கள்.
பஞ்சாயத்துப்
பொதுக் கழிப்பறையையும்
பஸ் ஸ்டாப் நிழற்குடையையும்
தங்கள் பிறந்த
நாளுக்கு தண்ணீர்
பந்தலையும்கூட
ஆரவாரத் துடன்
திறந்து வைக்கும்
அமைச்சர்கள் ஒருவர்
கூட கூடங்குளம்
அணுஉலையைத் திறந்து
வைக்க வராதது ஏனோ?
கெட்டி மேளம் முழங்க
கொடநாட்டில் குட்டியூண்டு ஏடிஎம்மை
திறந்து வைத்தார்
ஜெயலலிதா. ஆதார்
அடை யாள அட்டையை
அமர்க்கள விழாவெடுத்து
வெளியிட்டார்கள்
சோனியாவும் மன்மோக
னும். ஆனால்,
14000 கோடி ரூபாய் திட்டம்,
மாபெரும் மின்உற்பத்தி
என்கிற அணுஉலைத்
திட்டத்தைத் தொடங்கி
வைக்க ஆட்சியாளர்
கள் எவரும் வராதது
ஏன்? அணுஉலையில்
கசிவு இருக்கும்
என்ற அச்சமா?
இருந்த இடத்தில்
இருந்தே வீடியோ
கான்பரன்ஸிங்
மூலம் திறந்து
வைத்திருக்கலாமே.
அவர்க ளுக்கேத்
தெரியும் ஊழல்
உபகரணங்களால்
உருவாக்கப்பட்டுள்ள
இந்த அணுஉலையில்
இப்போதைக்கு மின்சாரம்
கிடைக்காது என்று.
கூடங்குளத்தைச்
சுற்றி 16 கி.மீ. சுற்றள
வுக்கு மக்களே
கிடையாது என்று
சொன்ன அணுசக்தித்துறை
நிர்வாகம், இப்போது
அணுஉலையைச் சுற்றியிருக்கும்
கிராம மக்க ளுக்கு
சாலை வசதி, மருத்துவ
வசதி உட்பட எல்லா
வசதிகளும் செய்து
கொடுப்போம் என்கிறது.
நான்கு வால்வுகளில்
பழுது உள்ளது உண்மைதான்
என்று மந்திரி
நாராயணசாமியும்
ரஷ்யாவின் வால்வுகள்
இந்தியாவில் தயாரிக்கப்
பட்ட இதர பாகங்களுடன்
சரியாக பொருந்திப்
போகவில்லை என்று
அணுசக்தி ஆணையத்தின்
தலைவர் எம்.ஆர்.சீனிவாசனும்
ஒப்புக் கொண்டு
அறிக்கைவிட்டார்கள்.
இப்போது அவை
சரிசெய்யப்பட்டுவிட்டதா?
முதல் இரண்டு
அணுஉலைகளுக்கு
எதிரா கவே மக்கள்
தொடர்ந்து போராடிக்
கொண் டிருக்கும்
போது இனி கட்டப்படவிருக்கும்
3, 4, 5 அணு உலைகளுக்கு
மக்கள் மத்தியில்
கருத்துக் கேட்புக்
கூட்டம் நடத்தி
முடித்து விட்டோம்
என்றும் அதற்கு
ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது
என்றும் அணுசக்திக்
கழக அதிகாரிகள்
அப்பட்டமாகப்
பொய் பேசுகிறார்
கள். ஆனால், அணுக்
கழிவை என்ன செய்யப்
போகிறோம் என்று
இன்றுவரை சொல்ல
வில்லை. சுற்றியுள்ள
மக்களுக்கு பேரிடர்
நிர்வாகப் பயிற்சி
விரைவில் அளிக்கப்படும்
என்று வாய்தா நாராயணசாமி
வாய் கூசாமல் பேட்டியளிக்கிறார்.
பேரிடர் நிர்வாகப்
பயிற்சி இதுவரை
கொடுக்கப்படவில்லை
என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.
இதை வைத்தே
உச்சநீதிமன்றம்
அணுஉலைச் செயல்பாட்டைத்
தடை செய்ய வேண்டும்.
ஏதாவது அசம்பாவி
தம் நடந்தால் இழப்பீடு
யார் தருவார்கள்?
ரஷ்ய அரசா?
இந்திய அரசா?
அணுஉலையை அமைத்த
நிறுவனமா? இதுவரை பதில்
இல்லை.
எல்லாவற்றுக்கும்
மத்திய அரசை கண்டிக்
கும் தமிழக முதல்வர்
ஜெயலலிதா கூடங்கு
ளம், இடிந்தகரை
மக்களின் கேள்விகளுக்குப்
பதில் அளிக்காமல்,
உச்சநீதிமன்ற
வழிகாட்டு தல்களை
கடைபிடிக்காமல்
அவசரஅவசரமாக அணுஉலையை
மத்திய அரசு திறந்துள்ளதை
கண்டிக்காமல்
மவுனம் காக்கிறார்.
தமிழ்நாடு
மாசுக் கட்டுப்பாட்டு
வாரியத்தை கூடங்குளத்
தில் ஆல் ரைட்
என்று உச்சநீதிமன்றத்தில்
அறிக்கை தாக்கல்
செய்ய வைத்துள்ளார்.
போராடுகிற
மக்கள் மீது போடப்பட்
டுள்ள வழக்குகளை
வாபஸ் பெற முயற்சிக்க
வேண்டும் என்று
உச்சநீதிமன்றம்
சொன்ன பிறகும்
தொடர்ந்து பொய்
வழக்குகளை அந்த
மக்கள் மீது போட்டுக்
கொண்டிருக்கிறது
தமிழக அரசு. அணுஉலையைத்
திறக்க வேண் டும்
என்ற எண்ணத்தை
மக்கள் மத்தியில்
ஏற்படுத்த காற்றாலை
மின்சாரத்தை வாங்கா
மல் செயற்கையான
மின்வெட்டை ஏற்படுத்
திய அரசு இனி, காற்றாலை
மின்சாரத்தை வாங்கிக்
கொண்டு அணுஉலையில்
இருந்து மின்சாரம்
வருகிறது என்று
சொல்லும்.
ரஷ்யாவில்
வெடித்த செர்னோபிள்
அணுஉலைத் தொழில்
நுட்பம், ரஷ்யாவின்
ஸியோ போடோல்க்ஸ்
நிறுவனத்தால்
வழங் கப்பட்ட ஊழல்
உதிரிப்பாகங்களால்
உருவாக் கப்பட்டுள்ளதுதான்
கூடங்குளம் அணுஉலை
என்கிற உண்மை வெளிவந்துவிட்ட
நிலையில், ஸியோபோடால்ஸ்க்
நிறுவனத்தின் கொள்மு தல்
இயக்குநர் செர்ஜி
ஷடோவை ரஷ்ய அரசு
கைது செய்துள்ள
நிலையில், அந்நிறுவனத்தால்
வழங்கப்பட்ட அணுமின்
உபகரணங்களை வாங்கிய
ஈரான், பல்கேரியா,
சீனா போன்ற நாடுகள்
அந்நிறுவனத்தின்
மீது விசாரணை மேற்கொள்ள
இருக்கும் நிலையில்,
அணுசக்தி ஒழுங்குமுறை
ஆணையத்தின் முன்னாள்
தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன்
மற்றும் மக் கள்
நலன் காக்கும்
விஞ்ஞானிகள் கூடங்குளம்
அணுஉலை பாதுகாப்பற்றது,
அது இயக்கப் படக்
கூடாது என்று தொடர்ந்து
வலியுறுத்தி வரும்
நிலையில், மத்திய,
மாநில ஆட்சியாளர்
கள் கூட்டு சேர்ந்து
கொண்டு, “அணுஉலையில்
எல்லாம் சரியாக
இருக்கிறது” என்று
காண்பிப் பதற்காக
அவசர அவசரமாக அணுஉலை
இயக்கப்பட்டுவிட்டதாக
அறிவித்து தமிழக
மக்களை ஏமாற்றப்
பார்க்கிறார்கள்.
அணுஉலை
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு
அனுமதி கோரி காவல்நிலையத்தில்
மனு கொடுத்தால்
அதை வாங்கக் கூடத்
தயாராக இல்லை. வாங்கினால்
அனுமதி மறுக்கப்பட்
டது என்று எழுதித்தர
வேண்டியதிருக்கும்.
அதை வைத்துக்
கொண்டு நீதிமன்றம்
செல்வீர் கள்.
அதனால், வாங்கவே
முடியாது என்கிறார்
கள். ஆய்வாளரிடம்
கேட்டால் ஆணையாளர்
உத்தரவு என்கிறார்.
ஆணையாளரிடம்
சென் றால், எங்களுக்கு
அய்.எஸ் (இன்டெலிஜென்ஸ்
செக்ஷன்) உத்தரவு
அதனால் அய்.எஸ்
அதிகா ரியைப் பாருங்கள்
என்கிறார். அய்.எஸ். அதிகா ரிகள்
அவரைப் பாருங்கள்
இவரைப் பாருங்கள்
என இழுத்தடிக்கிறார்கள்.
புத்தகக் கண்காட்சி
யிலும் பொருட்காட்சியிலும்
அரசு சார்பில்
பல லட்ச ரூபாய்
செலவழித்து அணு
உலை ஆதரவு விளக்கப்
புத்தகங்களை இலவசமாக
விநியோ கிக்கும்
அரசு, மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்திற்குள்
பிரஸ் கிளப் இருப்பதால்,
பிரஸ் கிளப்பில்
அணுஉலை எதிப்பாளர்கள்
பேட்டியளிக்க
அனுமதிக்கக் கூடாது
என்று பிரஸ் கிளப்
நிர்வாகிகளுக்கு
நெருக்கடி தருகிறது
அணுஉலை
பற்றிய உண்மை வெளிவந்து
விடக்கூடாது என்பதற்காக
கடும் ஒடுக்கு
முறையை அடக்குமுறையைக்
கையாளுகிறது அரசு. அறிவிக்கப்படாத
நெருக்கடிநிலை
அமலில் உள்ளது.
உலகிலேயே பெரிய
ஜனநா யக நாடு என்று
பெருமை பேசிக்
கொள்ளும் ஆட்சியாளர்கள்
பன்னாட்டு நிறுவனங்களின்
நலன்களுக்காக,
இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்திற்கு
எதிராக இந்திய
மக்களின் பேச்சுரிமை,
எழுத்துரிமை, கருத்துரிமையைப்
பறிப்பது மட்டுமின்றி
மக்களின் வாழும்
உரிமையையே பறிக்கப்
பார்க்கிறார்கள்.
இடிந்தகரை,
கூடங்குளம் பகுதியில்
போலீஸ் படையைக்
குவித்து வைத்து
பதட்டத்தை ஏற்
படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இடிந்தகரை
மக்களுக்கு போக்குவரத்து
வசதியை முற்றிலு
மாக முடக்கி வைத்துள்ளது
மாவட்ட நிர் வாகம்.
பள்ளிக் குழந்தைகள்
பள்ளிக் கூடங்க
ளுக்குச் செல்ல
முடியவில்லை.
அத்தியாவசியப்
பொருள்கள் அம்மக்களுக்கு
கிடைக்கவில்லை.
அணுஉலைகள்
அமைப்பதற்கான
சர்வ தேச விதிகள்
அனைத்தையும் மீறி
வெளிப் படைத் தன்மை
இல்லாமல் சந்தேகத்திற்குரிய
வகையில், திறக்கப்பட்டுள்ளதாகச்
சொல்லப்ப டும்
கூடங்குளம் அணுஉலை
உடனடியாக மூடப்பட
வேண்டும். போராடுகிற
மக்கள் மீது போடப்பட்டுள்ள
அனைத்து பொய் வழக்கு
களையும் திரும்பப்
பெற வேண்டும்.
அப்பகுதி யில்
குவிக்கப்பட்டுள்ள
போலீஸ் படை திரும்ப
வேண்டும். அணுஉலை பற்றி
உண்மைக்குப் புறம்பான
தகவல்களை மக்களுக்கு
தருவதை அரசு நிறுத்திவிட்டு
வெள்ளையறிக்கை
வெளியிட வேண்டும்.
- ஜி.ரமேஷ்
********