COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION

COMMUNIST PARTY OF INDIA (MARXIST - LENINIST) - LIBERATION, TAMILNADU

Monday, September 12, 2011

தீப்பொறி செப்டம்பர் 2011

ஆகஸ்ட் மாதமும்
அகில இந்திய மாணவர் கழகமும்

அகில இந்திய மாணவர் கழகம் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக ஜ÷ன் 3 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் எழுந்த முதல் குரல். ஜ÷ன், ஜ÷லை மாதம் முழுவதும் ஜெயலலிதா அரசாங்கத்தின் மாணவர் விரோதப் போக்கிற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டமைத்த மாணவர் கழகம், ஆகஸ்ட் முழுவதும் நாடு முழுவதும் நடந்த ஊழல் எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பு, பெருந்தொழில் குழுமக் கொள்ளை எதிர்ப்பு போராட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு முன்முயற்சிகள் எடுத்துள்ளது.
ஆகஸ்ட் 7 அன்று ஊழலுக்கு எதிராக அகில இந்திய மாணவர் கழகம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆகஸ்ட் 9 அன்று டில்லியில் நடந்த மகாதர்ணாவில் தமிழ்நாட்டில் இருந்து 50 மாணவர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் 18 அன்று ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த அய்முகூ அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கமும் அகில இந்திய மாணவர் கழகமும் இணைந்து சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் அய்முகூ அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத அவசரநிலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தின.
கடலூரில் அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து ஊழல் எதிர்ப்பு தெருமுனைக் கூட்டங்கள் நடத்தின. கடலூரில் ஆகஸ்ட் 24 அன்று ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 26 அன்று, சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் புரட்சிகர இளைஞர் கழகம் இணைந்து மூவர் தூக்குத்தண் டனைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சுரேஷ் தலைமை வகித்தார். புரட்சிகர இளைஞர் கழக தோழர் முருகதாஸ், மதிமுக வழக்கறிஞர் அணி, மகஇக வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல் லூரி மாணவர்கள் கண்டன உரையாற்றினார்கள். மாலெ கட்சி மாநில கமிட்டி உறுப்பி னர் தோழர் கே.பாரதி ஆர்ப் பாட்டத்தில் நிறைவுரையாற்றி னார்.
ஜ÷லை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாடு முழுவ தும் ஊழலுக்கு எதிராகவும் கல்வி உரிமைக்காகவும் அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும் நடத்திய பிரச்சார இயக்கத்தில் 75,000 பேர் வரை சந்தித்துள்ளது. இந்த கால கட்டத்தில் வெவ்வேறு 18 எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் 3,000 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர். ரூ.80,000 வரை மக்கள் மத்தியில் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட வேலைகளை நோக்கி, செப்டம்பர் 10, 11 தேதிகளில் அகில இந்திய மாணவர் கழகம் கும்பகோணத்தில் கருத்தரங்கமும் கல்வி வகுப்பும் நடத்த உள்ளது. 2012 பிப்ரவரியில் அகில இந்திய மாணவர் கழக மாநில மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள் ளது.
தொகுப்பு: கே.பாரதி

தலையங்கம்

அதிசயங்கள் நிறைந்த ஆகஸ்ட் மாதம்

இந்திய மக்கள் ஊழலுக்கு எதிரான தங்கள் உணர்வை சீற்றத்தை, ஆகஸ்ட் மாதம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஊழலுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது ஒடுக்குமுறையை ஆட்சியாளர்கள் ஏவினார்கள். ஆனால், மக்கள் எதிர்ப்பின் முன் பணிந்தார்கள். நாடாளுமன்ற மேன்மையை முன்னிறுத்தி, வீதிகளில் நடக்கும் போராட்டங்களைச் சிறுமைப்படுத்தினார்கள். ஜனநாயகத்துக்கு ஆபத்து என ஊளையிட்டார்கள். கடைசியில் வேறு வழியில்லாமல், தங்களது பலவீனமான லோக்பால் மசோதா தாண்டி, ஜன்லோக்பால் மசோதாவையும் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டார்கள், ‘அவையின் உணர்வு’ என மேசையைத் தட்டி, தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்தியாவின் வளங்களை பெருமுதலாளிகள் சூறையாடு கிறார்கள், அதற்கு முதலாளித்துவ அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் துணை போகிறார்கள், பிரதமர், முதலமைச்சர்கள், நீதிமன்றங்கள், ராணுவம் என எங்கும் நீக்கமற தன் கரங்களை விரித்துள்ளது ஊழல், அது, முதலாளித்துவ பொருளா தாரத்திற்கும், முதலாளித்துவ அரசியலுக்கும் பாலமாக இருக்கிறது என்ற புரிதல் பரவியது. தீவிரமடைந்தது. மத்திய அமைச்சர்கள் சிறை மீளாதபோது, பாஜக முதல்வர் எடியூரப்பா பதவியை இழந்தார். நீதிபதி தினகரன் பதவி விலகினார். கையாடல் செய்த நீதிபதி சென் மீது கண்டனத் தீர்மானத்தை நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியது.
மக்கள் சீற்றம், பலதரப்பட்ட மக்களையும், புதிய தலைமுறையினரையும், புதிய பிரிவினரையும், ‘என் நாடு’ எனப் பேச வைத்ததையும், ‘என் நாட்டில் ஊழல் கூடாது’ என்று சொல்ல வைத்ததையும், நிச்சயமாய் வரவேற்போம். லோக்பால் எப்படி யாரைக் கொண்டு அமைப்பது, லோக்பால் எடுத்துக் கொள்ள வேண்டிய விசயங்கள் எவை போன்ற விசயங்களில் ஆளும் வர்க்க சதிகள் விசயத்தில், மக்கள் விழிப்போடு இருந்து, தங்கள் செயலூக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். லோக்பால் தேர்வுமுறை, லோக்பாலில் சிறுபான்மையினரின், புறக்கணிக்கப் பட்டவர்களின் பிரதிநிதித்துவம், பிரதமர் ராணுவம் என்ற நிறுவனங்களைக் கொண்டுவருவது, பெருந்தொழில் நிறுவனக் கொள்ளை, அரசு கஜானவை சூறையாடுதல், நலத்திட்ட நிதி விழுங்கப்படுதல் போன்றவற்றை மட்டுமல்லாமல், ஊடகங்களையும் தொண்டு நிறுவனங்களையும் கூட லோக்பால் வரம்பில் கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட ஆகஸ்ட் விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது. சட்டமன்றத்துக்கு வெளியே நடந்த போராட்டங்கள், சட்டமன்றம் மீதும், நீதிமன்றங்கள் மீதும் செல்வாக்கு செலுத்தின. சமச்சீர் கல்வி வேண்டும் என்ற தமிழக மக்களின், மாணவர்களின் போராட்டங்கள் நீதி மன்றங்களின் கதவுகளுக்குள்ளும் நுழைந்தது. எதிரொலித்தது. பொதுப் பாடத்திட்டத்தையும், பாடங்களையும் திருத்தச் சட்டம் மூலம் ஒழித்துக்கட்டப் பார்த்த ஜெயலலிதா, பண்டித விளக்கங்கள் தரும் ஜெயலலிதா, பொதுப் பாடத்திட்டம் 2011 - 2012 கல்வி ஆண்டு முதலே அமலாகும் என ஒரே வாக்கியத்தில் முடித்துக்கொண்டார். இலங்கைத் தமிழ் மக்களின், தமிழீழ விடுதலைப் புலிகளின் பகைவரான ஜெயலலிதா, ராஜபக்சேவை குற்றவாளியாக்கும் தீர்மானம் கொண்டுவர நேர்ந்தது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் மரண தண்டனை, ஒரு கொடுங்கோல் சட்டத்தின் கீழ், ஜனநாயக உரிமை மீறப்பட்டு நிகழ்த்தப்பட்ட அரசியல் படுகொலை. இப்பிரச்சனை யிலும் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என 29.08.2011 அன்று கைவிரித்த ஜெயலலிதாவை, கருணாநிதியைத்தான் கேட்க வேண்டும் என்று பேசிய ஜெயலலிதாவை, தமிழக மக்கள் விருப்பத்திற்கும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கும் மதிப்பளித்து, 30.08.2011 அன்று சட்டமன்றத்தில், மரண தண்டனையைக் குறைக்கத் தீர்மானம் போட வைத்தன, சட்டமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்கள்.
சட்டமன்றத்தில், ஜெயலலிதாவின் கூட்டணிக் கட்சிகள் நூறு நாட்கள் சாதனை, நூற்றுக்கு நூறு என்றெல்லாம் துதி பாடும் போது, சில நலத்திட்ட அறிவிப்புகளை வசதியாக முன்நிறுத்தி, விவசாய/கிராமப்புற தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜெயலலிதா அரசு முடுக்கி விட்டுள்ளது.
கல்வி, தொழிலாளர்கள் நலன், மருத்துவம் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாத பட்ஜெட், முதலாளிகளுக்கு நிலம் தர நில வங்கி, மூலதனத்திற்குச் சலுகைகள், மூலதனம் விவசாயத்தில் ஊடுருவ வாய்ப்புக்கள், கிராமப்புற மேட்டுக் குடியினர் நலன்களுக்கு விசுவாசம் ஆகியவற்றால் குறிக்கப்படுவதாக அமைந்துள்ளது. மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தராமல் ஏமாற்றமே தந்துள்ளது. நலத் திட்டங்களும், குறுகிய வரம்பிற்கு உட்பட்டவையே.
ஜெயலலிதா ஆட்சி, சட்டமன்றத்திற்கு வெளியே நடக்கும் போராட்டங்களின் வீச்சை, ஆகஸ்ட் மாதம் காண நேர்ந்தது. பணிய நேர்ந்தது. மக்களின் வாழ்வுரிமைகளுக்கான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங் களை, தீவிரப்படுத்தும் வாய்ப்பை, தேவையை, ஆகஸ்ட் மாதம் சுட்டிக்காட்டுகிறது.

முகத்திரையை கிழித்த மரண தண்டனை

தமிழகத்தில், வழக்கமாக, சட்டமன்றத் தில் நாடாளுமன்றத்தில் இடம் பெறும் தேசிய, மாநிலக் கட்சிகள் தாண்டிய, மக்கள் இயக்கங்களின் போராட்ட நடவடிக்கைகள், அவ்வளவாக ஊடகக் கவனம் பெறுவதில்லை. அவை முக்கிய நிகழ்வுகளாகக் காணப்படுவதில்லை. ஆனால், இம்முறை, திமுக, அஇஅதிமுக கட்சிகளோ, இரண்டாம் மூன்றாம் நிலைக் கட்சிகளான மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்றவையோ, வழமையான தமிழ் தேசிய கட்சிகளோ வழிநடத்தாத, மக்கள் போராட்டங்கள், முன் எழுந்து வந்தன. நீதிமன்ற, சட்டமன்ற கவனம் பெற்றன. செல்வாக்கு செலுத்தின.
போராட்டங்களில், மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், படித்த மற்றும் இதர நடுத்தர மக்கள், சாமானிய மக்கள், தொழிலாளர்கள் போன்ற பல பிரிவினரும் ஈடுபட்ட னர். வைகோ, சீமான் வகைப்பட்ட ஈழ ஆதரவாளர்கள், அம்மாவின் தாயுள்ளத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழ் தேசியம் பேசுபவர்கள், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தேசிய இனங்களுக்கு விரோதியான வன்மையான இந்திய அரசை, ஸ்ரீலங்கா -பாகிஸ்தான் - சீனா அச்சுக்கு எதிராக நிற்குமாறு அழைப்பு விடுக்கிறார்கள். ஜெயலலிதாவும் இந்திய அரசும், ஸ்ரீலங்காவில் சிங்களப் பேரின வாதத்தால் வேட்டையாடப்படும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். இது, புலி ஆட்டை பாதுகாக்கும், முதலாளித்துவமும் கிராமப்புற மேட்டுக் குடியினரும் முறையே தொழிலாளர்களையும் விவசாயத் தொழி லாளர்களையும் பாதுகாப்பார்கள் என்ற கருத்திற்கு ஈடானதாகும்.
மன்மோகன் தலைமையிலான அய்முகூ அரசை திரும்பத் திரும்ப நாடாளுமன்றத்தில் காப்பாற்றும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரசின் கே.வி.தங்கபாலு, விஸ்வ இந்து பரிஷத், சுப்பிரமணியசாமி ஆகியோர் மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்ற கருத்தில் உறுதியாய் நின்றார்கள்.
பிருந்தா காரத் சட்டப்படிதான் எதுவும் எனச் சொல்லி, மார்க்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டைப் புலப்படுத்தினார். நெஞ்சில் ஈரமுள்ள சட்டமன்றத்தின் கருணை என்றார் மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்றத் தலைவர் சவுந்தரராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனோ ஜெயலலிதா ஒரு பெண் என்ற விதத்தில் தலையிடுமாறு வேண்டுகின்றார். தமிழர்களைக் காப்போம், மரண தண்டனையே கூடாது என்ற குரல்களும் கூட போராட்ட இயக்கத்தில் ஒலிக்கவே செய்தன.
கருணாநிதியின் கயமை சட்டமன்றத்தில் ஜெயலலிதாவால் அம்பலப்படுத்தப்பட்டது. 2000ல் மூவர் கருணை மனுவை கருணாநிதி நிராகரித்தார். இப்போதும், நீண்ட காலம் சிறையில் இருந்தவர்கள் என்ற காரணத்தால்தான் தலையிடுகிறாராம்.
அம்மையார் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 72, 161, 257 என்றெல்லாம் காரணம் சொல்லி தலையிட மறுத்தார். முந்தைய நாள் மறுத்ததையே மறுநாள் தீர்மானமாகப் போடும்போது, அதே 72ம், 161ம், 257ம் தடுக்கவில்லை என்பதை, தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 72ல் மரண தண்டனையைக் குறைக்கும் அதிகாரம், குடியரசுத் தலைவருக்கு (மத்திய அரசுக்கு) தரப்பட்டுள்ளது. பிரிவு 72 (3) குடியரசுத் தலைவரின் (மத்திய அரசின்) இந்த அதிகாரம், ஆளுனர் (மாநில அரசு) அதிகாரத்தை செலுத்துவதைப் பாதிக்காது என, திட்டவட்டமாகச் சொல்கிறது. பிரிவு 161 ஆளுனருக்கு (மாநில அரசு) சுதந்திரமாக மரண தண்டனை குறைப்பு அதிகாரம் தந்துள்ளது. பிரிவு 257 மத்திய அரசு மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என சில விசயங்களில் வழிகாட்டுதல் தருவது பற்றிக் குறிப்பிடுகிறது. மூவரின் கருணை மனு, 11 ஆண்டுகள் தாமதமானதாலேயே, அது குறித்த நீதிமன்ற தீர்ப்புகளையும் கணக்கில் கொண்டு, சுதந்திரமாக மாநில அரசு பிரிவு 161ன் கீழ் மரண தண்டனையைக் குறைக்குமாறு ஆளுனருக்கு பரிந்துரைக்க முடியும். இதற்கு எந்த சட்டத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா மக்கள் விருப்பத்திற்கும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப் பளித்து, மூவர் மரண தண்டனை குறைப்பு தீர்மானம் கொண்டு வந்தாரே தவிர, தமது சொந்த விருப்பத்தால் அல்ல என்பதை தமிழகம் பதிவு செய்து கொள்ளும். இதே ஜெயலலிதா நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட போது பொங்கியெழுந்து பேசியதை, 2008ல், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதமாவது பற்றியும், நளினியின் தண்டனை குறைக்கப்பட்டது பற்றியும் ஜெயலலிதா கண்டித்து அறிவிப்பு வெளியிட்டதை, தமிழ் தேசியம் பேசுபவர்கள் மறக்கலாமே தவிர, தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.
மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை கூடாது, பொதுவாக மரண தண்டனையே கூடாது என்ற குரல்களின் பின்னால் உள்ள உணர்வுகளை மதிக்கலாம். ஆனால், பிரச்சனையின் ஜனநாயக மற்றும் அரசியல் இயல்புகளின் தீவிரத்தை, இந்த வாதங்கள் நீர்த்துப் போக வைக்கும் என்பதையும் காண வேண்டும்.
ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதையோ, அரசியல் ஒடுக்குமுறை ஏவப்பட்டதையோ, அதில் பேரறிவாளன் போன்றோர் பலியான தையோ எப்படி மறக்க முடியும்?
பேரறிவாளன் தடா என்ற ஆள்துôக்கி ஆட்கொல்லி சட்டத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். தடா சட்டம் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பொருந்தாது என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், அவரது தண்டனைக்கு ஆதாரமாக்கப்பட்டது. இரண்டு ஒன்பது ஓல்ட் பேட்டரிகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இது அரசியல் படுகொலை இல்லையா? பதினொரு ஆண்டுகளுக்கு மேல் கருணை மனுவின் மீது உத்தரவிடாமல் இருந்தது, இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருந்து, இப்போது தூக்கு தண்டனை என்பது, ஜனநாயக உரிமைகள் மீறல், மனித உரிமைகள் மீறல் இல்லையா?
சட்டத்தின் ஆட்சி, நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற புனிதமான முதலாளித்துவச் சட்ட வசனங்களை, நாம் ஆட்சியாளர்களை நோக்கித் திருப்ப வேண்டாமா?

சிறப்புக் கட்டுரை

ஜெயலலிதா அரசின் நூறு நாட்களும் நிதிநிலை அறிக்கையும்

எஸ்.குமாரசாமி

ஜெயலலிதா அரசின் நுôறு நாட்களும் நிதி நிலை அறிக்கையும் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரவில்லை. ஏமாற்றமே தந்துள்ளன.
எதிர்ப்பாரே இல்லாத சட்டமன்றம்
தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்த லுக்கு முன்பே, கோவை பொதுக் கூட்டத்தில், அஇ அதிமுக ஆளும் கட்சி தேமுதிக எதிர்க்கட்சி எனச் சரியாகக் கணித்துச் சொன்னார். பாராட்டுக்களால் அம்மாவுக்குத்தான் சுமை என்றும் மக்களுக்கு சுகம் தான் என்று சொல்லி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என ஜெயலலிதா நிரூபித்துள்ளதாகப் புகழ்கிறார். ஆளும் கட்சியோடு எதிர்க்கட்சி கூடி வாழ்ந்தால், இருதரப்பினரும் கோடிகோடியாய் நன்மை பெறலாம் என எதிர்க்கட்சிக்கு புதிய இலக்கணம் சொல்கிறார்.
அம்மாவின் அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் கட்சி ஆதரிக்கிறது என்கிறார் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆறுமுகம். அந்த நுôறு நாட்கள் என்று சொல்லும்விதம் இந்த நுôறு நாட்கள் இருக்கும் என சொற்சிலம்பம் ஆடுகிறார், மார்க்சிஸ்ட் கட்சியின் சவுந்தரராஜன். தமிழகத்தில் பிறந்திருக்கக் கூடாதா என இந்தியாவின் இதர மாநில மக்கள் ஏங்குவதாகச் சொல்கிறார், அமைச்சர் கோகுலஇந்திரா.
ஜெயலலிதா, தமக்கு, விதிவிலக்கின்றி அனைவரும் அளித்துள்ள பாராட்டுக்கள், அடுத்த அய்ந்தாண்டுகளில் வரும் ஒவ்வொரு நுôறு நாட்களிலும் இவ்வாறு சாதிக்க வேண்டுமே என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லி, கருணாநிதியால் வந்த கடன், மத்திய அரசின் பாராமுகம் என்ற சீட்டுக்களையும் வசதியாக ஆடியுள்ளார். திமுகவினர் தமிழகத்தின் ஒவ்வொரு சிறைச்சாலைக்கும் திகார் சிறைச்சாலைக்கும் செல்ல வேண்டிய காரணத்தால், அவையைப் புறக்கணித்ததும் அம்மாவிற்கு வசதியாகப் போனது. மிகவும் புத்திசாலியான ஜெயலலிதா இந்த நிதிநிலை அறிக்கையில் ஏது மில்லை, போகப்போகப் பார்க்கலாம் எனக் குறிப்பால் உணர்த்த, ஒரு பாட்டும் பாடியுள்ளார்.
‘வருந்தாதே ஏழை மனமே
வரும் காலம் நல்ல காலம்
மனம்போல இன்பம் நேரும்
திருநாளும் வந்து சேரும்’

நிதிநிலை அறிக்கையை அலசிப் பார்த்தால்

நல்லாட்சி அல்லது நல்ல ஆளுகை: இதுதான், குட் கவர்னன்ஸ் என்ற இதுதான் மோடி, நித்ஷ் போன்ற பாஜக மற்றும் பாஜக கூட்டணி முதல்வர்களுக்கு முதலாளித்துவ ஊடகங்கள் அளிக்கின்ற பாராட்டுக்கள். ஜெயலலிதா மின்னணு ஆளுகையே நல்லாட்சி என்கி றார். ஆஹா, ‘ஆதார்’ பார், இனி எல்லா நலப்பயன்களும் பொது விநியோகமும், பயனாளிகளுக்கு உரிய காலத்தில் முழுமையாகச் சேர்வதற்கு அங்க அடை யாள ‘ஆதார்’ அட்டைகளே ஒரே வழி என்கிறார். மக்கள் நலனுக்கும் நவீன அடையாள அட்டைக்கும் முடிச்சு போடுவது, எந்த விதத்திலும் ஏற்றம் தராது. ஏமாற்றும் மோசடிக்கே வழிவகுக்கும்.

விவசாயம்

நகர்மயமாதலின் விளைவால் விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகின்றன என்பதை நிதிநிலை அறிக்கை ஒப்புக்கொள்கிறது. இந்திய தொழில் கூட் டமைப்பு (இஐஐ) ஆய்வறிக்கைப்படி 2015ல் 1 கோடியே 30 லட்சம் முதல் 1 கோடியே 50 லட்சம் வரை திறன் மிக்க பணியாளர்களுக்கான தேவை இருக்குமென நிதிநிலை அறிக்கை சுட்டிக்காட்டும்போது, விவசாயம் மேலும்மேலும் சிதைவுறும் எனச் சொல்லாமல் சொல்கிறது.
நிதிநிலை அறிக்கையின் முன்வைப்புக்களான இயந்திரமயமாக்கல், பெரும் மூலதன நுழைவு, கிராமப்புற மேட்டுக்குடியினரை பலப்படுத்தும். சிறுகுறு நடுத்தர விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் சேதப் படுத்தும். மாநிலம் தழுவிய அளவில் எந்திரமய மாக்கல் துரிதப்படுத்தப்படும், தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கை செய்கிறது, நிதிநிலை அறிக்கை. வேலையாள் பற்றாக்குறை என பொய் காரணம் காட்டி பிரும்மாண்டமான கிராமப்புற வேலையின்மையை மறைக்கிறது. நிச்சயமாய் புதிதாக நுழையும் எந்திரங்கள் ஏழை, நடுத்தர விவசாயிகள் கைகளில் இருக்காது.
பயிரிடும் திறன் மற்றும் பாசனத்திறன் முன்னேற் றத்தில்தான் தீர்வு இருக்கிறதாம். உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் குளிர்ப்பதன வசதிக ளை நிறுவுவது, காய்கள் பூக்கள் பழங்கள் போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிடும் பரப்பை அதிகரிப்பது போன்றவையே தீர்வுகளாம். உழைக்கும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விதத்தில் விவசாயத்தை மாற்ற, சுலபக் கடன்கள் வழங்குவது, பொதுமுதலீட்டை அதிகரித்து உள்கட்டுமான வசதிகளைப் பெருக்குவது, நியாயமான கொள்முதல் விலை தருவது போன்றவை பிரச்சினைகளாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை. விவசாயிகள் என பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டு, இரண்டாம் பசுமைப் புரட்சி என வாய்ப்பந்தல் போட்டு, 2, 3 மடங்கு வருமானம் பெருகும் என மந்திரத்தால் மாங்காய் காய்க்கும் என்கிறது நிதிநிலை அறிக்கை.

விவசாயத் தொழிலாளர், கிராமப்புறத் தொழிலாளர், சிறுகுறு விவசாயிகளுக்கு சாட்டையடி

தமிழ்நாட்டில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர் கள் 86 லட்சம் பேர் இருப்பதாகவும், ஏழை சிறு விவசாயிகள் கிராமப்புறத் தொழிலாளர்கள் 1.44 கோடி பேர் இருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஜெயலலிதாவோ, விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை, அதற்கான சட்டத்தை ரத்து செய்துவிட்டார். சர்வசாதாரணமாக, மிகவும் ஆணவமாக, கிராமப்புற ஏழைகள்தானே என்ற எண்ணத்தில் மாற்று ஏதும் சொல்லாமலே முடித்துக் கட்டிவிட்டார். நிதிநிலை அறிக்கையில் இதற்கான எந்த ஒதுக்கீடும் இல்லை. ஜெயலலிதாவும் தம் பங்கிற்கு கருணாநிதி போல் சொல்லாததையெல்லாம் செய்யத் துவங்கிவிட்டார்.
எந்திரமயமாக்கல் இயக்கப்போக்கு, தமிழகத்தில் கிராமப்புற வேலையின்மையை வறுமையை மேலும் தீவிரமாக்கும். எந்திரமயமாக்கல், நகர்மயமாதல் மற்றும் விளைநிலங்கள் சுருங்குதல் போன்றவற்றோடு சேரும்போது, கிராமப்புற வறியவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் கூட்டம்கூட்டமாய் மூலதன சேவைக்காக நகரம் நோக்கி ஓட வேண்டியிருக்கும்.
தமிழ்நாட்டில் 100.75 லட்சம் குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கோரி தம்மை பதிவு செய்துள்ளனர். ஜ÷லை 2011 வரை 31 லட்சம் பேருக்குத்தான் வேலை தரப்பட்டுள்ளது. திட்டம் துவங்கி இன்றுவரை ஓராண்டிலும் கூட 100 நாள் வேலை நுôறு சதம் தரப்பட்டதில்லை. ஒருவர் கூட சட்டம் சொல்லும் வேலை யில்லாப்படியைப் பெற்றதில்லை. இறந்தவர்கள் வெளிநாடு வெளியூர் சென்றவர்கள் வேலை செய்து சம்பளம் பெற்றதாக பதிவுகள் உண்டு.
இவ்வளவுக்கும் பிறகு தமிழக கிராமப்புறங்களில் பல சாதியினரும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகளாக வேலை உறுதித் திட்ட பணியிடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என கிராமப்புற மேட்டுக்குடி மேல்சாதி சக்திகள் கூக்குரலிடுகின்றன.
எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்ளும் ஜெயலலிதா அரசு, மத்திய சட்டத்தின் அட்டவ ணையை பார்க்காமலேயே, அதன்படி முடியுமா எனத் தெரிந்துகொள்ளாமலேயே மனம் போன போக்கில் உச்ச வேளாண்பருவக் காலத்தில் திட்டத்தை நிறுத்துவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களை தனியார் நிலங்களில் வேலை செய்யச் சொல்வது போன்ற விசயங்களை பற்றியெல்லாம் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் நாள்கூலி ரூ.100ல் இருந்து ரூ.119 ஆக உயர்த்தப்பட்டபோது அநியாயமாய் வேலையின் அளவும் உயர்த்தப்படடுள்ளது. ரூ.119 கூலி இருக்கட் டும், ரூ.100 கூலி வாங்குவதே பெரும்பாடு என்பது தான் உண்மைநிலை.
இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், தமிழக மக்களின் மிகப்பெரும் பிரிவினரான கிராமப்புற தொழிலாளர் வர்க்கத்தின் மீது தமிழக அரசு ஒரு மிகப் பெரிய தாக்குதல் தொடுத்துள்ளது தெரிய வரும். வாக்களித்து மாற்றம் தந்த இந்த மக்களுக்கு ஏற்றம் தராமல் எட்டி உதைத்துள்ளது, தமிழக அரசு.

ஆடும் மாடும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?

நிதிநிலை அறிக்கையின்படி வருடத்திற்கு 12,000 கலப்பின கறவை மாடுகள் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரப்படும். 5 ஆண்டுகளில் 60,000 மாடு கள். இந்த ஆண்டு ஒதுக்கீடு ரூ.56 கோடி. அதேபோல், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு ரூ.12 ஆயிரம் மதிப்புடைய நான்கு ஆடுகள் தரப்படும். இந்த ஆண்டு ஒரு லட்சம் குடும்பங்களுக்குத் தரப்படும். ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுக்கு 1.5 லட்சம் குடும்பங்களுக்கு என அடுத்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள். அரசின் கணக்குப்படியே ஆடு தருவதால் பயன்பெறும் குடும்பங்கள், மொத்த கிராமப்புற குடும்பங்களின் 10 சதம் மட்டுமே. 70 லட்சம் குடும்பங்களில் 7 லட்சம் குடும்பங்களுக்கு ஆடுகள் கிடைக்கும். 60 ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே மாடுகள் கிடைக்கும்.
ஜெயலலிதா ஆடு மாடு தவிர பல நலத் திட்டங் களையும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போர் பட்டி யலோடு இணைத்துள்ளார். ஆனால் அவரே தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போர் பட்டியல் என எதுவும் முறையாக இல்லை என ஒரு பெரிய குண்டை துôக்கிப் போட்டுள்ளார். அப்படியானால் பயனாளிகளை எப்படி தேர்வு செய்யப் போகிறார்? ஆடு மாடு பெறாதவர்களுக்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?
விவசாயிகளின் தற்கொலை பூமியான மகாராஷ்டிரத்தின் விதர்பாவில், மாடு வழங்கப்பட்டவர்கள் மேலும் கடனாளிகளாயினர் என்பதுதான் கசப்பான அனுபவம். நிதிநிலை அறிக்கையின் பிற முன்வைப்புக்களோடு சேர்த்துப் பார்க்கும்போது, விவசாயத்தை இனி நம்பாதே, பாவமன்னிப்பாக சிலருக்கு ஆடுமாடு தருகிறோம் என்று சொல்வதுபோல் இருக்கிறது.

கிராமப்புற வீடு கட்டும் திட்டம்

ஒரு வீடு 300 சதுர அடி என்ற அளவில் ரூ.1.8 லட்சம் மதிப்பில், இந்த ஆண்டு வீடற்ற ஏழைஎளிய மக்களில் 60 ஆயிரம் பேருக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என நிதி நிலை அறிக்கை குறிப்பிடுகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் ஆடுமாடு எவ்வளவு தரப்படும் என திட்டவட்டமாகக் குறிப்பிடும் நிதிநிலை அறிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் பசுமை வீடுகள் எவ்வளவு கட்டப்பட வேண்டும் என்ற விசயத்தில் மர்மமான விதத்தில் மவுனம் சாதிக்கிறது.
இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட வீடுகளுக்கு மாநில அரசு இந்த ஆண்டு கூடுதலாக ரூ.25 ஆயிரம் தரப்போவதாக நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி கட்டித் தரப்படும் 1,00,553 வீடுகள் மட்டும் ரூ.1,00,000 மதிப்பில் ஏன் இருக்க வேண்டும்? இந்த வீடுகளும் ரூ.1.8 லட்சம் மதிப்பில் கட்டித் தரப்பட தமிழக அரசு ஏன் கூடுதல் நிதி ஒதுக்கக் கூடாது?

தொழில்துறையும் நிலப்பறியும்

கருணாநிதி அரசை மூலதன விசுவாசத்தில் தாண்டிச் செல்ல பார்ப்பது நிதிநிலை அறிக்கையில் வெளிப்படுகிறது. முதலாளிகள் அரசு சலுகைகளை அனுபவித்துக் கொழுக்கின்ற, பாதுகாப்பும் கவுரவமும் இல்லாத வேலைகளை மட்டுமே வழங்குகிற தொழில்துறை வளர்ச்சி பற்றி பேசப்படுகிறது.
அரசு நிலங்களை ஒருங்கிணைத்து, பாதிப்பில்லாத வகையில் தனியார் நிலங்களையும் சேர்த்துக் கொண்டு நிலவங்கி உருவாக்கப்படுமாம். நிலவங்கியிலிருந்து சுலபமாக நிலம் கிடைக்கும் வாய்ப்பிருப்பதனால் முதலாளிகள் முதலீடுகளைத் தமிழகத்தில் கொட்டுவார்களாம்.
ஆனால் இதே அரசு விவசாயத் தொழிலாளர் களுக்கு தருவதாகச் சொன்ன 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம், தலித் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட 11 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் போன்றவை பற்றி வாயைத் திறக்க மறுக்கிறது. திமுகவினர் நிலப்பறி பற்றி மும்முரமாகச் செயல்படும் அரசு, சிறுதாவூர், காவேரிராஜபுரம் நிலங்கள் பற்றியோ, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் விழுங்கியுள்ள அரசு நிலங்கள் பற்றியோ பேச மறுக்கிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் 38,601 பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் இருப்பதாகவும், 68 லட்சம் பேர் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளதாகவும், ஓர் ஆண்டில் கல்லுôரி படிப்பு முடிக்கும் 3.5 லட்சம் பேரில் வெறும் 20 சதம் பேர் மட்டுமே வேலைபெறும் தகுதி உடையவர்கள் என்றும் விவரங்களை அள்ளித் தெளிக்கிறது நிதிநிலை அறிக்கை. தொழில்துறை தொடர்பாக புதிய கொள்கை உள்கட்டுமான மேம்பாட்டு வாரியம் பற்றியெல்லாம் பேசுகிற நிதிநிலை அறிக்கை, வருங்கால வேலைவாய்ப்பு பற்றி எதுவும் சொல்ல மறுக்கிறது.

மின்சாரம்

ஆர்க்காட்டார் அனுபவத்திலிருந்து மின் உற்பத்தி, மின்சாரம் வழங்குதல் எவ்வளவு முக்கிய மானவை என்ற பாடம் கற்றதாகத் தெரியவில்லை. ஆனால் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக பாடங்கள் கற்றுள்ளதாக தெரிகிறது. தனியார் துறை நுழைவு, தனியார் மற்றும் அரசு கூட்டு என்பது ஒரு கொள்கையாக ஊக்குவிக்கப்படும் எனச் சொல்கிறது நிதிநிலை அறிக்கை. மின்சாரத் தட்டுப்பாடு மட்டுமல்லாமல், இனி தனியார் வைக்கும் விலைகளையும் தமிழக மக்கள் சுமக்கத் தயாராக வேண்டும்.

மருத்துவம், மருத்துவக்காப்பீடு

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தனியாரைக் கொழுக்க வைக்கும் ஊழல் திட்டம் என மேடை தோறும் முழங்கிய ஜெயலலிதா இப்போது அதே திட்டத்தை சிற்சில மாற்றங்களோடு பெயரை மட்டும் மாற்றி தொடர்கிறார். திருச்சியில் ரூ.100 கோடி மதிப்பில் ஒரு சிறப்பு சிகிச்சை மய்யம் கட்டப்படும். இதற்கு அப்பால் நீதிமன்றத்திலிருந்து தப்பிக்க முந்தைய அரசு கட்டிய சட்டமன்றக் கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்படும். அரசு தனியார் கூட்டு முயற்சியில் நோய் கண்டறியும் பரிசோதனை வசதிகள் மாவட்ட அளவில் நிறுவப்படும் என தனியார்மயத்திற்கு பாதை போடப்பட்டுள்ளது.

நகர்மயமாதலை எதிர்கொள்வதும்
நகர்ப்புற வீட்டுவசதியும்

குடிசைமாற்று வாரியம் மூலம் 8,733 குடியி ருப்புக்கள், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் மூலம் 44,870 குடியிருப்புக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் 2,427 குடியிருப்புக்கள் என நிதிநிலை அறிக்கை வெகுவாக சுருங்கி நிற்கிறது. வீடற்றவர்களுக்கு 3 செண்ட் வீட்டுமனை வாக்குறுதி பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. தமிழகம் மிகப் பெரிய நகர்மயமாதலை சந்திக்கிறது. ஊதிப் பெருகும் நகரங்களில், மக்களின் குடிமை வசதிகள் நாளுக்குநாள் மோசமாகின்றன. இதனை எதிர்கொள்வதில் அரசிடம் எந்த முனைப்பும் தெரியவில்லை.

கல்வி, உயர்கல்வி

ஜெயலலிதா அனைவருக்கும் தரமான இலவச கல்வி தருவதாக வாக்குறுதி தந்தார். அது பற்றி அவர் சிறிதளவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சமச்சீர் கல்வியை மூர்க்கமாக எதிர்த்த ஜெயலலிதா, தரம் என்ற பெயரால் தனியார் பள்ளிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஜெயலலிதா, அரசுப் பள்ளிகள் தரமற்றதாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். தமிழ்நாட்டில் 35,795 அரசு மற்றும் நகராட்சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 3,979 பள்ளிகளுக்கு 16,075 வகுப்பறைகள் தேவை. மேசை நாற்காலிகள் போதாத, இல்லாத பள்ளிகள் 20,959. சுற்றுச் சுவர் போதாத, இல்லாத பள்ளிகள் 25,605. குடிநீர் வசதிகள் இல்லாத பள்ளிகள் 4,085. கழிப்பறை இல்லாத பள்ளிகள் 2,248. இந்த விசயத்தில் நிச்சயமாக நிதிநிலை அறிக்கை ஏற்றம் எதுவும் தரவில்லை. ஏமாற்றமே தந்துள்ளது.
6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி என மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை, மாநிலத்தில் அமலாக்க ஜெயலலிதா அரசு இதுவரை விதிகளை உருவாக்கியதாகத் தெரியவில்லை.
இடைநிற்றலுக்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காணாமல், 10, +1, +2 மாணவர்களுக்கு ரூ.1,500 ரூ.2,000 எனத் தந்து இடைநிற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அரசு நம்மை நம்பச் சொல்கிறது. இடைநிற்றல் இல்லாமல் தாண்டினால், உயர்கல்விக்கு, வேலைவாய்ப்பிற்கு என்ன பதில் என அரசால் சொல்ல முடியவில்லை.
கல்லூரிக் கல்வியைப் பொறுத்தவரை, ஒரே ஒரு பொறியியல் கல்லூரியும், 11 கலை அறிவியல் கல்லுôரிகளும் திறக்கப்போவதாக நிதிநிலை அறிக்கை சொல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 73% தனியாருடையவை. வெறும் 27% அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள். 9.2 லட்சம் பேருக்கு மடிக்கணினி என அறிவிக்கப் பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,60,000 பேரும் தனியார் கலை அறிவியல் கல்லூரி களில் 1,60,000 பேரும், அரசு பாலிடெக்னிக்குகளில் 18,000 பேரும், தனியார் பாலிடெக்னிக்குகளில் 85,582 பேரும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 10000 பேரும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் 109632 பேரும் கல்வி கற்கின்றனர். தனியார் கல்லூரிகளில் கற்பவர்கள் மடிக்கணினி பெற முடியாது. கல்லூரிக் கல்வியை கல்வி வியாபாரிகளின் கொள்ளைக்காடாக மாற்றிய குற்றம் புரிந்த அரசு, தண்டனையை மாணவர்களுக்கு வழங்குகிறது.

தொழிலாளர் நலன்

பல்வேறு பிரிவினரின் ஓய்வூதியத்தை மாதம் ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்திய ஜெயலலிதா, 17 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 51.37 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதி யத்தை இதுவரை உயர்த்தவில்லை. பதிவு செய்த 51.37 லட்சம் பேரில் இதுவரை 13.85 லட்சம் பேர் ரூ.356.59 கோடி பயன்கள் பெற்றுள்ளனர். சராசரிக் கணக்குப் பார்த்தால் ஆளுக்கு ரூ.2547. இந்த வாரியங்களை சீரமைப்பு செய்வதாக ஜெயலலிதா சொல்லும் போது, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூகநல திட்டத்திற்கு நேர்ந்த கதி, அமைப்புசாரா தொழிலாளர்களை அச்சுறுத்துகிறது.
விசைத்தறிக் கூடங்களுக்கு தொழிற்சாலைகள் சட்டம் 1948 ன் பிரிவு 85 (1)ன் கீழ் தொழிற்சாலைகள் சட்டப் பிரிவுகள் பொருந்தும் என அரசாணை போடுவது மற்றும் தொழிற்சங்க அங்கீகார சட்டம் தொடர்பான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
நிரந்தரம் அற்ற தொழிலாளர்கள் நலன் காக்க கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டம் 47/2008க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை இந்த அரசு பெற வேண்டியுள்ளது. இதுபோன்ற ஓரிரண்டு விசயங்களை வேண்டுமானால் சட்டமன்றத்தில் இடதுசாரிகள் அன்போடும் பண்போடும் எழுப்பலாம். சமச்சீர் கல்வி, மூவர் மரண தண்டனை போன்ற விசயங்களில் அவைக்கு வெளியில் நடந்த போராட்டங்களே முடிவுகளை மாற்ற உதவின. இந்தப் பாடம் தொழிலாளர்கள் கோரிக்கைகள் விசயத்திலும் பொருந்தும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை
மூடி மறைக்கவே சலுகைகள், இலவசங்கள்

ஜெயலலிதா போன்றவர்கள் அறிவிக்கின்ற சலுகைகள் நலத்திட்டங்கள், ஒருபோதும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு மாற்றான மக்கள்சார்பு வளர்ச்சிப் பாதை என்பதைக் குறிக்காது. அப்படி நம்புவது மூடத்தனம். அப்படிப்பட்ட மாயையை பரப்புவது மோசடி. கருணாநிதி ஜெயலலிதா இருவருக்குமிடையிலான சலுகைகள், இலவசங்கள் போட்டிக்கு நிச்சயம் எல்லைகள் உண்டு. சலுகைகளின் கவர்ச்சி, மினுமினுப்பு விரைவிலேயே மங்கிப்போகும்.
அதிகரித்த எதிர்பார்ப்பை நியாயமாகக் கொண்டி ருக்கும் தமிழக மக்கள், பெருகி வரும் ஏற்றத்தாழ்வுகள் ஒடுக்குமுறை கண்டு சீற்றமடையும் தமிழக மக்கள், ஜெயலலிதாவுக்கு முதல் 100 நாட்களிலேயே சமச்சீர் கல்வி, மூவர் மரண தண்டனை என்ற இரண்டு பிரச்சினைகளில் அதிர்ச்சி சிகிச்சை தந்துள்ளனர்.
நாடெங்கும் நடைபெறும் ஊழல், ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்களில் இருந்து, நிலங்களையும் ஜனநாயகத்தையும் காப்பதற்கான போராட்டங்களிலிருந்து, தமிழகம் விலகி நிற்க முடியாது. நிதிநிலை அறிக்கையும் 100 நாட்கள் ஆட்சியும் ஏற்றம் தரவில்லை, ஏமாற்றமே தந்துள்ளன என்பதை தமிழக மக்கள் நிச்சயம் உணர்ந்துள்ளார்கள்.
மாலெ கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புகளும், தமிழ்நாட்டில் விடாப்பிடியாகவும் விட்டுக்கொடுக்காமலும், போராடும் இடதுசாரி எதிர்ப்புக் குரலை ஒலித்து வருகின்றன. முற்போக்கு முகாமை பலப்படுத்த தமிழகத்தில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. மக்கள் போராட்டங்கள் மூலம் வாய்ப்புக்களை கைப்பற்றுவோம்.

கட்டுரை

உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளும் ஊழலும் பிரிக்க முடியாதவை!
ஒரு சுற்று வெற்றி தாண்டி
மக்கள் போராட்டங்கள் முன்னேற வேண்டும்!

எஸ்.குமாரசாமி

அதிசயங்கள் நிறைந்த ஆகஸ்ட் மாதம் முடிந்துவிட்டது. மத்திய அரசு அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லையென கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. பின்னர் ராஜமரியாதையுடன் ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க, அதே அன்னா ஹசாரேக்கு அனுமதி தந்தது.
அந்நிய சதி, நாடாளுமன்றம் வீதிப் போராட்டங்களுக்குப் பணிய வேண்டுமா என்றெல்லாம் பேசிவிட்டு, சிறப்புத் தூதுவர்கள் மூலம் திரும்பவும் பேச்சுவார்த்தைகளைத் துவக்கியது.
நாடாளுமன்றம் மூலம் உருக்கமாக உண்ணாவிரதத்தைக் கைவிட, வேண்டுகோள் விடுத்தது. கடைசியில் ஜன் லோக்பால் மசோதாவில் உள்ள மூன்று கோரிக்கைகளை ஏற்று மேசையைத் தட்டுவதன் மூலம் தீர்மானம் நிறைவேற்றியது.
மாநிலங்களில் லோக் ஆயுக்தா, நாட்டின் கீழ்மட்டம் வரையுள்ள அரசு அதிகாரிகளை லோக்பால் நடவடிக்கை எல்லைக்குள் கொண்டுவருவது, அனைத்து அரசு அலுவல கங்களிலும் மக்கள் சாசனம் ஒன்றையும் குறைதீர்ப்பு பொறியமைவு ஏற்பாடுகளையும் பார்ப்பவர் கவனத்திற்கு வைப்பது என்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தோடு ஊழல் எதிர்ப்பு துவங்கி
அத்துடன் முடிந்து விடுகிறதா?

அருந்ததிராய், அன்னா ஹசாரே, அந்நிய நிதி பெறும் அரசுசாரா தொண்டு நிறுவனங் களின் பிடியில் இருப்பதாகவும், நாட்டில் நடைபெறும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரும் அயிரம் ஷர்மிளாவின் உண்ணாவிரதம் பற்றியோ, பசுமை வேட்டை பற்றியோ கவலைப்படாத, ஒடுக்குமுறைகள் அநீதிகள் பற்றிக் கவலைப்படாத, வசதியான மத்தியதர வர்க்கம்தான் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்போராட்டத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிக் காட்டுவதாகவும், ஜன்லோக்பால் கொடுங்கரங்களுடன் அனைத்தையும் விழுங்கும் பூதம் எனவும் சீறிப்பாய்கிறார்.
பிரபாத் பட்நாயக், நிறையவே, நாடாளு மன்ற மேன்மை அரசியல் அமைப்புச் சட்டத்துக்குட்பட்ட வழிகள் மற்றும் தீர்வுகள் பற்றியே முதலில் பேசி வந்தார். இப்போது அவதார புருஷனும் ஊமை ஜனங்களும் என தமது விமர்சனத்தைக் குறிப்பானதாக்குகிறார். விநோதமான விதத்தில், மாவோயிஸ்ட்களும் அன்னா ஹசாரேயும் அரசாங்கத்தையே கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என அருந்ததி ராய் சொல்லும்போது, அவர் பிரபாத் பட்நாயக்குக்குப் பக்கத்தில் செல்கிறார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரபாத் பட்நாயக்கால், அய்ந்து வருடங்களுக்கு ஒரு முறை வாக்களிப்பதோடு மக்களின் ஜனநாயக உரிமைகள் முடிந்து விடும், அதன் பின்னர் அரசியலமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றம்தான் எல்லாம் என வாதாட முடியவில்லை.
விவகாரம் அன்னா ஹசாரே குழுவின ரோடு மொத்த எதிர்ப்பையும் சுருக்கி காண்பதும் கவலைப்படுவதுமாகும். நாட்டு நடப்புகளில் ஊழல் பிரச்சினைகளில் மத்தியதர வர்க்கத்தினரோ, மற்ற பிரிவினரோ கவலைப்படுவதோ, அவற்றில் அவர்களுக்கே உரிய முறைகளில், தம் எதிர்ப்பை தெரிவிப்பதோ, ஊழல் எதிர்ப்புக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதோ வரவேற்கத்தக்க விசயங்களே தவிர, கவலைப்பட வேண்டிய விசயங்கள் அல்ல.
நாடு முழுவதும் உள்ள ஊழலுக்கெதிரான மக்களின் சீற்றம் நாட்டின் அரசியல் மீது தாக்கம் செலுத்துகிறது. நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் ஊழல் குற்றச்சாட்டில் மத்திய அமைச்சர்கள் சிலர் பதவி விலகுகிறார்கள். கல்மாடி, ராஜா, கனிமொழி சிறையில் உள்ளனர். ஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகுகிறார். நாடாளுமன்ற மேலவை, ஊழல் நீதிபதி சென்னின் பதவி விலக்க தீர்மானத்தை நிறைவேற் றுகிறது. கர்நாடகா முதல்வர் பதவி விலகுகிறார். தப்பிக்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த தருணத்தையோ அல்லது மக்களின் இந்த உணர்வையோ இந்தப் பங்களிப்பையோ ஊடகங்களால் உருவாக்க முடியாது. இவை நிச்சயமாய் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட படைப்புக்கள் அல்ல.
முதலாளித்துவ ஊடகங்கள் அன்னா ஹசாரேவுக்கு கிடைக்கும் ஆதரவை மிகைப்படுத்திக் காட்ட முடியும். தாம் விரும்புகிற திசையில் மொத்த விவாதத்தையும் திசை திருப்பவோ, கருத்துக்களை உருவாக்கவோ அவர்களால் முடியும். செய்கிறார்கள். செய்வார்கள்.
அன்னா ஹசாரே குழுவினர் பற்றிய கவலையில், நடைபெறும் ஊழல் எதிர்ப்புக்குப் பெருகிவரும் மக்கள் ஆதரவைக் காணத் தவறுவதோ அதனைச் சிறுமைப்படுத்துவதோ, ஜனநாயக லட்சியத்திற்கு உகந்ததல்ல. தோழர் சாரு மஜ÷ம்தார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்ததையும் இககமாலெ அசாம் மாணவர் போராட்டம் மற்றும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு கோரிய போராட்டம் ஆகியவற்றுக்கு தனது விமர்சன பூர்வமான ஆதரவு தந்ததையும், நாம் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் காலத்துப் போராட்டங்களோடு மக்கள் எதிர்ப்புணர்வோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இடதுசாரி இயக்கங்கள் ஒதுங்கி நின்ற தவறு, இப்போதும் நடக்கக் கூடாது. அன்னா ஹசாரே குழுவினருக்கு ஜனநாயகம் தொடர்பாக முரண்பட்ட, நிலையான தன்மை இல் லாத நிலைபாடுகள் உள் ளன. அவர்களுக்கு முற் போக்கான சமூக லட்சியங்கள் இல்லை. அவர்களின் இயக்கத்தில் சில சர்ச்சைக் குரிய ஆதரவாளர்கள் உள்ளனர். இந்தக் காரணங்களால் நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பில் இருந்து நாம் விலகிக் கொள்ள முடியாது.
மாறாக, இவை, ஒரு விடாப்பிடியான ஜனநாயக திசையில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்த, முற்போக்கு முகாம் தனது முழு வலிமையோடு ஈடுபட வேண்டியதை அவசியமாக்குகின்றன.

ஜன்லோக்பால்

அரசாங்க லோக்பாலை விட ஜன்லோக்பால் நிச்சயம் கூடுதல் வெளிப்படைத் தன்மை கொண்டது. ஒப்பீட்டுரீதியான அனைத்தும் தழுவிய தன்மை கொண்டது. அதனாலேயே, அது, ஒரு கவன ஈர்ப்பு விவகாரமாக மாறியதில் வியப்பேதும் இல்லை.
அரசாங்க லோக்பால் மசோதா பிரதமர் நீதிபதிகள் லோக்பாலுக்கு வெளியே என்றது. புகார் சொல்பவரை உனக்கு தண்டனை வாய்ப்புண்டு என மிரட்டியது. அன்னா குழுவினரின் ஜன்லோக்பால் பிரதமர் நீதிபதிகள் போன்றோரையும் உள்ளே கொண்டு வரச் சொன்னது. அதனாலேயே மக்கள் கவனம் ஈர்த்து ஆதரவு பெற்றது. லோக்பால் வரையறைக்குள் ராணுவம் ஊடகங்கள் அரசு உதவி பெறாத தொண்டு நிறுவனங்களும் கொண்டு வரவேண்டுமென முற்போக்கு முகாம் வலியுறுத்த வேண்டும். ஊழல் பற்றிய விவரிப்பு விரிவாக்கப்பட வேண்டுமென நாம் வலியுறுத்த வேண்டும்.
அரிதான தேச செல்வங்களை பெரும் தொழில் நிறுவனங்கள் சூறையாட உதவுதல், அரசு கஜானாவை அவர்களுக்குத் திறந்து விடுதல் நலத்திட்ட நிதிகள் கொள்ளை போன்றவற்றையும் நாம் ஊழல் வரையறைக்குள் கொண்டுவரக் கோர வேண்டும். ஜன் லோக்பாலுக்கு நியமனம் நடைபெறும் விதம் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகத்தன்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். அதில் சிறுபான்மையினருக்கு சமூக புறக்கணிப்புக்கும் மறுப்புக்கும் ஆளான பிரிவினருக்கு இடம் இருக்க வேண்டும். ஜன்லோக்பாலுக்கும், சமநிலையைப் பாதிக்காத வகையில் சில எல்லைகள், கட்டுப்பாடுகள் வேண்டும்.
ஊழல் இல்லாத தனியார்மயம் தாராளமயம் உலகமயமா?
இந்தியாவில் ஒரு புதிய பெரிய தலை முறை உலகமய தனியார்மய தாராளமய காலங்களில் வேலைக்குச் சென்றார்கள். இளம் பருவத்தை கடந்தார்கள். இவர்கள் மனங்களில் ஊடகங்கள்தாம் உற்பத்தி செய்த கருத்தொற்றுமையைத் திணித்துள்ளன. தாராளமயம் தனியார்மயம் உலகமயம்தான் வளர்ச்சியைக் கொண்டுவரும். எல்லாவற்றையும் வெளிப் படையாக்கும். ஊழலை ஒழிக்கும். போட்டி நல்லது. அது மட்டுமே முன்னேற்றத்தைக் கொண்டு வரும். அரசு தலையீடு கூடாது. சந்தை நல்லது. உலக வழியில் இந்தியா நடக்க வேண்டும். இவைதான் அந்த கருத்துக்கள்.
இந்த ஆளும் வர்க்க கருத்துக்களைத்தான் ஊடகங்களும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பரப்பினார்கள். இப்போது எழுந்துள்ள பிரம்மாண்டமான ஊழல்கள், இவர்கள் மத்தியில் ஒரு திகைப்பை அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.
ஆகஸ்ட் 25 அன்று கொல்கத்தா அய்அய்டி நிகழ்ச்சியில், ஊழலை தாராளமயம் தனியார்மயத்துடன் இணைப்பது தவறான கருத்து. லஞ்சம் நலநிதி கையாடல்கள்தான் பிரச்சினை. அலைக்கற்றை, நிலம், சுரங்க உரிமைகள் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை கொண்டுவந்தால் பிரச்சினை முடிந்து விடும் என்றெல்லாம் மன்மோகன் பேசினார். ஊழல் ஊழல் எனப் பேசுவது பொருளாதார சீர்திருத்தங்களை முடக்கிவிடும், அதனால் தேசத்தின் நலனுக்கு ஆபத்து என்ற கருத்தும் பரப்பப்படுகிறது.
இங்கேதான் ஊடகங்கள் ஊழல் பிரச்சினை அரசியல்வாதிகள் அதிகாரிகள் தொடர்பானது என குறுக்கிச் சுருக்குகின்றன. ராஜா கல்மாடி தாண்டி பெரும்தொழில் அதிபர்கள் சிலர் சிறைக்கு செல்ல வேண்டிய நேரத்தில், ஊடகங்கள் அன்னா ஹசாரே எதிர் அய்முகூ அரசாங்கம் லோக்பால் எதிர் ஜன்லோக்பால் என மொத்த விவாதத்தையும் விவகாரத்தையும் சுருக்கி நிறுத்தி திசை திருப்பும் பணியில் இறங்கியுள்ளன.
அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கெஜ்ரிவால், மக்கள், ஜன்லோக்பாலை ஊழல் நோய்க்கு மருந்தாக (தவாய்) காண்கிறார்கள் என்கிறார். வலுவான ஜன்லோக்பால் நிச்சயமாய் தேவைதான். ஆனால் அதனால் மட்டுமே ஊழலை ஒழித்துக் கட்டி விட முடியாது.
மனிதர்கள் நடமாட வேண்டிய அறையின் தரை ஈரமானால் அதனை துணி கொண்டு துடைப்பதும் மின் விசிறியை சுழல விட்டு காய வைப்பதும் நல்லதுதான். ஆனால் அறைக்குள் குழாய் திறந்திருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தால், அறையை துடைப்பதாலும் காயவைப்பதாலும் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
ஊழலின் ஊற்றுக்கண், முதலாளித்துவ பொருளாதாரத்தில், அதனைக் கொழுக்க வைக்கும் தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளில் அடங்கியுள்ளது. அந்தக் கொள்கைகளைத் திரும்பப்பெற வைப்பதற்கு நாடாளுமன்றம் தாண்டிய மக்கள் போரட்டங்கள் மிகமிக அவசியமானவை. முற்போக்கு முகாம் இந்த அடிப்படை நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வேண்டும்.
இந்தியாவின் சுரங்கங்கள் விரைவாக தோண்டி எடுக்கப்பட்டால்தான் இந்தியாவின் வறுமை நீங்கும் என்கிறார் மன்மோகன். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பதவிக்கு ஜெய்ராம் ரமேஷ் இடத்தில் ஜெயந்தி நடராஜன் வந்துவிட்டதாகக் காட்டிவிட்டு, புதிய தொழில் துவங்க சுற்றுச்சூழல் அனுமதி தர சுதந்திரமான ஒழுங்கமைவு அமைப்பு உருவாக்கப்படும் என்கிறார். விவசாய நிலங்கள் தொழில் துவங்க கிடைத்தால்தான் வளர்ச்சியும் முன்னேற்றமும் வரும் என்கிறார். பொருளாதார சீர்திருத்தங்கள், அதாவது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் தொடர வேண்டும் என்கிறார். அரசு தலையீடு கூடாது என்கிறார். இங்கேதான் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கும் முதலாளித்துவ அரசியலுக்கும் சாரமான பாலமாக ஊழல் மாறி நிற்கிறது.

கழகங்களும் லோக்பாலும்

லோக்பால் எல்லைக்குள் பிரதமரைக் கொண்டு வரலாம் எனக் கருணாநிதி சொன்ன போது, கூடாது கூடாது பிரதமரைக் கொண்டு வந்தால் அந்நிய சக்திகள் தேசத்தையே சீர்குலைக்கும் என்றார் ஜெயலலிதா. இரு கழகங்களும், நாடாளுமன்றம் லோக் ஆயுக்தா பற்றிச் சட்டம் போடுவது, மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றார்கள். மாநில அரசுகள் ஊழல் செய்யும் உரிமைகளில் தலையிடக் கூடாது என்பதில் எப்பேர்ப்பட்ட ஒற்றுமை!
உண்மையில் மாநில உரிமை என்பதுதான் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் அக்கறை என்றால், இரண்டு பேரும் மத்திய அரசால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வருவோம் என்று சொல்ல வேண்டியதுதானே!
ஊழல் எதிர்ப்பின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்
காங்கிரசும் பாஜகவும் ஊழல் விசயத்தில் நிழல் சண்டை மட்டுமே போடுவார்கள். ஈயமும் பித்தளையும் ஒன்றைப் பார்த்து மற்றொன்று இளிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டத்தை நீர்த்துப் போக வைக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். நிச்சயமாக மக்கள் தங்கள் கண்காணிப்பையும் செயலூக்கத்தையும் தீவிரப்படுத்தியாக வேண்டும்.
அதே நேரம் ஊழல் எதிர்ப்பு என்பது நிச்சயமாக ஒடுக்குமுறை எதிர்ப்போடு இணைக்கப்பட வேண்டும். நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிற உலக முதலாளித்துவம் வழமையான தொழில்கள் தாண்டி கட்டுமானம் ரியல் எஸ்டேட் உயிரி தொழில்கள் தோட்டப் பயிர்கள் சுரங்கத் தொழில்கள் நோக்கித் தன் கவனத்தைச் செலுத்துகிறது.
பொருளுற்பத்தியில் கூலியுழைப்பை ஈடுபடுத்தி சுரண்டுவதன் மூலமாக மூலதனத் திரட்சி என்ற விசயம் தாண்டி புராதன திரட்சியில் அதாவது காலனிய பாணியில் நிலம் கனிம வளங்கள் போன்ற தேசத்தின் இயற்கை வளங்களை சூறையாடும் வேட்டையைத் துவங்கியுள்ளது. எதிர்ப்பை நசுக்க ஒடுக்குமுறை.
ஆகவேதான் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் தவிர்க்க முடியாமல் விளை நிலங்களை, வன நிலங்களை, கனிம வளங்களை, சுரங்க உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தோடும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தோடும் தன்னை வலுவாகப் பிணைத்துக் கொள்ள வேண்டும்.

அகில இந்திய மாணவர் கழகத்தின்
மூன்றாண்டு கால போராட்டம் வெற்றி

ஆகஸ்ட் 18 அன்று வெளியான அதிமுக்கியத்துவம் வாய்ந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஓபிசி பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையில் 10% தளர்வு என்பதை ‘குறைந்தபட்ச தகுதி அல்லது தகுதிக்கான மதிப்பெண்’ என்பதில் இருந்து கணக்கிட வேண்டுமே தவிர, பொதுப் பட்டியலில் கடைசி மாணவர் சேர்க்கப்பட்ட மதிப்பெண்ணில் இருந்து 10% தளர்வு என்பதாக கணக்கிடக் கூடாது என்று இறுதியாக தெளிவுபடுத்தி விட்டது. இந்தியா முழுவதும் பல்கலைக் கழகங்களில் ஓபிசி மாணவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களை பயன்படுத்த முடியாமல் தடுத்து வந்த நிகழ்வுக்கு தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சீர்குலைக்கப்படுவதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடுத்துள்ளது.
இது 2008ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அய்சா (அஐநஅ) துவங்கி வைத்த 3 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால் அதற்குப் பின்னால் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கும் இந்த நடைமுறையும் அதற்கெதிரானப் போராட்டமும் பரவியதால் ஓபிசி இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதில் இத்தீர்ப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், டில்லி பல்கலைக் கழகம் மற்றும் இன்னபிற பல்கலைக் கழகங்கள் ஓபிசி மாணவர் இடங்களை பறித்துக் கொண்டது எப்படி? நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பட்நாயக் பல்கலைக் கழகங்கள் ஓபிசி இடங்களை திருடிய நிகழ்வுப் போக்கை விவரிக்கிறார்கள்.
2008 - 2009 மற்றும் 2009 - 2010 கால கட்டத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடும் போது குறைந்தபட்ச நுழைவு தகுதிக்கான மதிப்பெண் 40% என்று வைத்துக் கொள்வோம்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் இதை பொதுப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே அமல்படுத்தும். ஓபிசி மாணவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் என்ன என்பதை சொல்வதில்லை. ஆனால் பொதுப் பிரிவு முழுவதும் நிரம்பியவுடன், பொதுப் பிரிவில் கடைசியாக நுழைந்த மாணவரின் மதிப்பெண்ணிலிருந்து 10% வரை குறைத்து ஓபிசி மாணவர்களின் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்படும்.
ஒரு ஓபிசி மாணவர் இப்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் வரம்புக்குள் இருந்தால் மட்டுமே அவருக்கு அனுமதி வழங்கப்படும். அப்படியில்லாமல் அவர் குறைந்தபட்ச 40% பதிலாக 70% பெற்றிருந்தாலும், மேற்சொன்ன முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் வரம்பு அதைவிடக் கூடுதலாக இருந்தால் அவருக்கு சேர்க்கை அனுமதி கிடைக்காது. இத்தகைய செயல் கல்வி நிறுவன சேர்க்கை அனுமதி முறையில் இதுவரை அறியாதது மாத்திரமல்ல, இது ஒருதலைப்பட்சமானது.
ஓபிசி மாணவர் ஒரு சேர்க்கை அனுமதிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருந்து, இருக்கும் எண்ணிக்கைக்குள் அவரின் தரவரிசைப் பட்டியல் (ஙங்ழ்ண்ற் கண்ள்ற்) இருக்குமானால் வேறு (பொது) பிரிவு மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் இவர் இன்னும் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லி அவருக்கு அனுமதி மறுக்கப்படக் கூடாது. ஒரு பாடப்படிப்பில் மொத்தம் உள்ள 154 இடங்களில் ஓபிசிக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் 42 இருந்தால் அத்தனை இடங்களும், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்ற ஓபிசி மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் (ஙங்ழ்ண்ற் கண்ள்ற்) தயார் செய்யப்பட்டு அந்த வரிசையின் அடிப்படையில் (நுழைவு தேர்வுக்கான தேவைகள் இருப்பின் அதற்குட்பட்டு) நிரப்பப்பட வேண்டும். தகுதியான ஓபிசி மாணவர் இருக்கும்போது, ஓபிசி ஒதுக்கீட்டு இடத்தை பொதுப்பிரிவுக்கு மாற்றுவது அனுமதிக்கத் தக்கதல்ல.
கட்-ஆஃப் மதிப்பெண் பற்றிய சிதைக்கப்பட்ட விளக்கத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் மற்ற பல்கலைக் கழகங்களும் கடைப்பிடித்ததால், பொதுப் பிரிவுக்கான குறைந்தபட்ச தகுதியிலிருந்த ஓபிசி பிரிவினருக்கான தளர்வு (ழ்ங்ப்ஹஷ்) மதிப்பெண்ணைக் கழித்து தகுதி பெற்றிருந்த பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, தகுதியில்லை என திருப்பி அனுப்பப்பட்டனர். மூன்று ஆண்டுகள் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், இந்திய அரசாங்கமும் இன்னும் பல பல்கலைக் கழகங்களும் எல்லா நியாயமான வாதங்களுக்கு மத்தியிலும் மோசமான, முற்றூடான பாரபட்சமான இந்த நிலையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தனர்.

தீர்ப்புக்கு வழி வகுத்த நீண்ட போராட்டம்

2008ல் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டபோதே ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அய்சா மேற்கொண்ட நிலைப்பாடு சரியானதே என உச்சநீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டுகின்றது.
பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பட்டினிப் போராட்டம் என பல வடிவங்களில் அய்சா போராட்டம் நடத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்களை கடினப்பட்டு சேகரித்து, தவறாக இடம் மறுக்கப்பட்ட மாணவர்களை இனங்கண்டு தொடர்பு கொண்டது. அவர்களில் இருவர் அய்சாவின் பின்புலத்தில் டில்லி உயர்நீதிமன்றத்திற்கு தங்கள் வழக்கை எடுத்துச் சென்றனர்.
2008 முதல் மார்ச் 2010 வரை இந்திய மாணவர் சங்கம் நஊஐ (மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு) ஓபிசி இட ஒதுக்கீட்டில் இருக்கக் கூடிய கேந்திரமான தடையை ஒருமுறைகூட ஏற்கத் தவறியதோடு ஓபிசி கட்-ஆஃப் விசயத்தில் கலந்துபேசி வலுவான ஒத்தக்கருத்து உருவாக்கும் முயற்சிக்கான இயக்கப்போக்கு மற்றும் எல்லா பொதுக் கூட்டங்களையும் புறக்கணித்தது. அதற்குப் பதிலாக அய்சாவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம் இது விசயத்தில் மாணவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
2008 முதல் அய்சா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலைப்பாடு சரியானது என்பது, செப்டம்பர் 7, 2010 அன்று டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சிறப்புமிக்க தீர்ப்பில் நிலை நாட்டப்பட்டது. டில்லி பல்கலைக் கழகத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக அங்குள்ள ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு உத்வேகம் அளிப்பதாய் தீர்ப்பு அமைந்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் கடைப்பிடிக்கப்பட நிர்பந்திக்கப்பட்டு அதன் விளைவாய் கிட்டத்தட்ட எல்லா ஓபிசி இடங்களும் நிறைவு செய்யப்பட்டுவிட்டன.
அதன்பின் பி.வி.இந்திரேசன் என்பவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஓபிசி மாணவர் சேர்க்கைக்கான உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரித்துக் கொண்டிருந்த தருணத்தில் அலகாபாத் பல்கலைக் கழக இந்திப் பாடத்துறையில் மாணவர் சேர்க்கைக்கு பொறுப்பாக இருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவர் தலைவர் பிரனாப் கிருஷ்ணா, ஓபிசி மாணவர் சேர்க்கைக்கு கட்-ஆஃப் மதிப்பெண்களை தவறாகக் கையாள சொன்னதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
ஆகஸ்ட் 18 தீர்ப்பு உச்சநீதிமன்றத்திலும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை வெற்றி கொண்டது. டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரியானது என்று சொல்லி இந்திரேசனின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் நிராகரித்தது.

அரசியல் இரட்டை நிலை

இந்த சம்பவம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய காங்கிரஸ் அய்முகூ அரசின் இரட்டை நிலையை தோலுரித்துக் காட்டியது. இந்தப் போராட்டத்தின் போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சமூகநீதி அமைச்சகம் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் அணுகி ஓபிசி இட ஒதுக்கீடு பற்றிய தங்கள் சட்டத்தை எப்படி வியாக்கியானம் செய்வது என்பதை தெளிவுபடுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர கேட்டுக் கொள்ளப்பட்டது.
மத்திய அரசாங்கம் இதைச் செய்யத் தவறியதோடு மட்டுமல்லாமல், டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது மத்திய அரசாங்க சார்பு வழக்கறிஞர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம் மற்றும் சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பின் (இட ஒதுக்கீடு எதிர்ப்பு அமைப்பு) வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக, அய்சாவின் கட்-ஆஃப் மதிப்பெண் பற்றிய (சரியான) வியாக்கியானத்துக்கு எதிராக வாதிட்டார். டில்லி உயர்நீதிமன்றம் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்தான் கட்ஆஃப் மதிப்பெண் என்று விவரித்த பின்னர் மத்திய அரசாங்கம் இது சம்பந்தமான தனது நிலைப்பாட்டுத் தோற்றத்தை மாற்றிக் கொண்டது.
மூன்று ஆண்டுகாலப் போராட்டத்தில் சமூகநீதி பிற்பட்டோர் நலன் ஆகியவற்றை தாரக மந்திரமாக வைத்திருந்த அரசியல் கட்சிகள், வெளிப்படையாக, வேண்டுமென்றே ஓபிசி இட ஒதுக்கீட்டை குறைக்க சதி செய்தபோது அமைதி காத்தன.
ராஷ்ட்ரிய ஜனதா தளமும், சமாஜ்வாதி கட்சியும் அய்முகூவின் கூட்டாளிகளாக இருந்தார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான ஒபிசி மாணவர்களை பாதிக்கும் இந்தப் பிரச்சனையில் நாடாளுமன்றத்துக்குள்ளோ அல்லது வெளியிலோ தனது பலத்தை அல்லது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நீண்ட போராட்டத்தில் சிவில் உரிமையாளர் பாலகோபால், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி கிருஷ்ணன் ஆகியோர் உற்சாக ஆதரவு தந்தனர்.
தமிழில்: தேசிகன், (லிபரேசன், செப்டம்பர் 2011 இதழில் இருந்து)

மாநிலம்

காஷ்மீர் மனித உரிமை ஆணையம்
கண்டுபிடித்த கல்லறைகள்

இது இப்போது அதிகாரபூர்வமான தகவல். காணாமல்போன ஆயிரக்கணக்கான சாதாரண காஷ்மீரிகள் காற்றில் கரைந்து போய்விடவோ, எல்லை தாண்டிப் போய் விடவோ இல்லை. அவர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக அடையாளமற்ற கல்லறைகளில் புதைக்கப்பட்டார்கள். அவர்களை கொன்று புதைத்தது காஷ்மீர் சமவெளியில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரே.
வடக்கு காஷ்மீரில், அடையாளமில்லாத 38 கல்லறைகளில் 2000த்திற்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதை காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையில் மெய்ப்பித்துள்ளது.
காஷ்மீர் மக்களுக்கு இது ஒரு பரபரப்பான விசயம் அல்ல. இத்தனை நாட்களும் அவர்கள் என்ன சொல்லி வந்தார்களோ அந்த குற்றசாட்டின் பயங்கரமான உண்மை இப்போது வெளிவந்துள்ளது. காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (அடஈட), 2008 மார்ச் மாதத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற அறிக்கை வெளியிட்டது. அதிலேயே இந்த அடையாளம் இல்லா கல்லறைகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தது. ஏபிடிபியின் பிரச்சாரத்தைத் தொடர்ந்துதான் மனித உரிமை ஆணையம் தனது விசாரணையைத் துவக்கியது.
2009ம் ஆண்டில் மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை, 2700 அறியப்படாத, அடையாளமில்லாத, மொத்தமாக மக்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் பற்றி குறிப்பிட்டு இருந்தது.
இப்பொழுது மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த 38 கல்லறைகளில் இருந்து எடுக்கப்பட்ட 2156 உடல்களில் குண்டு பாய்ந்துள்ளதற்கான அடையாளங்கள் காணப்படுவதாக கூறியுள்ளது. பெரும்பாலான உடல்களை காவல்துறையினர் புதைப்பதற்காக, அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் என்று சொல்லி உள்ளூர் ஆட்களிடம் ஒப்படைத்துள்ளனர். அடையாளம் தெரியாத இந்த உடல்களோடு காணாமல் போனவர்களின் உடல்களும் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என மனித உரிமைகள் ஆணைய அறிக்கை ஒப்புக்கொள்கிறது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து டிஎன்ஏ ஆய்வுக்குட்படுத்தவும் அவற்றை காணாமல் போனவர்களின் உறவினர்களைக் கொண்டு சரிபார்க்கவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சில உடல்கள் அடையாளம் தெரியாமல் சிதைந்துபோய் உள்ளன. 20 உடல்கள் முற்றி லும் எரிந்துபோய் உள்ளன. 5 உடல்களுக்கு மண்டை ஓடுகள் மட்டுமே உள்ளன. 18க்கும் மேற்பட்ட கல்லறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மற்றும் கலவரப் பகுதி சட்டம் ஆகியவை தவறாகப் பயன்படுத் தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றால், இனி எங்கு யார் கொல்லப்பட்டாலும் அது தீவிரவாதியாக இருந்தாலும், அல்லது சாதாரண பொது மக்களாக இருந்தாலும், அவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் டிஎன்ஏ விவரங்கள் உள்பட அனைத்தும் பராமரிக்கப்பட வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையிலிருந்தே ஆயுதப் படைகளால் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதும் ஆயுதப் படையினர் தாங்கள் இருக்கும் பகுதியில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறார் கள் என்தும் இச் சட்டம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம், கடந்த 20 வருட காலத்தில் கிட்டத் தட்ட 10,000 பேர் காணாமல் போயுள்ளதாக கணக்கிட்டுக் கூறுகிறது. சில இடங்களில் காவல்துறையினரோ அல்லது ராணுவத்தினரோ வீட்டில் இருந்தவர்களை தூக்கிக் கொண்டு போய் உள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் நடவடிக்கைகள் மேற் கொண்டு குறிப்பிட்ட அதிகாரிகள் மீது விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அந்த விசாரணைகளால் எந்தவித பயனும் இல்லை. காணாமல்போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் தலைவர் பெர்வீனா ஆங்கர். இவருடை மகன் 17 ஆண் டுகளுக்கு முன் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது காணாமல் போனார். இவர் ஒட்டுமொத்தமாகப் புதைக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக சர்வதேச மனித உரிமை குழுக்களுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காணாமல் போனவர்களின் குடும்பத்தார் தங்களின் கொடுமையான நிச்சயமற்ற நிலைக்கும் தாங்கமுடியாத மன வேதனைக்கும் முடிவு தேடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் தங்களின் பாசத்திற்குரியவர்களை மனசாட்சி இல்லாமல் கொன்ற இந்திய பாதுகாப்பு படையினருக்கு தண்டனையும் அதன் மூலம் தங்களுக்கு நீதியும் வேண்டும் எனக் கேட்கிறார்கள்.
தடயங்கள் மேலும் அழிக்கப்படுவதற்கு, சிதைந்து போவதற்கு முன்பாக உடல்களை அடையாளம் காண்பதற்கு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்படுவது மிகவும் அவசியமானதாகும். மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளபடி காணாமல் போனவர் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விரைவாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ராணுவத்தினரின் காலடிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ள காஷ்மீர் மக்கள் வாழ்க்கையின் இருண்ட யதார்த்தமும் இந்த அடையாளமில்லாத கல்லறைகளுக்குள் புதைந்துபோய் உள்ளது. காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்கள் உறவுகளை பாதுகாப்புப் படையினர் இஷ்டத்திற்கு தூக்கிச் சென்று காணாமல் போகச் செய்ததன் மூலம் பயபீதியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை யதார்த்தம். இந்த பயபீதிக்கு முடிவு என்பது காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து காஷ்மீர மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துகிறபோது மட்டுமே சாத்தியம்.

நாட்குறிப்பு

புதுக்கோட்டை நாட்குறிப்பு

கந்தர்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் சட்டக் கூலி தரக் கோரியும், வேலை மறுக்கப் பட்டதற்கு எதிராகவும், வேலை உறுதித் திட்ட நிதியில் நடந்த ஊழலுக்கு எதிராகவும் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்புடன் தொடர் போராட்டங்கள் கட்டமைக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களில் சாதியச் சுவர்கள் உடைக்கப்பட்டு, வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் இணைந்தனர்.

கிராமவாரியாக வேலை தருவதை எதிர்த்து

புனல்குளம் ஊராட்சி, புனல்குளம், காடவராயன்பட்டி, தெத்துவாசல்பட்டி, ஆகிய மூன்று கிராமங்களை கொண்டது. ஒவ்வொரு ஊருக்கும் வேலை தனித்தனியாக தரப்பட்டது. தனித்தனியாக வேலை தரக்கூடாது என அதிகாரிகளிடம் மனுக் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மூன்று கிராம மக்களிடம் வீடு, வீடாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஜ÷லை மூன்றா வது வாரத்தில் தெத்துவாசல்பட்டி கிராமம் மட்டும் வேலை செய்த இடத்தில் புனல்குளம், காடவராயன்பட்டியைச் சேர்ந்த தொழிலாளர்களும் திரண்டு வேலையில் இறங்கினார்கள். சம்பளம் தர முடியாது, வேலை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் மறுத்தனர். தொழிலாளர்கள் உறுதியாகப் போராடியதால், அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் உருவானது. வேலை செய்த அனைவருக்கும் மஸ்டர் எடுத்து கூலி தர வேண்டியிருந்தது.

ரூ.119 சம்பளம் கேட்டு போராட்டம்

வேலை உறுதித் திட்டத்தில் நாளொன் றுக்கு ரூ.119 சட்டக்கூலி அறிவித்த பிறகும், ரூ.80 மட்டுமே இங்கு தரப்பட்டது. ஜ÷லை 19 அன்று, ரூ.80 மட்டுமே கூலி தந்தால் இந்த வாரம் சம்பளம் வாங்குவதில்லை என முடிவு எடுத்து, 300 தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஊராட்சி நிர்வாகம் சட்டக் கூலி தர மறுத்தது. தொழிலாளர்கள் தஞ்சை - புதுகை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர், ரிசர்வ் காவல்படை, அதற்குகீழ் உள்ள அதிகாரிகள் வந்தனர். தனியாக சென்று கூட்டம் நடத்தி சட்டக் கூலி தர முடியாது என்றனர்.
அவிதொச தலைவர்கள் தோழர்கள் வளத்தான், சோதிவேல், ராஜாமணி, சரோஜா மற்றும் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சாமி.கோவிந்தராஜ் மற்றும் கிராமத்தின் கட்சி உறுப்பினர் தலைமையில் தொழிலாளர்கள் உறுதியாக போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதன் பிறகு ரூ.95 கொடுக்க அதிகாரிகள் சம்மதித்த பின் போராட்டம் முடிவுக்கு வந்தது. மதியம் 3 மணிக்கு துவங்கிய போராட்டம் இரவு 8.30 மணிக்கு முடிந்தது.
அடுத்த கட்டமாக ரூ.119 கூலி தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர்.

வேலை மறுப்புக்கு எதிராக

மறியல் போராட்டம், வேலை உறுதித் திட்டத்தில் நடக்கிற ஊழல் பற்றியும் பேசியதால் கோபம் கொண்ட பஞ்சாயத்து நிர்வாகம் இனி வேலை இல்லை நிதியும் இல்லை என கூறிவிட்டனர்.
ஜுலை 21, 22 தேதிகளில் மக்கள் ஒன்றாக திரண்டு சென்று வேலை செய்தனர். ஊராட்சி எழுத்தர், மக்கள் நல பணியாளர்கள் வேலை நடக்கும் இடத்துக்குச் செல்லவில்லை. மக்கள் வேலை செய்து கொண்டிருக்க கட்சித் தலைவர்கள் வட்டாட்சியர், ஒன்றிய அலுவலர் ஆகியோரை சந்தித்து பேசினர். தனியாக அதிகாரியை அனுப்பி மஸ்டர் எடுக்கப்பட்டு. அளந்து பார்க்கப்பட்டு சம்பளம் தரப்பட்டது. வேலை மறுக்கப்பட்ட நிலையை தங்கள் உறுதியான போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் மாற்றினர்.

ஊழல் முறைகேட்டுக்கு எதிராக

சட்டக் கூலி மற்றும் வேலை கேட்டு அவிதொச தலைமையில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பகுதியில் வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 2 அன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. விளைவாக, தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஊழல் நடந்ததும், 100 நாள் வேலை சம்பள பணம் கையாடல் செய்யப்பட்டதும் உறுதியானது. ஊழலுக்குக் காரணமான மக்கள் நலப் பணியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மருத்துவம்

100 நாள் வேலை செய்து கொண்டிருந்த தோழர் சரோஜா கண்ணில் கள்ளிப்பால் அடித்து பாதிப்புக்கு உள்ளானார். அவருக்கு உடனடியாக மருத்துவம் செய்யப்படவில்லை, இதன் மீது புகார் செய்யப்பட்டது. ஒன்றிய ஆணையர் தோழர் சரோஜாவை வீடு வந்து பார்த்து மருத்துவ உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். பாதிப்புக்கு உள்ளானதால் ஏற்பட்ட செலவு மற்றும் வேலை செய்ய முடியாத காலத்திற்கு சம்பளம் வழங்குவதாக உத்தரவாதம் அளித்தார்.

ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போராட்டம்

ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போராட்டத் தயாரிப்பாக, ஆகஸ்ட் 1 முதல் 8 வரை 10 ஊராட்சிகளில் நடந்த நடைபயணப் பிரச்சா ரத்தில், 300 பேர் கலந்து கொண்டனர். 7,000 துண்டறிக்கை, 100 சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. கரம்பக்குடி, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சிறை நிரப்பும் போராட்டத்தில் 126 பேர் கலந்து கொண்டனர்.
உடனடியாக அடுத்தடுத்து வருகிற வேலைகளை திட்டமிட ஆகஸ்ட் 14 அன்று கட்சி மாவட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாநிலக் குழுவை வெற்றிகரமாக நடத்துவது, ஆகஸ்ட் 15 கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வது வறுமைகோடு பட்டியல் முறைகேடுகளைக் களைய கோரிக்கைகள் எழுப்புவது, கட்சி மாவட்ட மாநாடு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

கிராமசபை கூட்டங்களில்

ஆகஸ்ட் 15 அன்று 15 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தில் மாலெ கட்சி மற்றும் அவிதொச தோழர்கள் கலந்துகொண்டனர். சங்கம் விடுதி, வீரக்குடி, சுந்தம்பட்டி, மட்டங்கால், தம்புரான்பட்டி, கோமாபுரம், சொக் கநாதப்பட்டி ஆகிய கிராமங்களில் திட்டமிட்டு அணிதிரட்டல் நடைபெற்றது. வறுமைக் கோட்டுப் பட்டியலில் உள்ள வசதி படைத்தவர்கள் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கவும், தகுதியானவர்களை சேர்க்கவும் வலியுறுத்தி இந்தக் கூட்டங்களில் மனுக்கள் தரப்பட்டன.

ஊழல் எதிர்ப்புப் பொதுக் கூட்டம்

ஆகஸ்ட் 26 அன்று கந்தர்வக்கோட்டையில் ஊழல் எதிர்ப்புப் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் 250 பேர் கலந்து கொண்டனர். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், அவிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன் உரையாற்றினர். கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மாநில அளவிலான கூட்டங்கள்

ஆகஸ்ட் 26 அன்று அவிதொச மாநில நிர்வாகக் குழுக் கூட்டமும் 27, 28 தேதிகளில் கட்சி மாநிலக் குழு கூட்டமும் கந்தர்வக் கோட்டையில் நடத்தப்பட்டன.
ஆகஸ்ட் 29 அன்று கட்சியின் மாவட்ட நிலைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 30 அன்று கந்தர்வக்கோட்டையிலும் ஆகஸ்ட் 31 அன்று கரம்பக்குடியிலும் மூவர் தூக்குத்தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இளைஞர், மாணவர் கழக வேலைகள்

ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில், மாணவர் இளைஞர் அமைப்பு வேலைகளில் செயலூக்கம் உருவாகியுள்ளது.
புதுகை பிஎட் கல்லூரி, ஏனாதிராயப்பா கல்லூரி, சரபோஜி கல்லூரி, கரம்பக்குடி மற்றும் கந்தர்வகோட்டை பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கந்தர்வக்கோட்டை, வீரானூர், கரம்பக்குடி ஒன்றியங்களில் மாணவர், இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
செப்டம்பர் 11 அன்று கும்பகோணத்தில் நடக்கவுள்ள கருத்தரங்கம் மற்றும் கல்வி வகுப்பு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மாவட்ட ஊழியர் கூட்டம் நடத்த புரட்சிகர இளைஞர் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் முடிவு செய்துள்ளன.
செப்டம்பர் 28 அன்று கட்சி மாவட்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- ஆசைத்தம்பி

கோவை: ஆகஸ்ட் மாத நாட்குறிப்பு

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 3, 4 தேதிகளில் பெரியநாயக் கன்பாளையம், வீரபாண்டி, கூடலூர் பேரூராட்சிகளில் நான்கு தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நான்கு கூட்டங்களிலும் மாலெ கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார்.
50 முதல் 100 பேர் வரை பிரிக்கால் தொழிலாளர் தோழர்கள் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டார்கள். தோழர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன், பாலசுப்பிரமணியம், குருசாமி, எல்எம்டபுள்யு சந்திரன் உட்பட பல தோழர்கள் உரையாற்றினார்கள். ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு கூட்டத்தில் அறைகூவல் விடப்பட்டது.
ஆகஸ்ட் 7 அன்று அய்டிபிஎல் பொதுப் பேரவைக் கூட்டத்திற்கு பிறகு மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை ஊழியர் முகாம் நடைபெற்றது. ஊழியர் முகாமில் நடப்பு அரசியல் நிகழ்வுகளுடன், அடிப்படை மார்க்சியம் குறித்து தோழர் எஸ்.குமாரசாமி விளக்க உரையாற்றினார்.
கோவையில் செப்டம்பர் 25 அன்று கட்சி மாவட்ட மாநாடும், அக்டோபர் 30 அன்று ஏஅய்சிசிடியு மாவட்ட மாநாடும் நடத்துவது என்ற முடிவை தோழர் என்.கே.நடராஜன் அறிவித்தார். 6 உள்ளுர் கமிட்டிகள் 17 கிளைகள் மூலம் 17,000 வெகுஜன அமைப்பு உறுப்பினர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்திலும் கட்டுமான தொழிலாளர் சங்கத்திலும் சேர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
கோவையில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான தயாரிப்புப் பணிகளில் ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, ஒரு மாத காலம் கோவையில் தங்கியிருந்து ஈடுபட்டார். கோவையில் நடந்த 25 நடைபயணங்களில் 150 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டம் நடத்தக் கூட காவல் துறை அனுமதி மறுத்து வந்த பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் ஆகஸ்ட் 9 அன்று நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 550 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தோழர் எஸ்.குமாரசாமி, ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன், மாநிலச் செயலாளர் தோழர் தாமோதரன் ஆகியோரும் கைதாயினர். பிரிக்கால், அய்டிபிஎல், சுபா பிளாஸ்டிக்ஸ், எல்ஜி எக்யூப்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர்களுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைத் துôக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சிறை வைக்கப்பட்ட இடத்திலேயே பிரிக்கால் துணை யூனிட் தொழிலாளர்களின் பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டு 26 பேர் கொண்ட செயற்குழு உருவாக்கப்பட்டது.
ஆகஸ்ட் 11 அன்று பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தின் துறை நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கம் அங்கீகரிக்கப்பட்டாலும் தீர்வு காணப்படாத முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயல்தந்திரங்கள் விவாதிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 16 அன்று அன்னா ஹசாரே கைதுக்கு எதிராக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக பிரிக்கால் பிளாண்ட் 1 மற்றும் பிளாண்ட் 3 வாயில்கள் முன்பு பிரிக்கால் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு பெற்றனர்.
ஆகஸ்ட் 18 அன்று வலுவான லோக்பால் சட்டமியற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தாமோதரன், ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்கள்.
கோவையில் அய்ந்தாம் துôண் என்ற தன்னார்வக் குழு மற்றும் சில தனியார் நிறுவனங்கள் நடத்திய மெழுகுவர்த்தி போராட்டம் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ஏஅய்சிசிடியு, தேசிய லஞ்ச ஊழலுக்கு எதிர்ப்பு இயக்கம், எல்எம்டபுள்யு தொழிலாளர் சங்கம், கேஎஸ்பி பம்ப்ஸ் தொழிலாளர் சங்கம், பெரியநாயக்கன்பாளையம் வியாபாரிகள் சங்கம், விவசாயிகள் சங்கம், தேசிய வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்ற ‘ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மேடை’ ஆகஸ்ட் 25 அன்று மாபெரும் பட்டினிப் போராட்டம் நடத்தியது.
பட்டினிப் போராட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பட்டினிப் போராட் டத்தை துவக்கி வைத்து வழக்கறிஞர் செவ்விளம்பரிதி உரையாற்றினார். தோழர் எஸ்.குமாரசாமி பட்டினிப் போராட்டத்தில் சிறப்புரையாற்றினார். பட்டினிப் போராட்டத்தில் வழக்கறிஞர் முருகேசன், ரகுபதி, கவிஞர் புவியரசு உட்பட பல்வேறு அமைப்பினர் உரையாற்றினர்.
ஆகஸ்ட் 30 அன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி பெரியநாயக்கன்பாளையத்தில் மாலெ கட்சி மனித சங்கிலி போராட்டம் நடத்தியது. மனித சங்கிலி போராட்டத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி தலைமை தாங்கினார். எல்எம்டபுள்யு சந்திரன் மற்றும் மாலெ கட்சி, ஏஅய்சிசிடியு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
வேலை நீக்கம் செய்யக் கூடாது என்ற தொழிலாளர் இணை ஆணையாளரின் அறிவுரையையும் மீறி நிர்வாகம் வேலை நீக்கம் செய்ததைக் கண்டித்து அய்டிபிஎல் தொழிலாளர்கள் 56 பேர் அய்டிபிஎல் நிறுவன வாயிலில் ஆகஸ்ட் 31 அன்று கண்டனக் கூட்டம் நடத்தினர். கண்டனக் கூட்டத்திற்கு விவேகானந்த குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தோழர் எஸ்.குமாரசாமி, ஆர்.தாமோதரன், பாலசுப்பிரமணியம், எல்எம்டபுள்யு சந்திரன் கலந்துகொண்டனர்.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்தப் பகுதியில், தொழிலாளர் வர்க்கம் மக்கள் போராட்டத்தின் மய்யமாக இருந்தது.
- என்.கே

களம்

போராட்டங்கள் நிறைந்த ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம் முழுவதும் மாலெ கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புக்களும் ஊழல் எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பு இயக்கத்தை ஒட்டி பல்வேறு எதிர்ப்பு நிகழ்ச்சிகளைக் கட்டமைத்தன.

ஆகஸ்ட் 9, சிறை நிரப்பும் போராட்டம்

பிரச்சாரத்துக்காக ஏஅய்சிசிடியு 30,000 மய்யப் பிரசுரம் வெளியிட்டது.
திருப்பூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்ட நடைபயணம் நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் தாமோதரன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர்.
சென்னை: 30,000 துண்டறிக்கைகள் 400 சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. ஜுலை 20 முதல் ஆகஸ்ட் 7 வரை, பூந்தமல்லி, திருவெற்றியூர், சென்னை, அம்பத்தூர், மதுரவாயல், ஆவடி, திருபெரும்புதூர் பகுதிகளில், 425 தொழிலாளர்கள் கலந்து கொண்ட, 30 நடைபயணங்கள் நடத்தப்பட்டு, சுமார் ஒரு லட்சம் மக்களை இயக்கம் சென்றடைந்துள்ளது.
சென்னையில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.சேகர் தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. கட்சி மாநில கமிட்டி உறுப்பினர்கள் எ.எஸ்.குமார், ஜி.ராதாகிருஷ்ணன், ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் புவனேஸ்வரி, எஸ்.ஜவகர், என்.குமரேஷ், கே.பழனிவேல் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
நெல்லை: இரண்டு மய்யங்களில் மறியல் போர் நடைபெற்றது. ஆலங்குளத்தில் தோழர்கள் சங்கரபாண்டியன், கணேசன் தலைமையிலும், நெல்லை நகரத்தில் தோழர்கள் தேன்மொழி, ரமேஷ் தலைமையிலும் நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 152 பேர் கைதாகினர். பீடி சுற்றும் பெண்களும், பீடி லேபிள் தொழிலாளர்களும் பெரும் எண்ணிக்கையில் பங்கு கொண்டனர்.
நாமக்கல்: குமாரபாளையத்தில் ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சுப்பிரமணி தலைமையிலும், பள்ளிபாளையத்தில் ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கோவிந்தராஜ் தலைமையிலும் 10 பெண்கள் உட்பட 75 பேர் கைதாகினர்.
காஞ்சிபுரம்: வண்டலுôரில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் இரணியப்பன் தலைமையில் 9 பெண்கள் உட்பட 82 பேர் கைதாகினர்.
குமரி: ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் அந்தோணிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மேரி ஸ்டெல்லா தலைமையில் 61 பெண்கள் உட்பட 108 பேர் கைதாகினர்.
தஞ்சை: 300 பேர் வரை கலந்துகொண்ட சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அவிதொச மாநிலத் தலைவர் தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கலந்துகொண்டார்.
சேலம்: ஏஅய்சிசிடியு மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கே.நடராஜன் தலைமையில் 40 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், தோழர் அய்யந்துரை உரையாற்றினர்.
நாகை: சீர்காழியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டார்.
திருச்சி: சிறை நிரப்பும் போராட்டத்தை ஒட்டி ஆகஸ்ட் 5 அன்று 35 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் தோழர் முனியசாமி தலைமையில் நடை பெற்றது. கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தேசிகன் உரையாற்றினார்.
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பிரச்சாரமும் நடத்தப்பட்டன.

அறிவிக்கப்படாத அவசரநிலைக்கு எதிராக

வலுவான லோக்பால் சட்டம் கோரியும் அய்முகூ அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத அவசரநிலையைக் கண்டித்தும் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை மாலெ கட்சி ஆர்ப்பாட் டங்கள் நடத்தியது.
ஆகஸ்ட் 16 அன்று சென்னையில் ஆலை வாயில்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இவற்றில் 500 பேர் வரை கலந்துகொண்டனர்.
ஆகஸ்ட் 18 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினார்.
ஆகஸ்ட் 18 அன்று கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அம்மையப்பன், இளைஞர் கழக மாவட்டப் பொறுப்பாளர் தோழர் தனவேல் உரையாற்றினர்.
ஆகஸ்ட் 17 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் வெங்கடே சன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் போராட்டத்தில் பங்கேற்றார். மன்மோகன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டு பின் மாலை விடுவிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 18 அன்று கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன் பங்கேற்று பேசினார்.
ஆகஸ்ட 19 அன்று நாகை மாவட்டம் சீர்காழி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன் பங்கேற்று பேசினார்.
ஆகஸ்ட் 20 அன்று திருநெல்வேலி டவுனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார், மாநில கமிட்டி உறுப்பினர் டி.சங்கரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

மூவர் தூக்குக்கு எதிராக

விழுப்புரத்தில் ஆகஸ்ட் 25 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டப் பொறுப்பாளர் தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.
சென்னையில் டிஅய்டிசி ஆலை வாயிலில் ஆகஸ்ட் 27 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. நிகழ்ச்சியில் ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் க.பழனிவேல். கட்சியின் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர் மோகன், பசுபதி, ஜீவானந்தம் பங்கேற்றனர்.
ஈரோட்டில் 26.08.2011 அன்றும் குமாரபாளையத் தில் 31.08.2011 அன்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த மனித சங்கிலி ஆர்பாட்டங்களில் நமது தோழர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் ஆகஸ்ட் 30 அன்று அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தின. கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் சொ.இரணியப்பன் உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் ஏ.கோபால் மாணவர் கழக மாநிலச் செயலர் தோழர் கோபாலகிருஷ்ணன், புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட தலைவர் பாலாஜி பங்கேற்று உûயாற்றினர்.
குமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 30 அன்று மூன்று இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் அந்தோணிமுத்து, மேரி ஸ்டெல்லா, சுசீலா, ஆன்றோ லெனின் பங்கேற்று பேசினார்கள்.
ஆகஸ்ட் 30 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கமிட்டி உறுப்பினர் ஆசைத்தம்பி, கட்சியின் மாவட்ட தலைவர்கள், வளத்தான் ராஜங்கம், மூக்ககையன், முருகேசன் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.
கோரிக்கை மீது சுவரொட்டி இயக்கமும் தொலைநகல் அனுப்பும் இயக்கமும் நடத்தப்பட்டன.

விவசாயத் தொழிலாளர் மத்தியில்

ஆகஸ்ட் 30 அன்று திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா தாராட்சி ஊராட்சியில் அவிதொச ஊராட்சி மட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், சிறப்புரையாற்றினர். அவிதொச கிளை தலைவர் தோழர் சுந்தரம் தலைமையேற்றார். தோழர் டில்லிபாபு முன்னிலை வகித்தார். புரட்சிகர இளைஞர் கழக தலைவர் தோழர் அன்பு, ஏஅய்சிசிடியு மாவட்ட பொறுப்பாளர் தோழர் ஜெயராஜ் உரையாற்றினர்.
தீப்பொறி இதழில் வெளியான தஞ்சை, நரிக்குடி ஊராட்சியில் ரூ.119 சட்டக்கூலி கேட்டு நடந்த அவிதொச போராட்ட செய்தியின் நகல் அக்கம் பக்க ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்பட்டது. விளைவாக புத்தூர் ஊராட்சியில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. 25 பேருக்கும் மேல் வன்னியர்கள் கலந்து கொண்டனர். தோழர் குருசாமி தலைமையில் கிராமக் கூட்டம் நடைபெற்றது.
நாகை, காவேரிப்பட்டினம் ஊராட்சியில் தோழர் சுப்பிரமணியன் தீப்பொறி செய்தியை நகல் எடுத்து விநியோகம் செய்ததன் விளைவாக ஊராட்சி மன்ற நிர்வாகம் ரூ.80ல் இருந்து ரூ.85 ஆக கூலியை உயர்த்தியுள்ளது.
கடலூரில் கார்குடல் ஊராட்சியில் தீப்பொறி செய்தி நகல் விநியோகம் செய்யப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் 80 பெண்கள் உட்பட 120க்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சி மன்றம் முன் சட்டக்கூலி ரூ.119 கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மதுரை கூச்சம்பட்டி ஊராட்சியில் 300 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கட்டுமான தொழிலாளர் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1000, இலவச பஸ்பாஸ் வழங்கிட கோரியும், கட்டுமான நலநிதி 1% பிடித்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் ஜனநாயகக் கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆகஸ்ட் 30 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 45 பெண்கள் உட்பட 120 பேர் பங்கேற்றனர். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் கோவி.முனுசாமி தலைமை தாங்கினார். மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் சிறப்புரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் எஸ்.சேகர், அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநில தலைவர் கே.பாரதி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.குப்பாபாய், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் எஸ்.ராஜா, திருவள்ளூர் மாவட்ட உழைப்போர் உரிமை இயக்க பொறுப்பாளர் திருநாவுக்கரசு, உழைப்போர் உரிமை இயக்க சென்னை மாவட்ட தலைவர்கள் ஆர்.மோகன், பொன்ராஜ், கட்டுமான தொழிலாளர் சங்க திருவள்ளூர் பொறுப்பாளர் ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இக்கோரிக்கை மீது காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் தோழர் இரணியப்பன் உரையாற்றினார். 80 பேர் பங்கேற்றனர்.
குமரியில் அடாத மழையிலும் 13 இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் சுமார் 300 பேர் பங்கேற்றனர். தோழர்கள் அந்தோணிமுத்து, மேரி ஸ்டெல்லா, சுசீலா, ஆன்றோ லெனின் உரையாற்றினர்.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயலாளர் தோழர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் தோழர் முருகய்யன் முன்னிலை வகித்தார். கட்சி மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம், ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கே.ஜி.தேசிகன் சிறப்புரையாற்றினார்கள். 100 பேர் பங்கேற்றனர்.
சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தோழர் கே.நடராஜன் கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் அ.சந்திரமோகன், மாவட்ட செயலாளர் தோழர் மோகனசுந்தரம், ஏஅய்சிசிடியு மாநில செயலர் தோழர் அய்யந்துறை, மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் குமரேசன் வேல்முருகன் உரையாற்றினர். 80 பெண்கள் உட்பட 180 பேர் பங்கேற்றனர்.

விவசாயத் தொழிலாளர் மத்தியில்

கரூரில் ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போராட்டத் தயாரிப்புகளினூடே வேலை உறுதித் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன.
பிச்சம்பட்டி ஊராட்சியில் ஆகஸ்டு 5 அன்று நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை வேலையிடத்தில் துண்டு பிரசுரங்களுடன் தோழர்கள் சந்தித்தனர்.
7 மணி வேலை நேரம் 9 மணி நேரமாக அதிகரிப்பு, உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படாதது, வேலைக்கு வரும்போது ஒவ்வொருவரும் காரைச்சட்டி, கடப்பாறை, கொந்தாளம், மண்வெட்டி என 4 கருவிகளுடன்தான் வர வேண்டும் என்ற கெடுபிடி போன்ற பிரச்சனைகளால், தொழிலாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். அன்றே மாவட்ட ஆட்சியருக்கு தொலைநகல் அனுப்ப, அதிகாரிகளை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆகஸ்டு 6 அன்று 9 மணிநேரம் வேலை செய்ய தொழிலாளர்கள் மறுத்தனர். தொழிலாளர்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து பத்திரிகை செய்தி தரப்பட்டது.
ஆர்ப்பாட்ட நாளன்று ஆர்ப்பாட்டத்துக்கு வரவிருந்த மக்கள் நூறு நாள் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். நூறு நாள் வேலைக்கு அனைவரும் சென்று கொண்டிருப்பதாகவும் மக்கள் நலப்பணியாளர் வேலை செய்ய அளந்து போட்டு விட்டதாகவும் செய்தி பரப்பிக் கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் பற்றி முன்கூட்டியே தகவல் தரமுடியாமல் போன ஒரு கிராம மக்கள் வேலைக்குச் செல்வதை அறிந்த தோழர்கள் அவர்களிடம் பேசி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தனர். அன்று நூறு நாள் வேலைக்கு யாரும் செல்லவில்லை. கிராமப்புறத்தில் இருந்து 85 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தாழப்பட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மொத்தம் 110 தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உழைப்போர் உரிமை இயக்க மாவட்ட தலைவர் தோழர் நா.சந்திரசேகரன், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் தேசிகன் ஆகியோர் உரையாற்றினர்.
தொழிலாளர்கள் சிலருடன், தோழர்கள் தேசிகன், மு.இராமச்சந்திரன், நா.சந்திரசேகரன் தலைமையில் திட்ட அலுவலரை சந்தித்து பேசினர். வேலை நேரத்தை 7 மணி நேரத்திற்கு மேல் அதிகரிக்க கூடாது என மக்கள் கோரிய போது, 2008லேயே 9 மணி வேலை நேரத்திற்கான அரசாணை வந்துவிட்டது என்றும், தற்போது நடைமுறைப்படுத்துகிறோம் என்றும் கூறி அரசாணை நகலை கொடுத்தார்.
ஆகஸ்ட் 9 ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு இங்கு கூலி முறையாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் 4 கருவிகள் அல்லாமல் ஒன்று மட்டும் கொண்டு வந்தால் போதுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விசைத்தறி தொழிலாளர் நெடும்பயணம்

விசைத்தறிக் கூடங்களை தொழிற்சாலைகள் என அறிவித்திடு!

சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறிக் கூடங்களை தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகள் என அறிவித்து தொழிற்சாலை சட்டப்படியான சலுகைகளை விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கிட தமிழக அரசிடம் கோரிக்கைகள் முன்வைத்து, கையெழுத்தியக்கமும், இரு வார கால நடைபயணமும் செப்டம்பர் 1 அன்று காலை ஈரோட்டில் வீரப்பச்சத்திரத்தில் துவங்கியது. நெடும்பயணத்தை கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி. மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் என்.கே நடராஜன், நாமக்கல் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ், நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் தோழர் கே.கோவிந்தராஜ், தமிழக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் விஜயகுமார் வாழ்த்துரையாற்றினர். பிரிக்கால் தொழிலாளர் சங்கங்களின் முன்னணி தலைவர்கள், விசைத்தறி தொழிலாளர் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.ஆர்.குமாரசாமி ஆகியோர் பங்கேற்றனர். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் தேசிகன் பள்ளிபாளையத்தில் நெடும்பயணத்தில் கலந்து கொண்டார்.


Search